மேலும் அறிய
Advertisement
Siragadikka Aasai serial July 22 : இது தேவையா விஜயா? மனோஜுக்கு வந்த புது ஆப்பு... சிறகடிக்க ஆசையில் இன்று
Siragadikka Aasai today :விஜயா மீது இருக்கும் கோபம் அண்ணாமலை கொஞ்சம் கூட குறையவில்லை. மனோஜுக்கு வந்த புதிய பிரச்னையை ரோகிணி எப்படி சமாளிக்கிறாள்.
Siragadikka Aasai Serial July 22 : விஜய் டிவியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலின் இன்றைய எபிசோடில் மனோஜும் விஜயாவும் சேர்ந்து நகையை மாற்றிய விஷயத்திற்காக மீனா மற்றும் முத்துவிடம் மன்னிப்பு கேட்கிறார் அண்ணாமலை. மீனாவும் முத்துவும் "நகையை யார் மாற்றியது என்பதை தெரிந்து கொள்ள தான் இது போல செய்தோமே தவிர யார் மீதும் பழி போடுவதற்காக இப்படி செய்யவில்லை" என சொல்கிறார்கள்.
முத்து : அம்மா பாவம் என்ன பண்ணுவாங்க. அந்த மனோஜ் பண்ண வேலை தான்
அண்ணாமலை : மனோஜ் கேட்டு இருந்தாலும் இவ எடுத்து கொடுத்தது தப்பு தானே. வேற ஒரு பொண்ணா இருந்து இருந்தா இந்த பிரச்சினை பெருசா ஆகி இருக்கும். மீனவா இருக்க போக அமைதியா இருக்கா. அதையும் விஜயா புரிஞ்சுக்காம மீனாவை மேலும் காயப்படுத்துறா" என சொல்கிறார்.
விஜயா வரவும் மீனாவும் முத்துவும் உள்ளே சென்று விடுகிறார்கள். முத்து கேட்டதற்காக பூரி மசாலா, குருமா எல்லாம் சமைத்து வைக்கிறாள் மீனா. விஜயா அதைப் பார்த்து புருஷனும் பொண்டாட்டியும் ரொம்ப சந்தோஷமாக இருக்கீங்க போல என சொல்கிறாள்.
"மீனா : நேத்து நடந்த பிரச்சினையில்ல யாருமே சரியா சாப்பிடலை. அது தான் எல்லாருக்கும் புடிச்ச மாதிரி ஏதாவது செஞ்சா நல்லா இருக்கும்னு தான் பண்ணேன். சாப்பிட வாங்க.
விஜயா : எனக்கு எதுவும் தேவை இல்லை. நீயும் உன்னோட புருஷனும் நல்ல சாப்பிடுங்க" என்கிறாள்.
ரோகிணியின் மனோஜும் ஆஃபீஸ் கிளப்ப ரோகினி நாங்க வெளியே சாப்பிட்டு கொள்கிறோம் எங்களுக்கு எதுவும் வேண்டாம் என சொல்ல மனோஜ் நாமளும் மாச மாசம் பணம் கொடுக்கிறோம். அதனால் எதுக்கு காசு வேஸ்ட் பண்ணனும். வீட்டிலேயே சாப்பிடலாம் என சொல்கிறான். ரோகிணி விஜயாவையும் வலுக்கட்டாயப்படுத்தி சாப்பிட அழைத்து செல்கிறாள். விஜயாவை பார்த்ததும் நான் அப்புறம் சாப்பிட்டு கொள்கிறேன் என அண்ணாமலை வெளியில் கிளப்பி விடுகிறார். மீனாவிடம் மட்டும் சொல்லிவிட்டு செல்லவும் விஜயா முகமே மாறிவிடுகிறது.
முத்து சாப்பிடும் போது மனோஜை அசிங்கப்படுத்தி பேச ரோகிணி மனோஜுக்கு சப்போர்ட் பண்ணி "நாங்க தான் உங்க பணத்தை திருப்பி குடுத்துறோம்னு சொல்லிட்டோம் இல்ல. சும்மா ஏன் அசிங்கப்படுத்தி பேசுறீங்க" என கோபப்படுகிறாள். முத்து ரோகிணியையும் ஜாக்கிரதையாக இருக்க சொல்லி அட்வைஸ் செய்கிறான்.
ஸ்ருதி வேலைக்கு கிளம்பும் போது மீனா ஸ்ருதியிடம் பேச வேண்டும் என சொல்கிறாள்.
மீனா :இங்க நடந்த விஷயத்தை உங்க வீட்ல சொல்லாதீங்க. இது அத்தை சம்பந்தப்பட்டு இருக்காங்க. அதனால அது அவங்களுக்கு அவமானமா இருக்கும். அவங்க வயசுல பெரியவங்க இல்லையா. என்னோட வீட்ல கூட நான் சொல்ல மாட்டேன். ப்ளீஸ் எனக்காக சொல்லாதீங்க.
ஸ்ருதி : தப்பு யார் பண்ணாலும் தப்பு தான். நீங்க சொன்னதால நான் என்னோட வீட்ல எதையும் சொல்லலை" என்கிறாள் ஸ்ருதி. மீனா பேசுவதை ரூமில் இருந்து விஜயா கேட்டுவிடுகிறாள்.
மனோஜ் மிகவும் கவலையுடன் ஷோரூமில் உட்கார்ந்து இருக்கான். ரோகிணி வந்து சமாதானம் செய்கிறாள். அந்த நேரம் கான்ஸ்டபிள் ஒருவர் கடைக்கு வருகிறார்.
போலீஸ் : உங்க கடையில் திருட்டு போன பொருட்களை வாங்கிய ஒருவர் பொருளை திருப்பி தருகிறேன் ஆனால் அதற்கு அவர் கட்டிய பணத்தை திருப்பி தர சொல்கிறார். அது எப்படி தர முடியும் என சொல்ல ரோகிணி சரி நாங்கள் கொடுத்துவிடுகிறோம் என சொல்கிறாள்.
ஜீவா கொடுத்த பணத்தில் மீதம் இருக்கும் பணத்தில் இருந்து இவருக்கும் முத்துவுக்கும் கொடுத்து விடலாம் என சொல்கிறாள் ரோகிணி. இவர்கள் பேசுவதை கடையில் வேலை செய்யும் இருவர் கேட்டு "இவனை நல்ல ஏமாந்திடலாம்போல" என கிண்டல் செய்கிறார்கள்.
அண்ணாமலைக்கு பயங்கரமான இருமல் வர விஜயா ஓடி வந்து தண்ணீர் கொடுத்ததும் அதை வாங்காமலே அவராகவே சென்று தண்ணீர் எடுத்து குடித்து கொள்கிறார். இதை பார்த்த மீனாவும் முத்துவும் மனசு கஷ்டப்பட விஜயாவோ அவமானத்தில் கோபித்து கொண்டு உள்ளே சென்று விடுகிறாள். இது தான் இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோடுக்கான கதைக்களம்.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
சென்னை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion