Karthigai Deepam: பரிவட்டம் யாருக்கு? சாமுண்டீஸ்வரியின் கெளவரத்தை காப்பாற்றப்போவது யார்? கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கார்த்திகை தீபம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது? சாமுண்டீஸ்வரியின் கெளரவத்தை காப்பாற்றப்போவது யார்? என்பதை கீழே காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் சனிக்கிழமை எபிசோடில் சந்திரகலா, சாமுண்டீஸ்வரியிடம், "கார்த்திக் தான் நகையை திருடி உன்னை ஜெயிலுக்கு அனுப்பி உன்னை காப்பாற்றுவது போல காப்பாற்றி இருக்கணும். அவனை நம்பாதே என ஏற்றி விட, ரேவதி உங்களுக்கு சந்தேகம் இருந்தா சிசிடிவி காட்சிகளை பாருங்கள்?" என்று சொல்லி விடுகிறாள்.
பரிவட்டம் யாருக்கு?
அதன் பிறகு சாமுண்டீஸ்வரி சிசிடிவி காட்சிகளை பார்க்க கார்த்திக் மற்றும் ரேவதி என இருவரும் ஏதோ பேசிக்கொள்வது தெரிய வருகிறது. இதனைத் தொடர்ந்து "பரிவட்டம் யாருக்கு?" என்ற பேச்சு எழ சிலம்பாட்டம் போட்டியில் ஜெயிக்கும் தரப்பினருக்கு பரிவட்டம் என முடிவு செய்யப்படுகிறது.
காப்பாற்றுவாரா கார்த்திக்?
இதைத்தொடர்ந்து காளியம்மா சிலம்பாட்டத்தில் ஒருவனை களமிறக்க, மறுப்பக்கம் சாமுண்டீஸ்வரி தனது தரப்பிலிருந்து ஒருவனை போட்டிக்கு அனுப்புகிறாள். எதிர்பாராத விதமாக சாமுண்டீஸ்வரி தரப்பில் தோல்வியை தழுவும் நிலையில் இருக்க கார்த்திக் களத்தில் இறங்கி சிலம்பாட்ட போட்டியில் கலந்து கொண்டு சாமுண்டீஸ்வரியின் கௌரவத்தை எப்படி காப்பாற்றுகிறான்?
இறுதியில் பரிவட்டம் யாருக்கு என பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாக உள்ளது. எனவே கார்த்திகை தீபம் இரண்டு மணி நேர சண்டே ஸ்பெஷல் எபிசோடை வரும் ஞாயிறு மதியம் 2:30 மணிக்கு உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள்.




















