மேலும் அறிய

Ethirneechal: ஜீவானந்தத்துக்கு ஸ்கெட்ச் போடும் குணசேகரன்: ஜனனி கொடுத்த க்ளூ - எதிர்நீச்சலில் இன்று  

Ethirneechal: நந்தினியை தப்பாகப் புரிந்து கொண்ட ரேணுகா, ஞானத்திடம் சண்டை போடுகிறாள். தர்ஷினியைத் தேட ஜனனிக்கு கிடைத்த புது க்ளூ. குணசேகரன் போடும் புது பிளான். எதிர்நீச்சலில் இன்று

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய (பிப்ரவரி.29) எபிசோடில் வீட்டுக்கு வந்த ரேணுகாவை விசாலாட்சி அம்மா நக்கலாக விசாரிக்கிறார். ஆச்சி ரேணுகாவின் அம்மாவை பயங்கரமாக திட்ட ரேணுகா ஆச்சிக்கு சரியான பதிலடி கொடுக்கிறாள்.

ஞானத்தை பார்க்கச் சென்ற ரேணுகாவிடம் ஞானம் கோபத்தைக் காட்டுகிறான். ரேணுகாவுக்கு எதுவுமே புரியவில்லை. நந்தினி பேசியது பற்றி சொல்கிறான். மிகவும் வருத்தப்பட்டு “அடுத்த குணசேகரன் போல மாறிடுவ” என நந்தினி சொன்னதாக சொல்லி அழுகிறான். அவனை ஐஸ்வர்யாவும் ரேணுகாவும் சமாதானம் செய்கிறார்கள்.

Ethirneechal: ஜீவானந்தத்துக்கு ஸ்கெட்ச் போடும் குணசேகரன்: ஜனனி கொடுத்த க்ளூ - எதிர்நீச்சலில் இன்று  

கல்யாணத்தைப் பற்றி ஜான்சியும் கரிகாலனும் குணசேகரனிடம் போய் கேட்க அவர் கோபத்தில் கையில் கிடப்பதை எல்லாம் தூக்கி விசிறடிக்கிறார். மறுபக்கம் பலத்த காயங்களுடன் மயக்கத்தில் புலம்பிக் கொண்டே இருக்கிறாள் தர்ஷினி.

அப்போது குணசேகரன் வீரசங்கிலிக்கு போன் செய்கிறார். போன் அடித்துக் கொண்டே இருக்கிறது. அதனால் தர்ஷினி போனை எடுக்க குணசேகரன் அவர் தான் தர்ஷினியை கடத்தி வைக்க சொன்னதை சொல்லி விடுகிறார். மேலும் அவளுக்கு கல்யாண ஏற்பாடுகள் செய்வதாகவும், இரண்டு நாளில் வந்து கூட்டிட்டு போறேன் என சொல்கிறார். அதைக் கேட்டு அதிர்ச்சி அடைகிறாள் தர்ஷினி.

ஞானம் பேசியதைக் கேட்டு நந்தினியை தப்பாகப் புரிந்து கொண்டு அவளை பேச விடாமல் அங்கிருந்து சென்று விடுகிறாள் ரேணுகா. நந்தினிக்கும் ரேணுகாவுக்கும் இடையில் நடக்கும் பிரச்சினையைப் பார்த்து சந்தோஷப்படுகிறார்கள் விசாலாட்சி அம்மாவும் ஆச்சியும். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது.

அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

நந்தினி மனது பொறுக்காமல் ரேணுகாவை புரிய வைக்க முயற்சிக்கிறாள். அந்த நேரத்தில் ஞானம் அங்கே வர "எதுக்கு மாமா இல்லாத விஷயத்தை எல்லாம் இப்ப அக்காகிட்ட சொல்லி சண்டையை மூட்டி விட்டீங்க. தெரியாம தான் கேக்குறேன்" என சத்தம் போடுகிறாள் நந்தினி. அவள் சத்தத்தை கேட்டு கதிர் அங்கே வருகிறான். விசாலாட்சி அம்மாவும் இதை வேடிக்கை பார்க்கிறார்.

Ethirneechal: ஜீவானந்தத்துக்கு ஸ்கெட்ச் போடும் குணசேகரன்: ஜனனி கொடுத்த க்ளூ - எதிர்நீச்சலில் இன்று  

ஸ்பெஷல் அதிகாரி ஒரு இடத்தில் நின்று தர்ஷினி கேஸ் குறித்து அடுத்து என்ன செய்வது எனப் பேசிக் கொண்டு இருக்கிறார். அப்போது அந்த வழியாக தர்ஷினியைத் தேடி பன்றி மலைக்கு சென்ற சமயத்தில் ஒரு ஆள் வந்து ஜீவானந்தத்திடம் ஒரு பேப்பரைக் காட்டி விசாரித்தான். அவன் அந்த வழியாக வந்ததைப் பார்த்த ஜனனி, ஆபீஸரிடம் "ஜீவானந்தம் சாரும், நாங்களும் தர்ஷினியை தேடி வந்த போது இந்த ஆளை பார்த்தோம்" என சொல்கிறாள்.  

குணசேகரன், வீர சங்கிலிக்கு போன் செய்து பேசுகிறார். "ஜீவானந்தம் என்னோட பொண்ணை தேடி கண்டிப்பா வருவான். அப்படி வந்தான்னா" என சொல்லி ஏதோ பிளான் பற்றி சொல்கிறார். தர்ஷினி எழுந்து தப்பிக்க முயற்சி செய்கிறாள் ஆனால் அவளால் முடியவில்லை. இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ஹிண்ட். 
 
தலைப்பு செய்திகள்

EPS Vs CM Vijay: அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!
US Iran War: ஈரானை சாத்தியெடுக்கும் அமெரிக்கா.! 14 பேர் பலி; பஹ்ரைன் எங்கும் எச்சரிக்கை ஒலி; வளைகுடாவில் பதற்றம்
ஈரானை சாத்தியெடுக்கும் அமெரிக்கா.! 14 பேர் பலி; பஹ்ரைன் எங்கும் எச்சரிக்கை ஒலி; வளைகுடாவில் பதற்றம்
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்

வீடியோ

Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!
Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Vs CM Vijay: அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!
US Iran War: ஈரானை சாத்தியெடுக்கும் அமெரிக்கா.! 14 பேர் பலி; பஹ்ரைன் எங்கும் எச்சரிக்கை ஒலி; வளைகுடாவில் பதற்றம்
ஈரானை சாத்தியெடுக்கும் அமெரிக்கா.! 14 பேர் பலி; பஹ்ரைன் எங்கும் எச்சரிக்கை ஒலி; வளைகுடாவில் பதற்றம்
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
UDHAYANIDHI VS VIJAY :
"MLA-க்களை வாங்குறதுல காட்டுற கவனத்தை, தண்ணீர் வாங்குறதுல காட்டுங்க" - உதயநிதி ஸ்டாலின்
Nissan Tekton First Look: டஸ்ட்டருக்கு டஃப் கொடுக்குமா டெக்டான்.? எஞ்சின், மைலேஜ், பாதுகாப்பு எப்படி.? முதல் பார்வை இதோ.!
டஸ்ட்டருக்கு டஃப் கொடுக்குமா டெக்டான்.? எஞ்சின், மைலேஜ், பாதுகாப்பு எப்படி.? முதல் பார்வை இதோ.!
Chief Minister Vijay : கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ
கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ..
Chennai Power Cut: சென்னைல ஜூலை 10 (10.07.2026) எக்கச்சக்கமான இடங்கள்ல பவர் கட் இருக்கு; உங்க ஏரியா இருக்கா பாருங்க.!
சென்னைல ஜூலை 10 (10.07.2026) எக்கச்சக்கமான இடங்கள்ல பவர் கட் இருக்கு; உங்க ஏரியா இருக்கா பாருங்க.!
Embed widget