Karthigai Deepam: காணாமல் போன தீபா.. கார்த்திக்கு காத்திருக்கும் அதிர்ச்சி..கார்த்திகை தீபம் சீரியலில் இன்று..!
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.இந்த சீரியலின் முந்தைய எபிசோடில் கார்த்திக் ஐஸ்வர்யாவிடம் நீங்கள் தான் முருகன் சிலையை வீட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என செக்மேட் வைத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது இன்றைய எபிசோடில் தீபா கார்த்தியுடன் சிக்கிக்கொண்டு நம்ம கையாலயே சிலையை வீட்டுக்குள்ள கொண்டு போற மாதிரி ஆகிவிட்டது என புலம்பி தவிக்கிறார். இந்த சிலையை வீட்டுக்குள்ள கொண்டு வரக்கூடாதுன்னு சொன்னது நான்தான் என தவிக்கிறாள்.
இதை தவிப்புடன் என்னுடைய அம்மாவுக்கு போன் போட்டு ஐடியா கொடுக்க அவர் ஒரு ஐடியா சொல்ல ஐஸ்வர்யாவும் அப்படியே செய்வதாக போனை வைத்து விடுகிறாள். மறுபக்கம் கார்த்தி தீபாவை பார்க்க போக வீடு முழுவதும் தீபாவை காணாத நிலையில் ஒருவேளை வீட்டிற்கு சென்று இருக்கலாம் என மைதிலிக்கு போன் போட்டு விசாரிக்கிறான்.மைதிலி தீபா இங்கே வரவில்லை என்று சொல்லி என்ன நடந்துச்சு என டென்ஷன் ஆகிறாள்.
View this post on Instagram
ஒருவேளை தீபா கோவிலுக்கு சென்று இருக்கலாம் என்று சொல்லி சமாளிக்கும் கார்த்திக் ஃபோனை வைத்து கோவிலுக்கு சென்று தேடுகிறான். அங்கே பூசாரியிடம் விசாரிக்க அவர் தீபா வரவில்லை என கூறுகிறார்.மீனாட்சியும் அங்கு பதற்றத்துடன் வந்துவிட கார்த்திக் நிச்சயம் கண்டுபிடித்து விடலாம் என ஆறுதல் கூறுகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்