மேலும் அறிய
Advertisement
Ethirneechal: சவால் விட்ட ஜனனி.. கரிகாலனுக்கு தெரிந்த ரகசியம்.. இன்றைய எதிர்நீச்சலில் பரபரப்பு!
Ethirneechal Oct 12: சக்தியோடு ஜெயித்துக் காட்டுவேன் என அப்பாவிடம் சவால் விட்ட ஜனனி... அப்பத்தாவை போட்டு தள்ளும் குணசேகரனின் பலனை மோப்பம் பிடித்து ஷாக் கொடுத்த கரிகாலன்... இன்றைய எதிர்நீச்சல் ஹிண்ட்.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய எபிசோடில் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்லப்பட்ட குணசேகரன் அங்கு இல்லை என்றும், அவரை நீதிபதியின் வீட்டுக்கு அழைத்துச் சென்று விட்டார்கள் என்றும் தகவல் வந்ததால் நீதிபதியின் வீட்டுக்குச் செல்கிறார்கள் கதிர், ஞானம் மற்றும் கரிகாலன்.
ஜனனி - அப்பா:
ஆனால் அங்கு இருந்து குணசேகரனை ஜெயிலுக்கு அழைத்துச் சென்று விட்டார்கள் எனக் காவலில் இருந்த போலீஸ் சொல்லவே அதிர்ச்சி அடைகிறார்கள் தம்பிகள். ‘தர்ணா பண்ண போறேன்’ என ட்ராமா போடுகிறான் கரிகாலன். ஜனனியின் அப்பா தன்னுடைய மகளுக்கு திருமணம் வைத்திருப்பதாகவும் சம்மந்திக்கு அழைப்பிதழ் வைத்து விட்டு போக வந்ததாகவும் சொல்லி விசாலாட்சி அம்மாவை சந்திக்கிறார்.
அந்த நேரத்தில் அவரை ஜான்சிராணி மரியாதைக் குறைவாக பேச, கோபமான ஜனனி அப்பாவிடம் “ஒரு நிமிடம் பேச வேண்டும் வாங்க” என அழைக்கிறாள். ஆனால் அவளை உதாசீனப்படுத்திவிடுகிறார் ஜனனியின் அப்பா. இதனால் உடைந்து போகிறாள் ஜனனி. அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது.
அதன் தொடர்ச்சியாக இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
ஜனனியின் அப்பாவிடம் ஈஸ்வரி, ரேணுகா மற்றும் நந்தினி பேசி சமாதானம் செய்ய முயற்சிக்கிறார்கள். "உங்களுடைய ஆசைக்காக கல்யாணம் பண்ணிக்கிட்டு பாடா பட்டுக்கிட்டு இருக்கா. அவளைப் போய் ஃபெயிலியர்ன்னு சொல்றீங்களே இதுல என்னங்க நியாயம் இருக்கு" என ஈஸ்வரி, ஜனனியின் அப்பாவிடம் கேட்கிறாள்.

ஜனனி சவால்:
"எந்த சக்தியை கல்யாணம் பண்ணிக்கிட்டதுனால நான் தோத்துட்டேன்னு நீங்க நினைக்குறீங்களோ, அதே சக்தி கூட சேர்ந்து நான் ஜெயிக்கப் போறேன்" என தன்னுடைய அப்பாவிடம் சவால் விடுகிறாள் ஜனனி. அவள் அப்படி தைரியமாக பேசியதைப் பார்த்து ஈஸ்வரி, ரேணுகா மற்றும் நந்தினி பெருமைப்படுகிறார்கள்.
கதிர், ஞானம் மற்றும் கரிகாலன் காரில் வந்து கொண்டு இருக்கும் போது "அவர் சொன்னதை எந்த பிசிறும் இல்லாமல் முடிச்சு காட்டணும்" என்கிறான் கதிர். அதைக் கேட்ட கரிகாலன் "என்னது அப்பத்தாவை போட்டு தள்ளணுமா?" என சொல்லவும் இவனுக்கு எப்படி தெரிந்தது என அதிர்ச்சியுடன் கரிகாலனை பார்க்கிறார்கள் கதிரும் ஞானமும். இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ஹிண்ட்.

புதிய குணசேகரன் மின்னல் போல வந்து அப்படியே காணாமல் போய்விட்டாரே என ஏக்கத்தில் இருக்கின்றனர் ரசிகர்கள். இதுக்கு அவர இன்னும் கொஞ்ச நாள் காட்டாமலே இருந்து இருக்கலாம் என்பது தான் அவர்களின் மைண்ட் வாய்ஸாக உள்ளது. இந்த கதைக்களம் எதை நோக்கி நகர்கிறது என்பது குழப்பமாகவே உள்ளது.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
சென்னை
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion