மேலும் அறிய

Ethirneechal: நெஞ்சுமேல ஏறி மிதித்த சக்தி: மாறி மாறி பளார் வாங்கிய ஜான்சி கரிகாலன்: பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல்

Ethirneechal Jan 6 : தர்ஷினியை வலுக்கட்டாயப்படுத்தியதால் கரிகாலனுக்கும் ஜான்சிக்கும் காத்திருந்த அதிர்ச்சி. கொந்தளித்த சக்தி என்ன செய்தான்? எதிர்நீச்சலில் இன்று  

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடர் கடந்த சில வாரங்களாக ஏராளமான ட்விஸ்ட்களுடன் மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் நேற்றைய (ஜனவரி 5) எபிசோடில் வீட்டுக்கு வந்த ஆதிரை தன்னுடைய சர்டிபிகேட்களை கேட்க அதெல்லாம் தர முடியாது என எகிறுகிறான் கதிர். ஆதிரை உடன் வந்த சாருபாலாவையும் மரியாதை இல்லாமல் பேசவே இப்படி நடக்கும் என தெரிந்து தான் நாங்கள் போலீஸ் உடன் வந்து இருக்கிறோம் என சொன்ன பிறகுதான் கதிர் ஆட்டம் அடங்குகிறது. பின்னர் நந்தினி சைலண்டாக போய் ஆதிரையின் சர்டிபிகேட்களை எடுத்து வந்து கொடுக்கிறாள்.

 

Ethirneechal: நெஞ்சுமேல ஏறி மிதித்த சக்தி: மாறி மாறி பளார் வாங்கிய ஜான்சி கரிகாலன்: பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல்

ஸ்கூலில் இருந்தது வந்து கொண்டு இருந்த தர்ஷினியிடம் வலுக்கட்டயமாக கரிகாலனுடன் பைக்கில் செல்ல சொல்லி வற்புறுத்துகிறாள் ஜான்சி ராணி. அந்த நேரத்தில் அங்கு வந்த தர்ஷன் தர்சினியை அவர்களிடம் இருந்து மீட்டு  வீட்டுக்கு அழைத்து செல்கிறான். 

அதன் தொடர்ச்சியாக இன்றைய (ஜனவரி 6) எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

குணசேகரன் மற்றும் கதிர் ஆதிரை அவர்கள் மீது கேஸ் கொடுத்து இருப்பது பற்றி பேசி கொண்டு இருக்கிறார்கள். அவர்களுடன் வக்கீலும் இருக்கிறார். "இது பற்றி உங்க வீட்டு பொம்பளைங்க கிட்ட விசாரிச்சா அவங்க சொல்லமாட்டாங்களா?" என வக்கீல் கேட்க "நிச்சயம் சொல்லுவாளுங்கப்பா" என்கிறார் குணசேகரன். அதை கேட்டு கதிர் டென்ஷனாகிறான்.

வீட்டுக்கு வந்த தர்ஷினி ஆவேசமாக ஜான்சி ராணியும் கரிகாலனும் என்ன செய்தார்கள் என்பதை பற்றி சொல்கிறாள். "ரோட்ல வைச்சு என்னை மடக்கி வலுக்கட்டயமாக பைக்ல ஏற சொல்லி என்னை டார்ச்சர் பண்ணாங்க" என தர்ஷினி சொல்ல அந்த நேரத்தில் பின்னாடியே வந்த ஜான்சியை ஓங்கி கன்னத்தில் அறைகிறாள் ஈஸ்வரி. 

 

Ethirneechal: நெஞ்சுமேல ஏறி மிதித்த சக்தி: மாறி மாறி பளார் வாங்கிய ஜான்சி கரிகாலன்: பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல்

அப்பவும் அடங்காத கரிகாலன் "நான் தர்ஷினியை தூக்கிகிட்டு போய் கல்யாணம் பண்ணுவேன்" என நக்கலாக சொல்ல அங்கிருந்த அனைவரும் கடுப்பாக சக்தி எகிறி கொண்டு போய் கரிகாலனை தாக்குகிறான். "யார் வீட்ல வந்து என்ன பேசிக்கிட்டு இருக்க" என அவனையும் ஒரு அறை விடுகிறான் சக்தி. தரதரவென வாசல் வரை இழுத்து சென்று "எங்க வீட்டு பிள்ளை மேல கைவைப்பியா நீ" என கரிகாலன் நெஞ்சு மேலே ஏறி ஏறி மிதிக்கிறான் சக்தி.  மகனை காப்பாற்றுவதற்காக ஜான்சி சக்தியை தள்ளிவிட முயற்சி செய்தாலும் சரியான மிதி வாங்குகிறான் கரிகாலன். இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ஹிண்ட். 

 

கடந்த சில நாட்களாக சக்திக்கு அதிக வாய்ப்பை கொடுத்து நடிக்க வைத்துள்ளார் இயக்குநர். சக்தி ஆவேசமாக பேசுவதும், ஜனனிக்காக துணிச்சலாக அண்ணன்களை எதிர்த்து நிற்பதும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. சக்தியின் நடிப்பையும் பாராட்டி வருகிறார்கள். கதைக்களமும் சுவாரஸ்யமாக நகர்ந்து வருகிறது. அதனால் எதிர்நீச்சல் சீரியலின் டிஆர்பி ரேட்டிங்கும் எகிறி வருவதோடு பழைய நிலைக்கு திரும்பி வருகிறது. 

 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: ஸ்ரேயா மீது துப்பாக்கிச்சூடு.. சுட்டது யார் தெரியுமா? கார்த்திகை தீபத்தில் திக்.. திக்..!
Karthigai Deepam: ஸ்ரேயா மீது துப்பாக்கிச்சூடு.. சுட்டது யார் தெரியுமா? கார்த்திகை தீபத்தில் திக்.. திக்..!
Karthigai Deepam: ஜாமினில் வந்த ஸ்ரேயா.. கார்த்திக், ரேவதிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி..! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ஜாமினில் வந்த ஸ்ரேயா.. கார்த்திக், ரேவதிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி..! கார்த்திகை தீபத்தில் இன்று
6 முறை காதல் தோல்வி.. தற்கொலை எண்ணம் வரை சென்ற ஆல்யா மானசா! சஞ்சீவ் குறித்து உருக்கமான பேட்டி!
6 முறை காதல் தோல்வி.. தற்கொலை எண்ணம் வரை சென்ற ஆல்யா மானசா! சஞ்சீவ் குறித்து உருக்கமான பேட்டி!
Karthigai Deepam: சாகப்போகிறாரா சாமுண்டீஸ்வரி.? காப்பாற்றுவாரா கார்த்திக்? ஸ்ரேயா சதி என்னாச்சு? கார்த்திகை தீபத்தில் திக்.. திக்..!
Karthigai Deepam: சாகப்போகிறாரா சாமுண்டீஸ்வரி.? காப்பாற்றுவாரா கார்த்திக்? ஸ்ரேயா சதி என்னாச்சு? கார்த்திகை தீபத்தில் திக்.. திக்..!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamilnadu Rain: மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் மழை... உங்க மாவட்டத்திற்கு அலர்ட் இருக்கா?
Tamilnadu Rain: மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் மழை... உங்க மாவட்டத்திற்கு அலர்ட் இருக்கா?
Siraj: மீண்டும் மீண்டுமா? 2வது டெஸ்டிலும் ஓரங்கட்டப்பட்ட சிராஜ்! என்னதான் நடக்குது இந்திய அணியில்?
Siraj: மீண்டும் மீண்டுமா? 2வது டெஸ்டிலும் ஓரங்கட்டப்பட்ட சிராஜ்! என்னதான் நடக்குது இந்திய அணியில்?
மீண்டும் உருவாகும் புயல்? - வானிலை மையம் கொடுத்த அப்டேட் என்ன?
மீண்டும் உருவாகும் புயல்? - வானிலை மையம் கொடுத்த அப்டேட் என்ன?
மீண்டும் கூட உள்ள நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் - வெளியான திடீர் அறிவிப்பு!
மீண்டும் கூட உள்ள நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் - வெளியான திடீர் அறிவிப்பு!
திருப்பதி ஏழுமலையானுக்கு அள்ளிக்கொடுக்கப்பட்ட 46 வகையான தங்க நகைகள் என்னென்ன தெரியுமா? - முழு பட்டியல் இதோ
திருப்பதி ஏழுமலையானுக்கு அள்ளிக்கொடுக்கப்பட்ட 46 வகையான தங்க நகைகள் என்னென்ன தெரியுமா? - முழு பட்டியல் இதோ
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (27-11-2026) ஏகப்பட்ட ஏரியக்களில் மின் தடை அறிவிப்பு? - உங்க பகுதி இருக்கா?  லிஸ்ட் இதோ
தமிழகத்தில் நாளை (27-11-2026) ஏகப்பட்ட ஏரியக்களில் மின் தடை அறிவிப்பு? - உங்க பகுதி இருக்கா?  லிஸ்ட் இதோ
திருப்பதி கோவிலுக்கு 121 கிலோ தங்கம் கொடுத்த சென்னை தொழிலதிபர்.. யார் இந்த வர்தமான் ஜெயின்? வியக்க வைக்கும் பின்னணி!
திருப்பதி கோவிலுக்கு 121 கிலோ தங்கம் கொடுத்த சென்னை தொழிலதிபர்.. யார் இந்த வர்தமான் ஜெயின்? வியக்க வைக்கும் பின்னணி!
“அய்யய்யோ! வந்துட்டாரே கலாய்ப்பாரே” - உதயநிதியை தனது பாணியில் கிண்டலடித்த முதல்வர் விஜய்!
“அய்யய்யோ! வந்துட்டாரே கலாய்ப்பாரே” - உதயநிதியை தனது பாணியில் கிண்டலடித்த முதல்வர் விஜய்!
Embed widget