மேலும் அறிய

Ethirneechal: தர்ஷினிக்கு என்ன ஆச்சு? ஈஸ்வரிக்கு வந்த வீடிேயா - எதிர்நீச்சலில் இன்றைய பரபரப்பு

Ethirneechal: கடத்தப்பட்ட தர்ஷினியின் நிலை என்ன? குணசேகரன் ராமசாமியின் உதவியை நாடுவது போன்ற பெரும் பரபரப்பான கட்டத்தை எதிர்நீச்சல் எட்டியுள்ளது.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரில் தர்ஷினியை காணவில்லை என ஈஸ்வரி, நந்தினி, சக்தி மற்றும் ஜனனி ஒரு பக்கம் அங்கும் இங்கும் பதட்டத்துடன் தேடுகிறார்கள். மறுபக்கம் சந்தேகத்தின் பேரில் கரிகாலனையும் ஜானகியையும் கைது செய்து அடித்து விசாரித்த போலீசிடம் இருந்து, அவர்கள் இருவரையும் வெளியில் எடுக்கிறார் குணசேகரன்.

கரிகாலன் தர்ஷினியை பற்றி தப்பாக பேசியதால் அவனை கதிர் ஓங்கி அறைய என்னுடைய கருத்தும் அது தான் அப்போ என்னையும் அறைவியா என கோபத்தில் குணசேகரன் கேட்க, அவரை எதிர்த்து கதிர் பேசியதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார் குணசேகரன்.

Ethirneechal: தர்ஷினிக்கு என்ன ஆச்சு? ஈஸ்வரிக்கு வந்த வீடிேயா - எதிர்நீச்சலில் இன்றைய பரபரப்பு
தர்ஷினியை தேடுவதற்கு ஜீவானந்தத்தின் உதவியை தேடி அவரின் வீட்டுக்கு செல்கிறார்கள் ஈஸ்வரியும் மற்றவர்களும். ஆனால் ஜீவானந்தம் ஊரில் இல்லை என்ற தகவலை ஃபர்ஹானா மூலம் கேட்டு அறிகிறார்கள். வீட்டில் விசாலாட்சி அம்மவோ மருமகள்களை தவறாக புரிந்து கொண்டு அவர்களை இனி இந்த வீட்டில் சேர்க்க மாட்டேன் என சொல்லி அரிவாளை எடுத்து ஆவேசமாக பேசுகிறார்.

அந்த வகையில் இன்றைய (ஜனவரி 23) எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

Ethirneechal: தர்ஷினிக்கு என்ன ஆச்சு? ஈஸ்வரிக்கு வந்த வீடிேயா - எதிர்நீச்சலில் இன்றைய பரபரப்பு

தர்ஷினி கடத்தப்பட்ட இடத்திற்கு சென்று அங்கு ஏதாவது தகவல் கிடைக்கிறதா? என பார்க்கலாம் என ஈஸ்வரியும் மற்றவர்களும் செல்கிறார்கள். பதட்டத்தில் அவர்கள் அனைவரும் தேட ஜனனி ஒரு வீடியோவை கொண்டு வந்து அவர்களிடம் காட்ட அதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். அதில் தர்ஷினி கடத்தப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ காட்சி உள்ளது. அதை பார்த்த சக்தி "ஜனனி இந்த வீடியோவ யார் குடுத்தது?" எனக்கேட்க "அந்த வீட்ல இருக்கவங்க அன்னிக்கு மேல இருந்து  இந்த வீடியோவ எடுத்து இருக்காங்க" என சொல்கிறாள் ஜனனி. அதை பார்த்ததும் ஈஸ்வரி கதறி கதறி அழுகிறாள்.

கதிரை திட்டும் நந்தினி:

குணசேகரன் வீடு வாசலிலேயே கோபத்தின் உச்சியில் உட்கார்ந்து கொண்டு இருக்கிறார். கதிர் நந்தினிக்கு போன் செய்து "உங்களுக்கு என்னத்த தெரியும்? மரியாதையா எல்லாரும் வீடு வந்து சேருங்க. நாங்க எல்லாத்தையும் பாத்துக்குறோம்" என சொல்ல "பாத்து கிழிச்சீங்க" என சொல்லி திட்டி விட்டு போனை வைத்து விடுகிறாள் நந்தினி.

Ethirneechal: தர்ஷினிக்கு என்ன ஆச்சு? ஈஸ்வரிக்கு வந்த வீடிேயா - எதிர்நீச்சலில் இன்றைய பரபரப்பு
குணசேகரனை பார்க்க ராமசாமியும் கிருஷ்ணசாமியும் வருகிறார்கள். அவர்களிடம் நடந்ததை சொல்லி "என்னோட பொண்ணு யார் வீட்ல இருக்கான்னு எனக்கு தெரியும். அவளை அனுப்பி விட்டது என்னோட பொண்டாட்டி" என சொல்கிறார் குணசேகரன். அவர்களுக்கு குணசேகரனுக்கு ஆறுதல் சொல்கிறார்கள். இது தான் இன்றைய எதிர் நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட்.

தர்ஷினியை கடத்தியது யாராக இருக்கும். இதற்கு பின்னால் இருப்பது ஜான்சி ராணியா அல்லது குணசேகரனா? இல்லை வேறு யாராவது இப்படி செய்து இருப்பார்களா? ஒரே சஸ்பென்ஸுடன் நகர்ந்து வருகிறது எதிர்நீச்சல் (Ethirneechal) தொடர். 

தலைப்பு செய்திகள்

"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget