மேலும் அறிய
Advertisement
Siragadikka Aasai June 24 : தலைதூக்கும் ரூம் பிரச்னை... அண்ணாமலை போடும் பிளான்... சிறகடிக்க ஆசையில் இன்று...
Siragadikka Aasai serial today : சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோடில் அண்ணாமலை புதிய ரூம் கட்டுவதற்காக பிளான் ஒன்றை போடுகிறார்.
ரவி ஸ்ருதியை தூக்கிக்கொண்டு வீட்டில் சுத்தி வர அதைப் பார்த்த மீனாவும் முத்துவும் என விஷயம் என கேட்கிறார்கள்.
ஸ்ருதி : மனைவி மீது அன்பாக இருப்பவர்கள் இப்படி தான் செய்வார்கள் என சொன்னதும் முத்துவும் மீனாவை தூக்கிக் கொண்டு சுற்றுகிறான்.
அப்போது வீட்டுக்கு வந்த ரோகினியும் இதை பார்த்த ஆசைப்பட மனோஜ் அவளை தூக்கிக்கொண்டு சுத்துகிறான்.
மூன்று ஜோடிகளும் அவரவர் மனைவிகளை தூக்கிக்கொண்டு சுத்திவர அப்போது வீட்டுக்கு வந்த அண்ணாமலையும் விஜயாவும் இதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்கள்.
"விஜயா : இது என்ன கூத்து. உங்களுக்கு கூச்சமாக இல்லையா இப்போது யாராவது வீட்டுக்கு வந்தால் என்ன நினைப்பார்கள்
ஸ்ருதி: நான் தான் ஆன்ட்டி இப்படி சொன்னேன். அதனால தான் அவங்களும் இந்த மாதிரி பண்ணாங்க."
"விஜயா: இப்போது தான் வீட்டில் ரூம் பிரச்சனை இல்லாம இருக்கு மறுபடியும் ஆரம்பிச்சுட்டீங்களா.
மனோஜ்: நான் ஒரு நாள் முழுக்க ரொம்ப வேலை செய்கிறேன். நான் ஒரு பிசினஸ்மேன். நான் நல்லா ஓய்வெடுத்தா தான் என்னால யோசிச்சு பிசினஸ் நல்லா செய்ய முடியும். ரூமை எல்லாம் விட்டுக் கொடுக்க முடியாது. எனக்கே அந்த ரூமை கொடுத்துருங்க."
"ரவி: அதுதான் ஒரு வாரத்துக்கு ஒருத்தர் என சொல்லி அட்ஜஸ்ட் பண்ணி தங்கிக்கலாம் என சொல்லி இருக்காங்க இல்ல. அப்புறம் எதுக்கு திரும்பவும் இதே மாதிரி பேசுற. என்னோட டர்ன் வரும்போது நானும் வெளிய படுத்துப்பேன்.
மனோஜ்: நான் என்ன உங்கள மாதிரி கார் ஓட்டுற வேலை, சமைக்கிற வேலையா பாக்குறேன். மூளையை கசக்கி யோசிச்சு பிசினஸ் பண்றேன் . ஒழுங்கா ரெஸ்ட் எடுத்தா தான் அடுத்த நாள் போய் என்னால வேலை செய்ய முடியும்".
"ரவி: மத்தவங்க செய்ற வேலையை தரக்குறைவா பேசாதன்னு உனக்கு எத்தனை தடவை சொல்றது? நாங்க எல்லாருமே தான் கஷ்டப்படுறோம். முத்து கார் ஓட்டுறான் மீனா அண்ணியும் ஸ்ருதியும் வேலைக்கு போறாங்க.
ஸ்ருதி : ரோகினி கூட தான் ஒரு நாள் ஃபுல்லா பார்லர்ல இருக்காங்க எல்லாரும் தான் டயர்டா இருப்பாங்க."
"முத்து : சரிப்பா நாங்க எப்பவும் போல மாடியிலேயே தங்கிக்கிறோம் அவனே அவன் ரூம் வச்சிக்கட்டும்.
அண்ணாமலை: மீனா நீ ஒரு போய் ஒரு பேப்பர் பேனா எடுத்துட்டு வாம்மா இதுக்கு நான் ஒரு முடிவு கட்டுறேன்."
மீனா பேப்பரும் பேனாவும் எடுத்துட்டு வந்து கொடுத்ததும்.
"அண்ணாமலை: எல்லாரும் இனிமே மாச மாசம் வீட்டுக்கு எவ்வளவு கொடுக்க போறீங்கன்னு சொல்லுங்க.
ரோகினி: இவ்வளவு நாள் கொடுத்துட்டு இருக்கோம்"
இனிமே யார் யார் எவ்வளவு கொடுக்க போறீங்க அப்படின்ற கணக்கு எனக்கு சொல்லுங்க.
"முத்து: இவ்வளவு நாள் அப்பா நமக்கு கேட்டதெல்லாம் செஞ்சாரு இல்ல. இப்ப அவர் கேக்குறாரு நம்ம செய்யணும். மூத்த பிள்ளை சொன்னேன்ல நீ எவ்வளவு கொடுக்கப் போற" என மனோஜிடம் கேட்கிறான்
மனோஜ்: நான் 8000 குடுக்குறேன்பா.
முத்து: மீனா சொன்னது மாதிரி நான் 10000 கொடுக்கிறேன்.
ரவி: நானும் 10000 கொடுக்கிறேன் பா
மீனா: நானும் சம்பாதிக்கிறேன் இல்ல மாமா என்னோட பங்கா நான் 2000 கொடுக்கிறேன்.
ரோகினி : அப்ப நானும் இனிமே 5000 கொடுக்கிறேன் அங்கிள்.
ஸ்ருதி: எல்லாருமே சம்பாதிக்கிறோம். அதனால எல்லாருமே கொடுக்கலாம். நானும் என்னோட ஷேரா 10000 ரூபாய் கொடுக்கிறேன்.
அண்ணாமலை : சரி எல்லாரும் இனிமே 5ம் தேதிக்குள்ள நீ சொன்னது மாதிரி பணத்தை என்கிட்டே கொடுத்துருங்க.
மனோஜ்: இத வச்சு என்ன செய்யப் போறீங்க பா
அண்ணாமலை : நான் ஒரு முடிவு எடுத்து இருக்கேன் அதுக்கப்புறம் வந்து சொல்றேன்.
மாடியில் முத்து மற்றும் ரவி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
"மனோஜ்: இவ்வளவு நாள் இல்லாம அப்பா எதுக்கு இப்ப பணம் கேட்கணும்? ஒருவேளை நம்ம எல்லார்கிட்டயும் பணம் வாங்கி அம்மாவும் அப்பாவும் அந்த பணத்தை வைத்து தனியா வீடு பார்த்து போகப் போறாங்களா?"
முத்து மனோஜை அடிக்கப் போகிறான் ரவி அவனை தடுத்து விடுகிறான்.
"ரவி: எனக்கும் அந்த யோசனை இருந்துச்சு அப்படி பண்றதுக்கு பதிலா பேசாம இந்த வீடு வித்துட்டு எல்லாரும் ஆளாளுக்கு ஒரே பிளாட்டில் தனி வீட்டில் இருந்துக்கலாம்.
முத்து : அப்பா என்னைக்குமே நம்ம கூட தான் இருப்பா.ரு அவரும் அதை தான் ஆசை படுவாரு. அத பத்தி யோசிக்காம நீங்க எல்லாம் ஏன் தனியா போகணும்னு பேசுறீங்க?"
மனோஜ் பிசினெஸ் பற்றி பெருமையாக பேச முத்துவும் மனோஜுக்கும் சண்டை வருகிறது. அத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட் முடிவு வந்தது.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
உலகம்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion