மேலும் அறிய

Kizhakku Vaasal: 'அவ பொண்ணு இல்ல.. இந்த வீட்டோட சாமி' ... விரைவில் கிழக்கு வாசல் சீரியல்.. வெளியானது ப்ரோமோ..!

விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள கிழக்கு வாசல் மெகா தொடரின் ப்ரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள கிழக்கு வாசல் மெகா தொடரின் ப்ரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

ரசிகர்களை கவரும் சின்னத்திரை நிகழ்ச்சிகள் 

பொதுவாக சின்னத்திரை நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் எக்கச்சக்கமாக வயிறு வித்தியாசம் இல்லாத ரசிகர்கள் கூட்டம் உள்ளது. ஒரே மாதிரி கான்செப்ட்டை அனைத்து சேனல்களும் கையில் எடுத்தாலும் திரைக்கதையில் செய்யும் மேஜிக் அந்த நிகழ்ச்சிக்கு என தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்து விடுகிறது. குறிப்பாக சீரியல் பல முன்னணி நடிகைகளை கொண்டு எடுக்கப்பட்டாலும் எதில் கதை வலுவாக உள்ளது அதையே ரசிகர்கள் பேவரைட் ஆக ஏற்றுக் கொள்வார்கள்.

இப்படி சன் டிவியில் பல சீரியல்களில் கலக்கிய ராதிகா தற்போது விஜய் டிவிக்கு சீரியல் ஒன்றை தனது ராடன் மீடியா நிறுவனத்தின் மூலம் தயாரித்து வருகிறார். விரைவில் ஒளிபரப்பாக உள்ள இந்த சீரியலுக்கு கிழக்கு வாசல் என பெயரிடப்பட்டுள்ளது. இதில் இயக்குனர் எஸ் .ஏ.சந்திரசேகர், நடிகைகள் ரேஷ்மா முரளிதரன்,தாரிணி நடிகர்கள் ஆனந்தபாபு, வெங்கட் ரங்கநாதன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

கிழக்கு வாசல் சீரியல்

தற்போது இந்த சீரியலின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில், “எஸ்.ஏ.சந்திரசேகர் தம்பதியினருக்கு அறுபதாவது கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. இதில் ஒவ்வொரு குடும்பமும் தம்பதியினருக்கு பாத பூஜை செய்து ஆசி பெறுகின்றனர். அப்போது ரேஷ்மாவை பாதபூஜை செய்ய சொல்லி அழைக்கிறார்கள். இதற்காக செல்லும் அவரை ஆனந்தபாபு தடுக்கிறார்.

மேலும், "இவள் எப்படி முறை செய்ய முடியும். பெத்த பிள்ளைங்க தான் பாத பூஜை செய்ய முடியும் என ஆனந்தபாபு சொல்ல, ரேஷ்மா "என்ன மாமா?" என கேட்கிறார். ஆனால் ”அவரோ யாருக்கு யார் மாமா?, இங்கே இருப்பவர்கள் எல்லாம் உன் அண்ணன் மாதிரி, உன்னுடைய அப்பா அம்மாவும் மாதிரி தான். தத்தெடுத்த பிள்ளையை உரிமை கொண்டாட விட்டால் அது சொத்தில் பங்கு கேட்கும். நீ இந்த வீட்டு பொண்ணு இல்ல, பொண்ணு மாதிரி தான்” என  சொல்லி ரேஷ்மாவை சங்கடப் படுத்துகிறார். 

இதனைக் கேட்டு கொதித்தெழும் எஸ்.ஏ.சந்திரசேகர், "ஆமா அவ பொண்ணு இல்ல இந்த வீட்டோட சாமி. இந்த சாமியப்பன் இருக்கிற வரைக்கும் இந்த வீட்டோட கற்பகிரகத்துல அவ தான் சாமி" என சொல்லி ரேஷ்மாவை பெருமை கொள்ள செய்கிறார். சொந்தம் என்று வந்தவள் சொந்தம் கொள்ள முடியுமா என்ற பின்னணி குரலுடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது. இது கிழக்கு வாசல் சீரியல் மீதான எதிர்பார்ப்பை மேலும் எகிற செய்துள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget