மேலும் அறிய

Pandavar Illam: 1216 எபிசோடுகள் ஓடி முடிந்த 'பாண்டவர் இல்லம்'.. கண்ணீர்மல்க விடைபெற்ற சீரியல் குடும்பம்!

Pandavar illam : முடிவுக்கு வரும் பாண்டவர் இல்லம் சீரியலின் இறுதி நாள் படப்பிடிப்பு அன்று கேக் வெட்டி கொண்டாடிய பாண்டவர் இல்லம் குடும்பத்தினர்.

வெள்ளித்திரைக்கு இணையாக மக்கள் மனதில் நீங்காத ஒரு இடத்தை பிடித்துள்ளது சின்னத்திரை தொடர்கள். ஏராளமான தொலைக்காட்சி சேனல்கள் போட்டி போட்டுக் கொண்டு சீரியல்களை ஒளிபரப்பானாலும் சன் டிவி சீரியல்களுக்கு என்றுமே சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மவுசு அதிகம். 

Pandavar Illam: 1216 எபிசோடுகள் ஓடி முடிந்த 'பாண்டவர் இல்லம்'.. கண்ணீர்மல்க விடைபெற்ற சீரியல் குடும்பம்!

பகல் நேர எண்டர்டெய்னர் :

காலை முதல் இரவு வரை எண்ணற்ற சீரியல்கள் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் குடும்பப் பெண்களை பகல் நேரத்தில் ஆக்கிரமித்த ஒரு தொடர் என்றால் அது கடந்த 2019ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டவர் இல்லம்' சீரியல் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 
திங்கள் முதல் சனி வரை பகல் 11.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் பாப்ரி கோஷ் , ஆர்த்தி சுபாஷ், கிருத்திகா அண்ணாமலை, நரேஷ் ஈஸ்வர், குகன் சண்முகம், நேசன் நெப்போலியன், சுரேந்தர் ராஜ், முகமது அப்சார், அனு சுலாஷ் மற்றும் அனிஷா ஷெட்டி மற்றும் பலர் நடித்திருந்தனர். 

குடும்ப கதைக்களம் :

பெரிய சுந்தரம் பாண்டவரும் அவரின் ஐந்து பேரன்களையும் ஒழுக்கமாகவும் கண்டிப்புடனும் வளர்த்து வருகிறார். அவர்களில் ஒருவரின் மனைவியாக வரும் மருமகள் பழைய பகையை மனதில் வைத்துக் கொண்டு அவர்களுக்குள் இருக்கும் ஒற்றுமையைக் கெடுத்து பிரிக்க வேண்டும் என பல பிளான்களை போடுகிறாள். இறுதியில் அவர்கள் குடும்பம் ஒன்று இணைந்ததா, என்ன ஆனது என ஐந்து பேரன்களில் வாழ்க்கையை சுற்றி நகரும் இந்த குடும்ப கதைக்களம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. 

Pandavar Illam: 1216 எபிசோடுகள் ஓடி முடிந்த 'பாண்டவர் இல்லம்'.. கண்ணீர்மல்க விடைபெற்ற சீரியல் குடும்பம்!

டி.ஆர்.பி ரேட்டிங் :

நகைச்சுவை கலந்து இருந்ததால் குடும்பத் தலைவிகளை மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக சின்னத்திரை ரசிகர்களை கவர்ந்த இந்த ஜமீன் குடும்பத்தினரின் 'பாண்டவர் இல்லம்' சமீப காலமாக டி.ஆர்.பி ரேட்டிங்கில் குறைந்து வந்தது. அதனால் இந்தத் தொடரை முடிவுக்கு கொண்டு வர முடிவு எடுத்தனர். இந்தத் தகவல் இணையத்தில் வெளியானதில் இருந்தே ரசிகர்களை கவலை தொற்றி கொண்டது. 

இறுதி நாள் கொண்டாட்டம் :

பாண்டவர் இல்லம் சீரியலின் இறுதி நாள் படப்பிடிப்பு அக்டோபர் 17ஆம் தேதி அன்று நடைபெற்றது. இறுதி நாளை சீரியல் குழுவினர் அனைவரும் ஒன்று சேர்ந்து கேக் வெட்டி கோலாகலமாக கொண்டாடினர். 1216 எபிசோட் வரை ஒளிபரப்பான பாண்டவர் இல்லம் தொடரை முடிந்ததால் அதன் தீவிர ரசிகர்கள் மிகவும் வருத்தமாக உள்ளனர். 

1216 எபிசோட்களை நிறைவு செய்ததால் கேக்கில் 1216 என குறிப்பிட்டு ஆரவாரத்துடன் அதை வெட்டி இறுதி நாள் படப்பிடிப்பில் கொண்டாடினார்கள். அன்று எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி லைக்ஸ்களை அள்ளி வருகிறது.   

தலைப்பு செய்திகள்

Parliament Session: அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
Cauvery Issue: ”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
TVK:
TVK: "டம்மி டாடி.. சாப்பிட்டு ஓய்வெடுங்கள்.." மு.க.ஸ்டாலினை தாறுமாறாக விமர்சித்த தவெக
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Parliament Session: அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
Cauvery Issue: ”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
TVK:
TVK: "டம்மி டாடி.. சாப்பிட்டு ஓய்வெடுங்கள்.." மு.க.ஸ்டாலினை தாறுமாறாக விமர்சித்த தவெக
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Reliance: ”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
Jailer 2: ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த நமோ நாராயணா.. ஜெயிலர் 2-வால் புதிய தொடக்கம்!
Jailer 2: ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த நமோ நாராயணா.. ஜெயிலர் 2-வால் புதிய தொடக்கம்!
Embed widget