மேலும் அறிய

Siragadikka Aasai serial Aug 7: மீண்டும் மீனா குடும்பத்தை அசிங்கப்படுத்தும் விஜயா... மனோஜ் எடுக்க போகும் முட்டாள்தனமான முடிவு

Siragadikka Aasai Today : சீதா பாஸ் ஆனதால் மீனாவும் அவளின் குடும்பமும் மிகவும் சந்தோஷமாக இருக்கிறார்கள். அதை கூட பாராட்ட தெரியாமல் அசிங்க படுத்துகிறாள் விஜயா. இன்று சிறகடிக்க ஆசையில் என்ன நடக்கிறது.

Siragadikka Aasai Serial August 7 : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான தொடரான 'சிறகடிக்க ஆசை' சீரியலின் இன்றைய எபிசோடில் சீதா காலேஜில் ஃபர்ஸ்ட் கிளாசில் பாஸான விஷயத்தை வீட்டில் உள்ள அனைவரிடத்திலும் சொல்லலாம் என மீனா சொல்கிறாள். அண்ணாமலை இந்த விஷயத்தை கேட்டு மிகவும் சந்தோஷப்படுகிறார். 

"அண்ணாமலை : உங்க அப்பா ஆசையை நீ தான் மீனா நிறைவேத்தி இருக்க. உன்னோட படிப்பை கூட விட்டுட்டு தம்பி தங்கச்சிக்காக கஷ்டப்பட்டு அவங்களை படிக்க வைச்சு இருக்க.

மீனா : நான் என்ன மாமா பண்ணேன். சீதா தான் நல்ல படிச்சு பாஸ் பண்ணி இருக்கா" என்கிறாள். 

விஜயாவிடம் இந்த விஷயத்தை சொல்ல அவள் மிகவும் குத்தலாக என்ன கலெக்டருக்கா படிச்சு பாஸ் ஆகிட்டா. இந்த காலத்துல டிகிரி பாஸ் பண்ணறது எல்லா பெரிய விஷயமா? இத போய் இவ்வளவு பெருசா பேசுறீங்க...

ரோகிணியும் மனோஜும் அங்கு வர விஷயத்தை கேட்டு ரோகிணி வாழ்த்து சொல்கிறாள். ஆனால் மனோஜ் இளக்காரமாக "ஒரு டிகிரி பாஸ் பண்ணறது பெரிய விஷயமா? என்னை மாதிரி நாலு டிகிரி வாங்குறது தான் கஷ்டம்" என பெருமையாக பேசி கொள்கிறான்.

"முத்து : நீ அப்பா காசை எல்லாம் புடுங்கி படிச்ச. உனக்கு வேண்டியது எல்லா உடனே கிடைச்சுது. ஆனால் சீதா மாதிரி எல்லாத்துக்கும் கஷ்டப்பட்டு படிச்சு பாஸ் பண்றது ரொம்ப பெரிய விஷயம். அதெல்லாம் உனக்கு எங்க தெரியப்போகுது" என்கிறான். 

ஸ்ருதியும் ரவியும் கூட இந்த விஷயம் கேட்டு சந்தோஷப்படுகிறார்கள். சீதாவுக்கு பரிசு வாங்கி கொடுக்கலாம் என சொல்கிறாள் ஸ்ருதி. மீனாவும் முத்துவும் சீதாவை பார்ப்பதற்காக கிளம்புகிறார்கள். 

கோயிலில் அனைவரும் சீதாவை பாராட்டுகிறார்கள். சீதாவுக்கு பட்டதாரி கோர்ட் வாங்கி வந்து கொடுத்து அதை மாட்டி கொள்ள சொல்கிறார்கள். சீதா அப்பாவை நினைத்து கரும்பு மிஷனை பார்த்து அழுகிறாள். அவளை சமாதானம் செய்ய சத்யா சீதாவை போட்டோ எடுக்க சொல்கிறான். அனைவரும் சேர்த்து சந்தோஷமாக போட்டோ எடுத்து கொள்கிறார்கள். மீனாவும் முத்துவும் வந்து அனைவருக்கும் ஸ்வீட் கொடுத்து சந்தோஷத்தை வெளிப்படுத்துகிறார்கள். 


சீதா குடும்பத்தை நினைத்து பொறுப்பாக படித்து பாஸ் செய்ததை பெருமையாக சொல்லி வாழ்த்துகிறான். மேல் படிப்பு படிக்கணும் என்றாலும் நான் படிக்க வைக்கிறேன் என சொல்கிறான் முத்து.

"சீதா : இல்ல மாமா நான் படிக்க போறது இல்ல. வேலைக்கு போக போறேன். அம்மாவும் மீனாவும் எனக்காக ரொம்ப கஷ்டப்பட்டுட்டாங்க. அவங்களை நான் நல்லபடியா பாத்துக்கணும்" என்கிறாள். 

"மீனா : சத்யா, நீயும் சீதா மாதிரி படிச்சு பெரிய ஆளா வரணும்

முத்து : தேவியில்லாததை நினைத்து ஆசைப்படாத. அதுக்கு எல்லாம் பொறுப்பு என ஒன்னு வேணும். குடும்பம் கஷ்டபடுதே அவங்களுக்காக நாம  ஒழுங்கா இருக்கணும். ஊதாரி தனமாக சுத்த கூடாது என தெரியணும்" என்கிறான். அதை கேட்டு சத்யாவுக்கு கோபம் வருகிறது. 

சீதா கோர்ட்டை மீனாவுக்கு மாட்டி போட்டோ எடுத்து கொள்கிறாள். "உன்னால தான் அக்கா நான் இந்த நிலைமையில இருக்கேன்" என சொல்லி நன்றி சொல்கிறாள். 

மீனாவை கொஞ்ச நேரம் அம்மா தங்கையுடன் இரு என சொல்லிவிட்டு முத்து கிளம்புகிறான். "என்ன சீதாவை பாராட்டுற மாதிரி என்னை அவமானப்படுத்துறாரா?" என சத்யா சொல்ல "அவர் பேச்சே அப்படித்தான். அக்கறையை கூட அதட்டலாக தான் சொல்வார்" என்கிறாள் மீனா.

 

அடுத்த நாள் மனோஜும் ரோகிணியும் ஷோரூமில் கணக்கு பார்க்க அப்போது பணம் குறைவது பற்றி ரோகிணி மனோஜிடம் கேட்கிறாள். வீட்டுக்கு போய் சாப்பிட முடியல என மதியம் ஹோட்டல் போய் சாப்பிடுறேன். நான் ஒரு பிசினஸ் மேன். சாதாரண இடத்தில் எப்படி சாப்பிட முடியும் அதனால நல்ல ஹோட்டலா போய் சாப்பிடுவேன் என்கிறான். நீ உன்னோட செலவை குறைச்சுக்கணும் இல்ல கஷ்டம் தான் என்கிறாள் ரோகிணி. அப்போது பேங்கில் இருந்து வந்த ஒருவர் உங்களுடைய கணக்கு வழக்குகளை பார்த்து 10 லட்சம் லிமிட் உள்ள கிரெடிட் கார்டு வழங்குகிறோம் என்றதும் மனோஜ் வாயை பிளந்து பார்க்கிறான். அத்துடன் இன்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது. 

 

தலைப்பு செய்திகள்

CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Embed widget