மேலும் அறிய

Baakiyalakshmi Serial: காலேஜூக்கு சென்ற பாக்யா.. ஆளே மாறிப்போன ஈஸ்வரி.. பாக்கியலட்சுமி சீரியல் அப்டேட் இதோ..!

* சாமியார் வேஷத்தில் காசியில் இருந்து வீட்டுக்கு வந்துள்ள ஈஸ்வரி* முதல் நாள் காலேஜில் பாக்யாவுக்கு கிடைத்த அனுபவம் * ஈஸ்வரிக்கு உண்மை தெரிந்தால் என்ன நடக்கும் இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட் 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) தொடரின் இன்றைய எபிசோடில் காசிக்கு சென்ற ஈஸ்வரி காவி உடையுடன் வீடு திரும்பியுள்ளதை பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். எந்நேரமும் ஓம் நமசிவாய என ஜெபம் செய்து கொண்டே இருக்கிறார் ஈஸ்வரி. அனைவர் மீதும் தீர்த்தம் தெளித்து ஆசீர்வாதம் செய்கிறார். அமிர்தா காபி கொண்டு வரவா என கேட்க "நான் காபி டீ எல்லாம் குடிக்க மாட்டேன். துளசி தீர்த்தம் எடுத்து வா" என சொல்கிறார். இப்படி ஷாக் கொடுத்து கொண்டே இருக்கிறார் ஈஸ்வரி.

முதல் நாள் அனுபவம் :

முதல் நாள் காலேஜ் சென்றுள்ள பாக்யா கிளாஸ் ரூம் உள்ளே செல்ல அனைவரும் அவளை ஆச்சரியமாக பார்க்கிறார்கள். உட்கார செல்லும் போது ஒரு பெண் இங்க ஆள் வராங்க என சொல்லி புக்கை வைக்கிறாள். பாக்யா பின்னாடி இருக்கும் பெஞ்சுக்கு சென்று நான் இங்கே உட்காரலாமா என கேட்டு உட்காருகிறாள். ப்ரொபசர் வந்ததும் அனைவரையும் அறிமுகம் செய்து கொள்ள சொல்கிறார். எல்லோரும் அவர்களின் பெயரையும் எங்கிருந்து வருகிறார்கள் என்பதையும் சொல்லி இண்ட்ரோ கொடுத்து கொள்கிறார்கள். 

Baakiyalakshmi Serial: காலேஜூக்கு சென்ற பாக்யா.. ஆளே மாறிப்போன ஈஸ்வரி.. பாக்கியலட்சுமி சீரியல் அப்டேட் இதோ..!

பாக்கியாவும் தன்னை பற்றி அறிமுகம் செய்து கொண்டு "நான் பேனா பிடித்து எழுதியே பல வருஷங்கள் ஆகிவிட்டது. பரிட்சைக்கு படித்துக் பல காலம் ஆகிவிட்டது. என்னால் படிக்க முடியுமா" என ப்ரொபசரிடம் கேட்கிறாள் பாக்கியா. அவரும் "இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு படிக்க   வேண்டும் என்ற நோக்கத்தில் காலேஜ் வந்து இருக்கீங்க இல்ல அதே போல முழு கவனத்துடன் படித்தால் நீங்களும் வெற்றி பெறலாம்" என ஊக்குவிக்கிறார். 

பிரேக் டைமில் அனைத்து மாணவர்களுக்கும் ஒருவருக்கொருவர் பேசி கொள்கிறார்கள் ஆனால் பாக்யா மட்டும் தனியாக உட்கார்ந்து கொண்டு இருக்கிறாள். அப்போது பாக்யா அனைவரின் பெயரையும் கரெக்டா சொல்லி அசத்துகிறார். 25 வருஷங்களுக்கு பிறகு அவர் படிக்க வந்து இருப்பதை அனைவரும் பாராட்டுகிறார்கள். 

ராதிகா செய்யும் தகராறு :

கேன்டீனில் ராதிகா சாப்பிட வந்துள்ளார். அவரை பார்த்த செல்விக்கும் மற்றவர்களுக்கும் பயமாக இருக்கிறது. "எதுக்கு எடுத்தாலும் ஏதாவது குத்தம் சொல்லும். அதுவா ஏதாவது சொல்றதுக்கு முன்னாடி நல்லா கவனிச்சு அனுப்பிவிடனும்" என செல்வி நினைத்து கொள்கிறாள். ராதிகா ராகி தோசை கேட்க செல்வி வேறு ஒருவரிடம் நல்லா நெய் விட்டு ராகி தோசை ஒன்னு செய்ய சொல்கிறாள். ஒரு வேலையாக செல்வி சென்று வர இன்னும் ராதிகா சாப்பிடாததை பற்றி தெரிந்து கொள்கிறாள். ராதிகா வழக்கம் போல வாக்குவாதம் செய்ய தூங்கிவிட்டாள். கேஸ் சிலிண்டர் காலி ஆனதால் தான் லேட்டாகிவிட்டது என செல்வி சொல்கிறாள். பாக்கியாவையும் ராதிகா திட்டுகிறாள். 

இதையும் படிங்க: Jailer Opening Day Collection: 'தலைவரு களத்துல சூப்பர் ஸ்டாருடா': காலியாகும் டிக்கெட்டுகள்.. கலெக்‌ஷனை அள்ள தயாராகும் ஜெயிலர்..!

பீதியில் குடும்பத்தினர் :

பாக்கியாவுக்கு வாழ்த்து சொல்வதற்காக பழனிசாமியும் அவரது அம்மாவும் பாக்கியாவை காலேஜ் வந்து பார்த்து வாழ்த்துகிறார்கள். ஈஸ்வரிக்கு பாக்யா காலேஜ் செய்யும் விஷயம் தெரிந்தால் என்ன நடக்கும் என பீதியில் இருக்கிறார்கள். அத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) எபிசோட் முடிவுக்கு வந்தது.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
Anna University: இனி அவுட்சோர்சிங் மூலம்தான் பேராசிரியர்கள் நியமனம்; அண்ணா பல்கலை. அறிவிப்பால் அதிர்ச்சி!
Anna University: இனி அவுட்சோர்சிங் மூலம்தான் பேராசிரியர்கள் நியமனம்; அண்ணா பல்கலை. அறிவிப்பால் அதிர்ச்சி!
Top 10 News: தஞ்சையில் 300 கிலோ கஞ்சா பறிமுதல், ஐபிஎல் 2025 எப்போது தொடங்கும்?  டாப் 10 செய்திகள்
Top 10 News: தஞ்சையில் 300 கிலோ கஞ்சா பறிமுதல், ஐபிஎல் 2025 எப்போது தொடங்கும்? டாப் 10 செய்திகள்
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் -  திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் - திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Seeman meets Rajini : ரஜினி வீட்டுக்கே போன சீமான் 1 மணி நேரம் பேசியது என்ன?விஜய்க்கு வைக்கும் செக்!DMK MP Meeting : அதானி To வக்பு வாரியம் நெருங்கும் குளிர்கால கூட்டத்தொடர் SCENE-க்கு வந்த ஸ்டாலின்”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
Anna University: இனி அவுட்சோர்சிங் மூலம்தான் பேராசிரியர்கள் நியமனம்; அண்ணா பல்கலை. அறிவிப்பால் அதிர்ச்சி!
Anna University: இனி அவுட்சோர்சிங் மூலம்தான் பேராசிரியர்கள் நியமனம்; அண்ணா பல்கலை. அறிவிப்பால் அதிர்ச்சி!
Top 10 News: தஞ்சையில் 300 கிலோ கஞ்சா பறிமுதல், ஐபிஎல் 2025 எப்போது தொடங்கும்?  டாப் 10 செய்திகள்
Top 10 News: தஞ்சையில் 300 கிலோ கஞ்சா பறிமுதல், ஐபிஎல் 2025 எப்போது தொடங்கும்? டாப் 10 செய்திகள்
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் -  திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் - திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
Anna University: அண்ணா பல்கலை. பேராசிரியர்களை குத்தகைக்கு வாங்குவதா? தற்கொலைக்கு சமமான முடிவு; எழும் கண்டனங்கள்!
Anna University: அண்ணா பல்கலை. பேராசிரியர்களை குத்தகைக்கு வாங்குவதா? தற்கொலைக்கு சமமான முடிவு; எழும் கண்டனங்கள்!
அதானியின் ஒப்பந்தங்கள் கேன்சல்..! கென்ய அதிபர் அதிரடி..!
அதானியின் ஒப்பந்தங்கள் கேன்சல்..! கென்ய அதிபர் அதிரடி..!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Embed widget