மேலும் அறிய

Siragadikka Aasai serial August 23: வீடே மணக்க மணக்க மீனா செய்த சிக்கன் குழம்பு... விஜயாவுக்கு காத்திருந்த அல்வா! சிறகடிக்க ஆசையில் இன்று

Siragadikka Aasai Today : முத்துவும் மீனாவும் மீண்டும் ராசியானதால் கோபத்தில் கொந்தளிக்கும் விஜயாவுக்கு மீனா கொடுத்த அல்வா. இன்று சிறகடிக்க ஆசையில் என்ன நடக்கிறது.

Siragadikka Aasai serial August 23 : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலின் இன்றைய (ஆகஸ்ட் 23 ) எபிசோடில் முத்துவை சமாதானம் செய்வதற்காக மீனா மிகவும் ருசியாக சிக்கன் குழம்பு வைக்கிறாள். அந்த வாசனையை வைத்தே அனைவரும் சாப்பிட ஆர்வமுடன் வந்து விடுகிறார்கள். ஸ்ருதி மீனாவின் சமையலை டேஸ்ட் செய்து பார்த்து ஆஹா ஓஹோ என பாராட்டுகிறாள். ஆனால் விஜயா மீனாவை குறை சொல்ல வேண்டும் என்றே ஏதோ சொல்ல ஸ்ருதியின் சப்போர்ட் மீனாவுக்கு எப்போதுமே இருக்கிறது. 

Siragadikka Aasai serial August 23: வீடே மணக்க மணக்க மீனா செய்த சிக்கன் குழம்பு... விஜயாவுக்கு காத்திருந்த அல்வா! சிறகடிக்க ஆசையில் இன்று

ரவி சுவைத்து பார்த்து சூப்பரா இருக்கு அண்ணி எனக்கும் இந்த ரெசிபி சொல்லி கொடுங்க என்கிறான். விஜயா தான் உப்பு கொஞ்சம் தூக்கலாக இருக்கு என குறை சொல்ல "அப்போ நீங்க போய் பிபி செக் பண்ணுங்க ஆண்ட்டி. எங்க எல்லாருக்கும் கரெக்ட்டா தான் இருக்கு" என விஜயாவை ஸ்ருதி கிண்டல் பண்ண "அதெல்லாம் ஒன்னும் இல்லை. உப்பு சரியா தான் இருக்கு" என மாத்தி பேசுகிறாள் விஜயா. "ஆண்டிக்கு மீனா குக்கிங்கை பாராட்ட தான் மனசு இல்லை" என அப்படியே உடைத்து விடுகிறாள். 

அனைவரும் ருசித்து சந்தோஷமாக சாப்பிட்டாலும் முத்துவுக்காக தான் மீனா சமைத்தாள், ஆனால் முத்து வீட்டுக்கு வராததால் மீனா கவலையுடன் அவனை எதிர்பார்த்து காத்திருக்கிறாள். சிக்கன் கிரேவியை மொத்தமாக அனைவரும் சேர்ந்து காலி செய்துவிடுகிறார்கள். 

Siragadikka Aasai serial August 23: வீடே மணக்க மணக்க மீனா செய்த சிக்கன் குழம்பு... விஜயாவுக்கு காத்திருந்த அல்வா! சிறகடிக்க ஆசையில் இன்று

லேட்டாக தான் முத்து வீட்டுக்கு வருகிறான். மீனாவிடம் கையை காட்டு என சொல்லி வாங்கி வந்த அல்வாவை கொடுக்கிறான். "கோபம் இருந்துச்சு. ஆனா இப்போ இல்ல. நீ உன்னோட தம்பி பிறந்தநாளுக்கு தானே போன. தம்பி தங்கச்சிகிட்ட பேச கூடாதுனு எல்லாம் நான் சொல்ல மாட்டேன். எனக்கு சத்யாவை ரொம்ப புடிக்கும். ஆனால் அவன் சிட்டியோட சேர்ந்து சுத்துறது தான் எனக்கு பிடிக்கல" என்கிறான் முத்து. அதை பார்த்து சந்தோஷமான மீனா "நீங்க சத்யா மேல இருக்க அக்கறைல தான் சொல்றீங்கன்னு தெரியும். அவனும் அதை புரிந்து கொள்வான்" என்கிறாள் மீனா. இவர்கள் பேசிக்கொள்வதை விஜயா கேட்டு காண்டாகிறாள். 

"எனக்கு ரொம்ப பசிக்குது. சாப்பாடு எடுத்து வை" என முத்து சொல்ல அந்த நேரம் ரவி வெளியில் வந்தது மீனாவின் சமையலை ஆஹா ஓஹோ என பாராட்டி "உனக்கு வைக்க முடியாம போயிடுச்சு" என சொல்கிறான். "ஒரு சட்டி குழம்பையும் காலி பண்ணிடீங்களா " என முத்து ஷாக்காகிறான். "உங்களுக்கு பரிமாறதுக்கு முன்னாடியே நான் அவருக்காக தனியா எடுத்து வைச்சுட்டேன்" என மீனா ரவியிடம் சொல்ல சூப்பர் அண்ணி என ரவியும் பாராட்டுகிறான். பின்னர் முத்துவும் மீனாவும் உட்கார்ந்து சாப்பிடுகிறார்கள். மீனா அல்வாவை எடுத்து சாப்பிட அப்போது விஜய் அங்கு வந்தது பார்த்து "அல்வா நல்லா இருக்கு அத்தை. எடுத்துக்கோங்க " என கொடுக்கிறாள்.

Siragadikka Aasai serial August 23: வீடே மணக்க மணக்க மீனா செய்த சிக்கன் குழம்பு... விஜயாவுக்கு காத்திருந்த அல்வா! சிறகடிக்க ஆசையில் இன்று

அடுத்த நாள் காலை மனோஜ் ஷோ ரூம் செல்ல ரெடியாகி வர காட்டில் காலில் இடித்து கொள்கிறான். அப்போது வீட்டுக்கு வந்த பார்வதி இது நல்லது இல்ல என சொல்லவும் "வாங்க அம்மா நாம உடனே போய் ஜோசியரை பார்க்கலாம். இது கெட்ட சகுனம்" என்கிறான் மனோஜ். "கட்டிலை இப்படி நடு ஹாலில் போட்டு வைத்தால் போக வர இப்படி தான் இடிக்கும் என சொன்னேன்" என்கிறார் பார்வதி. முத்துவையும் மீனாவியும் அழைத்து இந்த கட்டிலை கொண்டு போய் வெளியில் போடுங்க என்கிறாள் விஜயா. இது தான் இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட் கதைக்களம்.

தலைப்பு செய்திகள்

Heatwave: உஷார் மக்களே! இந்த 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் கொடுத்த வார்னிங்
உஷார் மக்களே! இந்த 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் கொடுத்த வார்னிங்
ஏமாற்றத்தில் 1.5 லட்சம் இளைஞர்கள்; எப்போ அரசு வேலை? தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி!
ஏமாற்றத்தில் 1.5 லட்சம் இளைஞர்கள்; எப்போ அரசு வேலை? தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி!
Honda ZR-V Review: செம மைலேஜ், இன்ஜின், இட வசதி..ஹோண்டா ZR-V ஹைப்ரிட் SUV பிளஸ், மைனஸ் என்ன? முழு ரிவ்யூ!
Honda ZR-V Review: செம மைலேஜ், இன்ஜின், இட வசதி..ஹோண்டா ZR-V ஹைப்ரிட் SUV பிளஸ், மைனஸ் என்ன? முழு ரிவ்யூ!
TN Govt: 17ம் நூற்றாண்டு பில்டிங்கிற்கு டாடா, சென்னைக்கு வெளியே புதிய தலைமை செயலகம்? CM விஜய் ப்ளான்
17ம் நூற்றாண்டு பில்டிங்கிற்கு டாடா, சென்னைக்கு வெளியே புதிய தலைமை செயலகம்? CM விஜய் ப்ளான்

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Heatwave: உஷார் மக்களே! இந்த 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் கொடுத்த வார்னிங்
உஷார் மக்களே! இந்த 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் கொடுத்த வார்னிங்
ஏமாற்றத்தில் 1.5 லட்சம் இளைஞர்கள்; எப்போ அரசு வேலை? தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி!
ஏமாற்றத்தில் 1.5 லட்சம் இளைஞர்கள்; எப்போ அரசு வேலை? தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி!
Honda ZR-V Review: செம மைலேஜ், இன்ஜின், இட வசதி..ஹோண்டா ZR-V ஹைப்ரிட் SUV பிளஸ், மைனஸ் என்ன? முழு ரிவ்யூ!
Honda ZR-V Review: செம மைலேஜ், இன்ஜின், இட வசதி..ஹோண்டா ZR-V ஹைப்ரிட் SUV பிளஸ், மைனஸ் என்ன? முழு ரிவ்யூ!
TN Govt: 17ம் நூற்றாண்டு பில்டிங்கிற்கு டாடா, சென்னைக்கு வெளியே புதிய தலைமை செயலகம்? CM விஜய் ப்ளான்
17ம் நூற்றாண்டு பில்டிங்கிற்கு டாடா, சென்னைக்கு வெளியே புதிய தலைமை செயலகம்? CM விஜய் ப்ளான்
Explained | ‘தமிழகத்தில் லாக்கப் மரணங்கள் நடந்தால் என்ன ஆகும்?’ விசாரணை எப்படி நடக்கும்?
’லாக்கப் மரண வழக்குகளில் விசாரணை’ நடைபெறும் முறை இதுதான்..!
Thoothukudi Lock-up Death : 'தூத்துக்குடி இளைஞர் அருணாச்சலம் இறந்தது எப்படி?’ தொடக்க முதல் இறுதி வரை..!
'தூத்துக்குடி இளைஞர் அருணாச்சலம் இறந்தது எப்படி?’ தொடக்க முதல் இறுதி வரை..!
Mannargudi MLA S. Kamaraj : ’மன்னார்குடி MLA காமராஜை தகுதிநீக்கம் செய்யவேண்டும்’ சபாநாயகரிடம் அமமுக பரபரப்பு மனு..!
Mannargudi MLA S. Kamaraj : ’மன்னார்குடி MLA காமராஜை தகுதிநீக்கம் செய்யவேண்டும்’ சபாநாயகரிடம் அமமுக பரபரப்பு மனு..!
LIVE | Kerala Lottery Result Today (24.07.2026): சொர்ண கேரளா லாட்டரி சொர்க்கபோகத்தை கொட்டி கொடுக்குமா? குலுக்கல் முடிவுகள்
LIVE | Kerala Lottery Result Today (24.07.2026): சொர்ண கேரளா லாட்டரி சொர்க்கபோகத்தை கொட்டி கொடுக்குமா? குலுக்கல் முடிவுகள்
Embed widget