மேலும் அறிய

நெஞ்சை உருக்கும் பேரிடர்!  கேரள நிலச்சரிவுக்கு 50 லட்சம் நன்கொடையாக வழங்கிய சூர்யா குடும்பம்!

கேரள வயநாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்த நிலச்சரிவால் ஏராளமானோர் சிக்கி தவித்து வருகிறார்கள். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண நிதியாக நன்கொடை வழங்கியுள்ளனர் சூர்யா குடும்பத்தினர்.

கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த 29 ஆம் தேதி துவங்கிய கனமழை காரணமாக அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. மேப்பாடி, சுரல்மலா மற்றும் முண்டக்கை உள்ளிட்ட பகுதிகள் நிலச்சரிவால்  கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அப்படி ஒரு ஊரே இருந்த இடம் தெரியாத அளவுக்கு நிலச்சரிவு மற்றும் கடுமையான மழையால் அடித்து செல்லப்பட்டுள்ளன.

நெஞ்சை உருக்கும் பேரிடர்!  கேரள நிலச்சரிவுக்கு 50 லட்சம் நன்கொடையாக வழங்கிய சூர்யா குடும்பம்!

இந்த நிலச்சரிவில் சிக்கி 280க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். மண்ணுக்குள் சில உடல்கள் புதைந்து இருப்பதால் இந்த உயிரிழப்பானது மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. பலரின் நிலையும் என்ன என்பதே தெரியாமல் தவித்து வருகிறார்கள் மக்கள். இந்த நிலச்சரிவால் கேரளம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய நாடே சோகத்தில் மூழ்கியுள்ளது. 

கடந்த மூன்று நாட்களாக மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து கனமழை பெய்து கொண்டே இருப்பதால் மீட்பு பணிகள் தாமதமாகி வருகின்றன.  மீட்பு படையினர், பொதுமக்கள், அரசு அதிகாரிகள் என அனைவரும் இந்த மீட்டு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த உடல்களை பார்க்கையில் அனைவரையும் அது நிலை குலைய வைக்கிறது. ஒட்டுமொத்த வயநாடு பகுதியே ஆறு போல காட்சி அளிக்கிறது. 

இந்த நிலச்சரிவால் சிக்கிய மக்களுக்கு பல தரப்பில் இருந்தும் நன்கொடை வந்து கொண்டு இருக்கின்றன. கேரள அரசும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக பொது மக்களிடம் நன்கொடை வசூலித்து வருகிறது. அந்த வகையில் திரையுலகை சேர்ந்த நடிகர் நடிகைகளும் அவர்களால் முடிந்த நன்கொடை தொகையை வழங்கி வருகிறார்கள். நடிகர் விக்ரம் 20 லட்சம் ரூபாயையும், நடிகை ராஷ்மிகா மந்தனா 10 லட்சம் ரூபாயையும் நிவாரண நிதிக்காக வழங்கியுள்ளனர். 

நெஞ்சை உருக்கும் பேரிடர்!  கேரள நிலச்சரிவுக்கு 50 லட்சம் நன்கொடையாக வழங்கிய சூர்யா குடும்பம்!

அந்த வகையில் நடிகர் சூர்யா, நடிகர் கார்த்தி மற்றும் நடிகை ஜோதிகா மூவரும் சேர்ந்து கேரளாவின் நிலச்சரிவு நிவாரண பணிகளுக்காக ரூபாய் 50 லட்சத்தை கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் வழங்கியுள்ளனர். மேலும் நிலச்சரிவால் உயிர் இழந்தவரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து கொண்டனர். பலரும் இந்த நிவாரண நிதிக்காக பங்களிப்பை வழங்கி வருகிறார்கள். 

பல உயிர்களை பலி வாங்கிய நிலச்சரிவுக்கு தன்னுடைய எக்ஸ் தள பக்கம் மூலம் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொண்டார் நடிகர் சூர்யா. "வயநாடு நிலச்சரிவில் சிக்கிய குடும்பங்களை நினைக்கையில் நெஞ்சை உலுக்குகிறது. மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு உதவி செய்யும் அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் மற்றும் களத்தில் இறங்கி உதவி செய்யும் மக்களுக்கு நான் மரியாதையுடன் தலைவணங்குகிறேன்" என குறிப்பிட்டு இருந்தார். 

தலைப்பு செய்திகள்

TNEA Rank List: பொறியியல் தரவரிசைப் பட்டியல் வெளியீடு- காண்பது எப்படி? 10 பேர் முழு மதிப்பெண்கள்!
TNEA Rank List: பொறியியல் தரவரிசைப் பட்டியல் வெளியீடு- காண்பது எப்படி? 10 பேர் முழு மதிப்பெண்கள்!
TVK Vijay: தவெக வாஷிங் மெஷின்..! சொன்னதெல்லாம் கட்டுக்கதையா அண்ணா? CM விஜய்க்கு சரமாரி கேள்விகள்
தவெக வாஷிங் மெஷின்..! சொன்னதெல்லாம் கட்டுக்கதையா அண்ணா? CM விஜய்க்கு சரமாரி கேள்விகள்
TN CM VIJAY : அப்போ NO.. இப்போ OK.. தவெகவின் இரட்டை வேடம்.? ஆதாரத்தோடு அடித்து நொறுக்கும் சமூக ஆர்வலர்கள்
அப்போ NO.. இப்போ OK.. தவெகவின் இரட்டை வேடம்.? ஆதாரத்தோடு அடித்து நொறுக்கும் சமூக ஆர்வலர்கள்
Commercial Cooking Gas Price: காலையிலேயே குஷி.! அதிரடியாக குறைந்தது சிலிண்டர் விலை- எவ்வளவு தெரியுமா.?
காலையிலேயே குஷி.! அதிரடியாக குறைந்தது சிலிண்டர் விலை- எவ்வளவு தெரியுமா.?

வீடியோ

Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை
TVK Reels Viral Video : எம்.எல்.ஏ CHAIR-ல் தவெகவினர்! தொடரும் ரீல்ஸ் அட்டூழியம்.. வைரல் வீடியோ
CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNEA Rank List: பொறியியல் தரவரிசைப் பட்டியல் வெளியீடு- காண்பது எப்படி? 10 பேர் முழு மதிப்பெண்கள்!
TNEA Rank List: பொறியியல் தரவரிசைப் பட்டியல் வெளியீடு- காண்பது எப்படி? 10 பேர் முழு மதிப்பெண்கள்!
TVK Vijay: தவெக வாஷிங் மெஷின்..! சொன்னதெல்லாம் கட்டுக்கதையா அண்ணா? CM விஜய்க்கு சரமாரி கேள்விகள்
தவெக வாஷிங் மெஷின்..! சொன்னதெல்லாம் கட்டுக்கதையா அண்ணா? CM விஜய்க்கு சரமாரி கேள்விகள்
TN CM VIJAY : அப்போ NO.. இப்போ OK.. தவெகவின் இரட்டை வேடம்.? ஆதாரத்தோடு அடித்து நொறுக்கும் சமூக ஆர்வலர்கள்
அப்போ NO.. இப்போ OK.. தவெகவின் இரட்டை வேடம்.? ஆதாரத்தோடு அடித்து நொறுக்கும் சமூக ஆர்வலர்கள்
Commercial Cooking Gas Price: காலையிலேயே குஷி.! அதிரடியாக குறைந்தது சிலிண்டர் விலை- எவ்வளவு தெரியுமா.?
காலையிலேயே குஷி.! அதிரடியாக குறைந்தது சிலிண்டர் விலை- எவ்வளவு தெரியுமா.?
TN Weather Update: எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை, தமிழக வானிலை அறிக்கை
எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Sierra EV Price List: சியாரா மின்சார எடிஷனின் வேரியண்ட், விலை, கலர்..! பேட்டரிக்கு லைஃப் டைம் வாரண்டி உண்மையா?
சியாரா மின்சார எடிஷனின் வேரியண்ட், விலை, கலர்..! பேட்டரிக்கு லைஃப் டைம் வாரண்டி உண்மையா?
Anbumani Pmk: மேகதாது அணை கட்டக்கூடாது.! பிலிகுண்டுலு முதல் பூம்புகார் வரை விழிப்புணர்வு பயணம்- அன்புமணி அதிரடி
மேகதாது அணை கட்டக்கூடாது.! பிலிகுண்டுலு முதல் பூம்புகார் வரை விழிப்புணர்வு பயணம்- அன்புமணி அதிரடி
EV Velu Case: மாஜி அமைச்சர் எ.வ. வேலுவுக்கு ஸ்கெட்ச் போட்ட விஜய்.! லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் - அலறும் திமுக
மாஜி அமைச்சர் எ.வ. வேலுவுக்கு ஸ்கெட்ச் போட்ட விஜய்.! லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் - அலறும் திமுக
Embed widget