Karthigai Deepam: சாமுண்டீஸ்வரிக்கே விபூதி அடித்த பரேமஸ்வரி! கார்த்திக்கை வீடியோ எடுக்கும் சந்திரகலா!
Karthigai Deepam Serial: கார்த்திகை தீபம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே விரிவாக காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பாகும் சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியல் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பரமேஸ்வரி பாட்டி மாறுவேடத்தில் பேரப்பிள்ளைகளை பார்க்க வந்திருந்த நிலையில் இன்று நடக்க போவது? என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
சாமியார் வேடத்தில் பாட்டி:
அதாவது, கார்த்திக் சாமியார் வேடத்தில் இருக்கும் பாட்டியை வீட்டிற்குள் அழைத்து வருகிறான், இவங்க காசிக்கு போயிட்டு வந்திருக்க பெரிய சாமியார். நம்மளை ஆசிர்வாதம் செய்ய வந்திருக்காங்க என்று சொல்கிறான்.
வீட்டில் உள்ள பெண்கள் நாலு பேரும் ஆசிர்வாதம் வாங்க பாட்டி பணத்தை எடுத்து கொடுக்க குழப்பம் அடைகின்றனர், பணம் எதற்கு என்று கேட்க? என்கிட்ட ஆசிர்வாதம் வாங்கினால் கொடுப்பேன், அது என்னுடைய பழக்கம் என்று சொல்ல நான்கு பேரும் பெரியவங்க சொல்றீங்க அதனால் வாங்கிக்கறோம் என்று வாங்கி கொள்கின்றனர்.
சாமுண்டீஸ்வரிக்கு விபூதி:
சந்திரகலா ஆசீர்வாதம் வாங்க மறுக்கிறாள். சாமுண்டீஸ்வரி போனில் பேசி கொண்டிருக்க மயில் வாகனம் என்னையும் ஆசிர்வாதம் செய்யுங்க என்று ஆசிர்வாதம் வாங்குகிறான். இதை தொடர்ந்து, சாமுண்டீஸ்வரி இது யார் என்று கேட்க பரமேஸ்வரி பாட்டி திரும்பி கொள்கிறார்.
கார்த்திக் இவங்க பெரிய சாமியார் என்று சொல்ல சாமுண்டீஸ்வரி நானும் ஆசிர்வாதம் வாங்கிக்கறேன் என்று காலில் விழுந்து எழுந்து முகத்தை பார்ப்பதற்குள், பாட்டி விபூதியை தூவி விட்டு அங்கிருந்து கிளம்பி விடுகிறார்.
சிவனாண்டிக்கு வீடியோ:
கார்த்திக் வெளியே வர பரமேஸ்வரி பாட்டி பேரப்பிள்ளைகளை பார்த்துட்டேன், ரொம்ப சந்தோசம் என்று சொல்ல கார்த்திக், என்னை எல்லாம் ஆசிர்வாதம் பண்ண மாட்டியா பாட்டி? என்று ஆசிர்வாதம் வாங்க, சந்திரகலா இது எதோ தப்பா இருக்கே என்று வீடியோ எடுத்து அதை சிவனாண்டிக்கு அனுப்பி வைக்கிறாள்.
மறுபக்கம் மாயா மகேஷ் ரேவதியை கல்யாணம் பண்ணிக்கணும்னு கணக்கு போட்டா, இந்த ட்ரைவர் முந்திடுவான் போலயே.. இவனை ஏதாவது பண்ணனும் என்று யோசித்து திட்டம் ஒன்றை தீட்டுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

