மேலும் அறிய

Ethirneechal : ஜான்சியை சாமர்த்தியமாக சமாளித்த தாரா... வளவனை பார்த்து அதிர்ச்சி அடையும் நந்தினி... எதிர்நீச்சலில் நேற்று 

Ethirneechal Nov 2 : சாமர்த்தியமான ஜான்சியையும் விசாலாட்சி அம்மாவையும் சமாளித்த தாரா. வளவனை பார்த்து ஷாக்காகிய நந்தினி. நேற்றைய எதிர்நீச்சலில் என்ன நடந்தது?

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய (நவம்பர் 2) எபிசோடில் ஜான்சி ராணி ரூமுக்கு வந்து "ஏண்டி ஈஸ்வரி ஏதோ பிள்ளையை தூக்கிட்டு வந்தியே யார் அது?" என கேட்க அனைவரும் அப்படி யாரும் வரலையே என சொல்லி சமாளிக்க தாரா "நான் தான் அது. என்னை தான் பெரியம்மா தூக்கிட்டு வந்தாங்க" என சொல்ல ஜான்சி ராணி நம்பாமல் சென்று விசாலாட்சி அம்மாவிடம் போட்டு கொடுத்து அவர்களையும் அழைத்து வருகிறாள். 

Ethirneechal : ஜான்சியை சாமர்த்தியமாக சமாளித்த தாரா... வளவனை பார்த்து அதிர்ச்சி அடையும் நந்தினி... எதிர்நீச்சலில் நேற்று 

மாடிக்கு வந்த விசாலாட்சி அம்மா "அங்கே சமையலை அப்படியே  போட்டுட்டு இங்க வந்து என்ன பண்றீங்க? ஆமா ஏதோ பிள்ளையை தூக்கிட்டு வந்தீங்களாமே யார் அது?" என கேட்க "அப்பத்தா நான்தான் அது. இந்த அம்மா பார்க்காம வந்து உங்ககிட்ட சொல்லுது. அதுக்கு போய் சப்போர்ட் பண்றீங்களே" என எப்படியோ சமாளித்து அனுப்பி விடுகிறாள் தாரா. 

"நீங்க இங்க இருந்தீங்கன்னா உங்களை தேடிக்கிட்டு யாராவது ஒருத்தர் வந்துகிட்டே தான் இருப்பாங்க. நீங்க எல்லாரும் கீழ போங்க... நாங்க பாத்துக்குறோம்" என சொல்லி தாரா அனைவரையும் அனுப்பி வைக்கிறாள். தர்ஷினி, தர்ஷன், ஐஸ்வர்யா மூவரும் வெண்பாவை பார்த்து கொள்கிறேன் என சொல்கிறார்கள். 

Ethirneechal : ஜான்சியை சாமர்த்தியமாக சமாளித்த தாரா... வளவனை பார்த்து அதிர்ச்சி அடையும் நந்தினி... எதிர்நீச்சலில் நேற்று 

சிறிது நேரத்திற்கு பிறகு தர்ஷினி, ஐஸ்வர்யா மற்றும் தர்ஷன் கீழே இறங்கி வர ஈஸ்வரி பதற்றமாகிறாள். "வெண்பாவை என் தனியாக விட்டுட்டு வந்தீங்க" என கேட்கிறாள். "வெண்பா தூங்கிகிட்டு இருக்கா. தாரா அவ கூட இருக்கா. அது தான் வெண்பாவுக்கு சாப்பாடு எடுத்துட்டு போலாம் என வந்தோம்" என தர்ஷினி சொல்ல அங்கே ஜான்சி ராணி வந்து நிற்கிறாள். "ஏண்டி ஐஸு, உனக்கு சீக்குனு எல்லாரும் உன்னோட உட்கார்ந்துகிட்டு இருந்தாங்க. இப்ப சரியா போச்சா" என ஜான்சி ஐஸ்வர்யாவை கேட்கிறாள். 

ரேணுகாவும் நந்தினியும் அவர்களை அங்கிருந்து கிளப்புவதிலேயே குறியாக இருக்கிறார்கள். ஜான்சியையும் "சாப்பாடு ரெடி ஆனதும் நானே வந்து கூப்பிடுறேன் நீ போ மா" என சொல்லி அனுப்பி வைக்கிறாள் ஈஸ்வரி. 

நந்தினி சென்று அனைவரையும் சாப்பிட அழைக்கிறாள். ஞானம் மற்றும் இருந்தால் அவரை சாப்பிட வர சொல்லிவிட்டு கதிரும் குணசேகரனும் எங்கே இருக்கிறார்கள் என கேட்கிறாள். அவர்கள் தோட்டத்தில் இருப்பதாக சொன்னதால் அவர்களை தேடி தோட்டத்திற்கு செல்கிறாள். மிக தொலைவாக சென்றும் அவர்களை பார்க்க முடியவில்லை என புலம்பிக்கொண்டே போகிறாள்.
 
அங்கே கதிரும் குணசேகரனும் வளவனுடன் ஜீவானந்தத்தை போட்டுத்தள்ளுவதை பற்றி பேசிக்கொண்டு இருக்கிறார்கள். "ஜீவானந்தத்தை பற்றி நீங்க குறைச்சு எடை போடாதீங்க" என வளவன் சொல்ல "உன்னால முடிஞ்சா நீ போட்டு தள்ளு இல்லைன்னா நானே அவனை போடுறேன்" என குணசேகரன் சொல்கிறார். "கிழவியையும் அந்த தாடிகாரனையும் போட்டு தள்ளாமல் நீ இங்க இருந்து கிளம்ப முடியாது" என பேசிக்கொண்டு இருக்கிறார்கள். 

அவர்கள் மூவரும் பேசிக்கொண்டு இருப்பதை பார்த்த நந்தினி "யார் இது புதுசா ஒரு ஆள். இங்க நின்னு என்ன பண்ணிக்கிட்டு இருக்காங்க" என யோசிக்கிறாள். பிறகு கதிரை அழைத்து சாப்பிட வரச்சொல்கிறாள். நந்தினியை பார்த்த மூவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோட் முடிவுக்கு வந்தது. 

தலைப்பு செய்திகள்

TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி

TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!

MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!

Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?

Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்

தலைமைச் செயலாளர் மீது அதிருப்தி: நாளை போராட்டத்தில் குதிக்கும் சிபிஎம் - காரணம் என்ன?

SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!

Embed widget