மேலும் அறிய
Advertisement
Siragadikka Aasai Serial July 4: பாட்டி தரும் பரிசு; குடும்பத்தில் போட்டி: டென்ஷனில் மீனா - சிறகடிக்க ஆசை அப்டேட்
Siragadikka Aasai today: பாட்டிக்கு பரிசு கொடுத்து அசத்தி அந்த சர்ப்ரைஸ் பரிசை பாட்டியிடம் இருந்து வாங்கிவிட வேண்டும் என வீட்டில் உள்ள அனைவரும் போட்டிபோட்டுக் கொண்டு யோசிக்கிறார்கள்.
Siragadikka Aasai Serial July 4: விஜய் டிவியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில் பாட்டியின் 80வது பிறந்தநாளுக்கு என்ன பரிசளிக்கலாம் என அனைவரும் டிஸ்கஸ் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
"ரோகிணி: நான் பாட்டிக்கு மேக் ஓவர் பண்ணிவிடலாம் என நினைக்கிறன். ஆனா வேற ஏதாவது பண்ணனும். நீ தான் பாட்டியோட முதல் பேரன். அவங்களுக்கு என்ன பிடிக்கும்னு உனக்கு தெரியாதா?
மனோஜ்: நான் சின்ன வயசுல இருக்கும்போது அவங்க ஒரு நவரத்ன மாலை போட்டு இருப்பாங்க. அது தொலைஞ்சு போச்சு. நாம இப்போ அதை வாங்கி கொடுக்கலாம்" என முடிவெடுத்து கடைக்கு கிளம்புகிறார்கள்.
"ஸ்ருதி: நான் பாட்டிக்கு ஒரு போன் கிஃப்ட் பண்ண போறேன். நீ என்ன பா பாட்டிக்கு பண்ண போற?
ரவி: நான் பாட்டிக்கு ஒரு கேக் செஞ்சு அசத்தலாம் என நினைக்கிறேன்" என பேசிக் கொள்கிறார்கள்.
விஜயாவுக்கு அந்த சர்ப்ரைஸ் பரிசை வாங்க வேண்டும் என ஆசையாக இருக்கிறது. அண்ணாமலையிடம் சென்று மாமியாருக்கு ஏதாவது வாங்கி கொடுக்க வேண்டும் என சொல்கிறாள். அதை கேட்ட அண்ணாமலைக்கு அதிர்ச்சியாக இருக்கிறது.
விஜயா பார்வதிக்கு போன் செய்து பரிசு வாங்க ஐடியா கேட்பது போல பார்வதி வீட்டில் உபயோகம் இல்லாமல் இருக்கும் பெரிய டிவியை கொடுக்க சொல்கிறாள். பார்வதியும் வேறு வழியில்லாமல் எடுத்துக்கொண்டு வருகிறேன் என்கிறார். மீனாவுக்கு சீதா போன் செய்து அவளுடைய போனை எடுத்து வந்து கொடுக்கிறாள்.
"சீதா: எதுக்காக அக்கா போன் கேட்ட?
மீனா : பாட்டியோட பிறந்தநாள் இல்லையா. அதனால வீடியோ ஒன்னு எடுத்து அவங்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கலாம் என நினைச்சேன். அப்புறமா போனை வாங்கிக்கோ".
சீதா: அக்கா நான் ஒரு விஷயம் கேள்விப்பட்டேன். தப்பா நினைச்சுக்காத. நாம வழக்கமா பூ கொடுக்குற நகைக்கடைக்கு போனேன். அங்க நீ ஏதோ கவரிங் நகையை எடுத்துட்டு போனதா சொல்றாங்களே? என்ன ஆச்சு? ஏதாவது பிரச்சினையா ?
மீனா: அதெல்லாம் ஒன்னும் இல்லை. எங்க வீட்ல நடக்குற விஷயத்தை நான் உன்கிட்ட சொல்லணும் என எந்த அவசியம் இல்லை" என சீதாவை அனுப்பி வைக்கிறாள் மீனா.
மீனா பாட்டியை பல இடங்களில் நிற்கவைத்து பேசவைத்து வீடியோ எடுக்கிறாள். முத்துவை காணவில்லை என பாட்டியும் அண்ணாமலையும் மாறிமாறி மீனாவிடம் கேட்கிறார்கள். அதைப் பார்த்து மீனாவுக்கு பதட்டமாகிவிடுகிறது. பாட்டிக்கு செயின் வாங்க முடியலையே என்ற வருத்தத்தில் முத்து குடிக்கப் போய் இருப்பாரோ என சந்தேகம் வந்து விடுகிறது. மீனா போன் செய்து பார்த்தும் முத்து எடுக்கவில்லை என்பதால் பதட்டம் அதிகமாகிறது.
ஆனால் முத்துவும் செல்வமும் ஏதோ வேலையாக அழைக்கிறார்கள். அதனால் தான் மீனாவின் போனை அவனால் எடுக்க முடியாமல் போகிறது. இதுதான் இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட் கதைக்களம்.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion