மேலும் அறிய

Fact Check: பிரதமர் மோடியின் திருமண புகைப்படம் - இணையத்தில் பரவுவது உண்மையா?

Fact Check: பிரதமர் மோடியின் திருமணத்தின் போது எடுக்கப்பட்டதாக, புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.

Fact Check: பிரதமர் மோடியின் திருமணத்தின் போது எடுக்கப்பட்டதாக பரவும், புகைப்படத்தின் உண்மைத்தன்மை தொடர்பாக கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் திருமண புகைப்படம்?

“திருமணத்தை மறைத்த திருடனின் திருமண புகைப்படம்.. நல்லாருந்த பல கோடி இந்திய மக்களை ஏழையாக்கிய திருடன்”  என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. இந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ள பலர், ”தேர்தல் பிரமாண பத்திரத்தில் தன் திருமணத்தயே மறைத்தவன் மோடி, நீ எதுக்காக திருமணத்தை மறச்ச? உனக்கு பொண்ணு பிடிக்காதா? ஒஹோ அவனா நீ?” போன்ற வாசகங்களை குறிப்பிட்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  இதையடுத்து புகைப்படத்தின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய, இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்யப்பட்டது.


Fact Check: பிரதமர் மோடியின் திருமண புகைப்படம் - இணையத்தில் பரவுவது உண்மையா?

       இணையத்தில் வைரலாகும் தவறான புகைப்படம்

புகைப்படத்தின் உண்மைத்தன்மை என்ன?

பிரதமர் மோடியின் திருமணத்தின் போது எடுக்கப்பட்டது என்று வைரலான புகைப்படத்தை,  ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி தேடினோம். இத்தேடலில் ஏபிவிபியின் தேசியச் செயலாளர் ஆஷிஷ் சௌகான் வைரலாகும் படம் மோடியின் திருமணப் படமல்ல என தெளிவுப்படுத்தி பதிவு ஒன்றை பதிவிட்டிருந்ததை காண முடிந்தது. வைரலாகும் படத்தில் மோடியின் அருகிலிப்பவர் குஜராத்தின் முன்னாள் அமைச்சர் ஹேமந்த் சப்பத்வாலாவின் மகள் என்று அவர் விளக்கமளித்துள்ளார். தொடர்ந்து தேடுகையில் குஜராத் ஒபிசி அணியின் முன்னாள் தலைவரும், ஹேமந்த் சப்பத்வாலாவின் மகனுமான கேயூர் வைரலாகும் படம் 1994 ஆம் ஆண்டில் தனது சகோதரி ஆல்பாவின் திருமணத்தின்போது எடுக்கப்பட்டது என்று தெளிவுப்படுத்தி அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.


Fact Check: பிரதமர் மோடியின் திருமண புகைப்படம் - இணையத்தில் பரவுவது உண்மையா?

                    இணையத்தில் வைரலாகும் புகைப்படம் தொடர்பான விளக்கம்

தீர்ப்பு: 

பிரதமர் மோடியின் திருமண படம் என்று வைரலாகும் படம் உண்மையில் குஜராத் முன்னாள் அமைச்சர் ஹேமந்த் சப்பத்வாலாவின் மகளின் திருமணத்தில் எடுக்கப்பட்டதாகும். இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே பொதுமக்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ALSO READ: பிரதமர் மோடியின் திருமண படமா இது?

பின்குறிப்பு: இந்த செய்தி தொகுப்பு முதலில் சக்தி கலெக்டிவ் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக Newschecker என்ற இணைய செய்தி தளத்தில் வெளியிடப்பட்டது. அதன் சாராம்சத்தை அப்படியே பின்பற்றி, ABP Nadu தனது வாசகர்களுக்கு ஏற்ப இந்த செய்தி தொகுப்பை சற்றே திருத்தி எழுதியுள்ளது.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

புதிய வடிவத்தில் 1,000 ரூபாய் நோட்டுகள் வெளியீடு? மத்திய அரசு விளக்கம்...
புதிய வடிவத்தில் 1,000 ரூபாய் நோட்டுகள் வெளியீடு? மத்திய அரசு விளக்கம்...
மீசையுடன் பிறந்த குழந்தை..இணையத்தில் வைரலாகும் வீடியோ நிஜமா? போலியா?
மீசையுடன் பிறந்த குழந்தை..இணையத்தில் வைரலாகும் வீடியோ நிஜமா? போலியா?
நாவல் பழம் சாப்பிட்ட சிறுவன் உயிரிழப்பு: பாம்பு நஞ்சு கக்கியதாக பரவும் செய்தி உண்மையா? மருத்துவரின் அறிவியல் பூர்வ விளக்கம்..
நாவல் பழம் சாப்பிட்ட சிறுவன் உயிரிழப்பு: பாம்பு நஞ்சு கக்கியதாக பரவும் செய்தி உண்மையா? மருத்துவரின் அறிவியல் பூர்வ விளக்கம்..
TN TRB 2025: ஊழல் முறைகேடுகளை நிகழ்த்த சூழ்ச்சியா? பட்டதாரி ஆசிரியர் தேர்வில் அவசரம் ஏன்? சீமான் கேள்வி!
TN TRB 2025: ஊழல் முறைகேடுகளை நிகழ்த்த சூழ்ச்சியா? பட்டதாரி ஆசிரியர் தேர்வில் அவசரம் ஏன்? சீமான் கேள்வி!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’பாஜக அமைச்சரவையில் இணையும் திமுக?’ இரண்டு மத்திய அமைச்சர்களை பெற பேச்சுவார்த்தை !
’சிகப்பு கம்பளம் விரித்த பாஜக’ மத்திய அமைச்சரவையில் இணைகிறதா திமுக?
Diwali 2026 Holiday: ஹையா.. ஜாலி! தீபாவளிக்கு அடுத்த நாளும் லீவு! தவெக அரசு அதிரடி அறிவிப்பு
Diwali 2026 Holiday: ஹையா.. ஜாலி! தீபாவளிக்கு அடுத்த நாளும் லீவு! தவெக அரசு அதிரடி அறிவிப்பு
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - தீபாவளி நேரத்தில் அதிரடி அறிவிப்பு
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - தீபாவளி நேரத்தில் அதிரடி அறிவிப்பு
Holiday: தீபாவளி மறுநாள் விடுமுறை? எதிர்பார்ப்பில் பள்ளி மாணவர்கள், அரசு ஊழியர்கள்! அரசின் முடிவு என்ன?
Holiday: தீபாவளி மறுநாள் விடுமுறை? எதிர்பார்ப்பில் பள்ளி மாணவர்கள், அரசு ஊழியர்கள்! அரசின் முடிவு என்ன?
விவசாயிகள் கவனத்திற்கு: குறைந்த கட்டணத்தில் நெற்பயிர் காப்பீடு செய்வது எப்படி?
விவசாயிகள் கவனத்திற்கு: குறைந்த கட்டணத்தில் நெற்பயிர் காப்பீடு செய்வது எப்படி?
Jio IPO: அடித்து தூக்கிய ஜியோ..! நாட்டின் மதிப்புமிக்க இரண்டாவது நிறுவனமாகி அதிரடி - ரூ.12.5 லட்சம் கோடி
அடித்து தூக்கிய ஜியோ..! நாட்டின் மதிப்புமிக்க இரண்டாவது நிறுவனமாகி அதிரடி - ரூ.12.5 லட்சம் கோடி
Chennai Power Cut: சென்னையில் நாளை (29-10-2026) எந்தெந்த பகுதிகளில் பவர் கட்? எத்தனை மணிநேரம்?
Chennai Power Cut: சென்னையில் நாளை (29-10-2026) எந்தெந்த பகுதிகளில் பவர் கட்? எத்தனை மணிநேரம்?
DMK: கரூரிலேயே விஜய்யை முடித்திருந்தால்.. வாயை விட்ட டீட்டா சரவணன்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்
DMK: கரூரிலேயே விஜய்யை முடித்திருந்தால்.. வாயை விட்ட டீட்டா சரவணன்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்
Embed widget