Veera: வள்ளிக்கு காத்திருக்கும் ஷாக் - வீரா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்!
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீரியல் வீரா
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீரியல் வீரா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் எல்லாருக்கும் பிரியாணியை பரிமாற தாத்தா பிரியாணி சூப்பர் என்று சொல்லிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது வள்ளி பிரியாணி சூப்பர் என்று சொன்னதும் ஷாக்காக பிளாஷ்கட்டில் மாறன் வீராவை கூப்பிட்டு பிரியாணியை டேஸ்ட் பண்ண சொல்ல சாப்பிட்டு பார்த்த அவளுக்கு உப்பாக தெரிய உடனே மாறன் பிரியாணியை சரி செய்தான் என்பது தெரிய வருகிறது. அதன் பிறகு தாத்தா வீராவை கூப்பிட்டு பிரியாணியை யார் சமைத்தது? உண்மையை சொல்லுங்க மாறன் சமைத்த மாதிரியே இருக்கு என்று கேட்கிறார்.
ஏன் உங்களால் ஒரு சமையல் காரனை வச்சி கூட சமைக்க முடியாதா என்று கேள்வி கேட்க மாறன் நான் தான் அவங்க கிட்ட கெஞ்சி கேட்டு உங்களுக்காக என் கையால் சமைத்தேன் என்று சொல்லி சமாளிக்க தாத்தா பிரியாணி சூப்பர் டா என்று பாராட்டுகிறார். அடுத்து வெற்றிலை போட கண்மணியிடம் வெற்றிலை போட்டாயா என்று கேட்க அவள் போட்டுட்டேன் என்று சொல்கிறாள்.
உன் நாக்கை வச்சி உன் புருஷன் மேல எவ்வளவு பாசம் இருக்குனு தெரிஞ்சிக்கலாம் நாக்கை காட்டு என்று சொல்ல கண்மணியும் நாக்கை காட்ட நாக்கு நல்லா தான் சிவந்திருக்கு, புருஷன் மேல பாசமாக தான் இருக்க போல என்று சொல்கிறார். அடுத்து பாட்டு பாட தெரியுமா என்று கேட்க கண்மணி எனக்கு பாட வராது என்று சொல்கிறாள். அதன் பிறகு மாறன் நல்லா பாடுவான் என்று கோத்து விட மாறன் தனது அம்மாவை நினைத்து பாட்டு பாடி அனைவரையும் உருக வைக்கிறான்.
பிறகு தாத்தா வள்ளியை கூப்பிட்டு ஏழ்மையான குடும்பமா இருந்தாலும் எல்லாருக்கும் நல்ல மனசு இருக்கு அது போதும், நீ அமைதியா இருக்கு அட்வைஸ் செய்ய வள்ளி ஷாக் ஆகிறாள். பிறகு தாத்தா அங்கிருந்து கிளம்ப காரில் ஏற கஷ்டப்பட வீரா ஓடி வந்து காலை தூக்கி காருக்குள் வைக்க அவர் வீராவுக்கு தனது துண்டை பரிசாக கொடுத்து ஆசிர்வாதம் செய்கிறார். வீரா உள்ளே சென்றதும் ராமச்சந்திரனை கூப்பிட்டு தேடி கண்டுபிடிச்சி இருந்தாலும் இப்படி ஒரு குடும்பம் கிடைச்சி இருக்காது. அதுவும் அந்த வீரா எல்லாத்தையும் பார்த்து பார்த்து பண்றா.. உனக்கு தான் இன்னும் ரெண்டு பசங்க இருக்காங்களே அவளையும் உன் வீட்டு மருமகளாக்கிடு என்று சொல்லி கிளம்புகிறார்.
இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய வீரா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.