மேலும் அறிய

Fact Check: பதிவுத்துறை சேவை கட்டணத்தை உயர்த்தியதா திமுக அரசு? தீயாய் பரவும் செய்தி உண்மையா?

பதிவுத்துறை சேவை கட்டணத்தை திமுக அரசு உயர்த்தியதாக செய்தி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அது உண்மையா? இல்லையா? என்பது குறித்து தெரிந்து கொள்வோம்

பதிவுத்துறையில் சேவைக் கட்டணங்கள் உயர்வு" என்ற தலைப்பில் Way2news வெளியிட்டிருந்த செய்தி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில், தமிழக பதிவுத்துறையில் பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்கள் உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

வைரலாகும் செய்தி:

இது தொடர்பாக வெளியான அரசிதழில், ரசீது ஆவணத்திற்கு ₹20லிருந்து ₹200, தனிமனைக்கான கட்டணம் ₹200லிருந்து ₹1000, பிரமாணப் பத்திரப் பதிவு, ஒப்பந்தம் பதிவு கட்டணம் ₹20லிருந்து ₹2000, செட்டில்மெண்ட், பாகம், விடுதலை ஆவணங்களுக்கு ₹4,000லிருந்து ₹10,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது. இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இது உண்மை தானா பதிவுத்துறையில் சேவைக் கட்டணங்கள் சமீபத்தில் உயர்த்தப்பட்டனவா என்று கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, "ஜூலை 10 முதல் பதிவுத்துறை சேவைக் கட்டணம் உயர்வு: எவ்வளவு?" என்ற தலைப்பில் 2023ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி தினமணி செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது.

அதில், "பதிவுத்துறையால் அளிக்கப்படும் பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்களில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மாற்றம் செய்யப்படவில்லை. எனவே, பதிவுத் துறையால் வழங்கப்பட்டு வரும் ஆவணப் பதிவு, பதிவு செய்யப்படும் ஆவணங்களைப் பாதுகாத்தல், மின்னணு சாதனத்தில் இருந்து ஆவண நகல்கள் வழங்குதல் போன்ற சேவைகளைப் பொருத்து கட்டண விகிதங்களை மாற்றியமைக்க தமிழக அரசு முடிவு செய்தது.

நாளை(ஜூலை 10, 2023) முதல் புதிய கட்டணம் அமலுக்கு வருகிறது. தமிழ்நாடு அரசின் முடிவின்படி, ரசீது ஆவணத்துக்கான பதிவுக் கட்டணம் ரூ.20ல் இருந்து ரூ.200ஆகவும், குடும்ப நபர்களுக்கு இடையிலான செட்டில்மென்ட், பாகம் மற்றும் விடுதலை ஆவணங்களுக்கு அதிகபட்ச பதிவுக் கட்டணம் ரூ.4,000ல் இருந்து ரூ.10,000ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச முத்திரைத் தீர்வு ரூ.25,000ல் இருந்து ரூ.40,000ஆகவும், தனி மனை பதிவுக்கான கட்டணம் ரூ.200ல் இருந்து ரூ. 1,000ஆகவும் உயர்த்தப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது.

உண்மை என்ன?

இதே செய்தியை மாலைமலர் ஊடகமும் 2023ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி வெளியிட்டுள்ளது. தொடர்ந்து, தேடுகையில் சமீபத்தில் தமிழ்நாடு அரசு பத்திரப்பதிவுக்கான சேவைக் கட்டணத்தை உயர்த்தியதாக எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை. மாறாக, ஒப்பந்தம், பொது அதிகாரம் உள்ளிட்டவற்றுக்கான முத்திரைக் கட்டணத்தை தமிழ்நாடு பதிவுத்துறை உயர்த்தியுள்ளது என்று நேற்று (மே 8) இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது.

நம் தேடலின் முடிவாக தமிழ்நாடு பதிவுத்துறை முத்திரைக் கட்டணத்தை உயர்த்தியுள்ளதே தவிற பதிவுத்துறையின் சேவைக் கட்டணத்தை உயர்த்தவில்லை. 2023ஆம் ஆண்டு உயர்த்தப்பட்ட சேவைக் கட்டணம் தொடர்பான செய்தி தற்போது தவறாக பரவி வருகிறது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

பின்குறிப்பு: இந்த செய்தி தொகுப்பு முதலில் சக்தி கலெக்டிவ் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக NEWSMETER என்ற இணைய செய்தி தளத்தில் வெளியிடப்பட்டது. அதன் சாராம்சத்தை அப்படியே பின்பற்றி, ABP Nadu தனது வாசகர்களுக்கு ஏற்ப இந்த செய்தி தொகுப்பை வெளியிட்டுள்ளது.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

TN Weather News: சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Embed widget