![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Pandian Stores : காணாமல் போன கேரக்டரில் மீண்டும் ஒரு புது என்ட்ரி... பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இணையும் பிரபலம்
விஜய் டிவியின் பிரபலமான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மீனாவின் தங்கையாக நடித்து வந்த கீர்த்தி விலகியதால் புதிதாக என்ட்ரி கொடுக்கிறார் பாவ்யாஸ்ரீ.
![Pandian Stores : காணாமல் போன கேரக்டரில் மீண்டும் ஒரு புது என்ட்ரி... பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இணையும் பிரபலம் New Replacement in Vijay Tv Pandian stores serial Pandian Stores : காணாமல் போன கேரக்டரில் மீண்டும் ஒரு புது என்ட்ரி... பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இணையும் பிரபலம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/06/d75e81fa227ecdf69ab44547e12cf2ba1670344066256224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விஜய் டிவியின் மிகவும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். பலரின் அபிமான தொடராக ஒளிபரப்பாகும் இந்த சீரியலுக்கு ஏராளமான சின்னத்திரை ரசிகர்கள் உள்ளனர். நான்கு சகோதரர்களும் கூட்டு குடும்பமாக இருக்கிறார்கள். அவர்களை சுற்றிலும் நடக்கும் கதையை மையமாக வைத்து இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஸ்டாலின், குமரன் தங்கராஜன், வெங்கட் ரங்கநாதன், சுஜிதா, ஹேமா ராஜ்குமார், சரவணன் விக்ரம் மற்றும் பலர் நடித்து வருகிறார்கள்.
புது முல்லை :
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனித்தனி குணாதிசயங்கள் சிறப்புகள் உள்ளன. மிகவும் ஒற்றுமையோடு வாழும் இந்த குடும்பத்தில் எதிர்பாராத இழப்பாக அமைந்தது முல்லை கதாபாத்திரத்தில் நடித்த வி.ஜே சித்ராவின் இழப்பு. அவரின் கதாபாத்திரத்தில் காவ்யா அறிவுமணி நடித்து வந்தார். அதற்கு பின் புது முல்லையாக நடித்து வந்த காவ்யா அறிவுமணி கதையோடு ஒன்றி விட அவரும் சில காரணங்களால் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து விலகினார். விஜய் டிவியில் ஒளிபரப்பான 'சிப்பிக்குள் முத்து' சீரியல் மூலம் பிரபலமான லாவண்யா தற்போது முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். முல்லை கதாபாத்திரத்தில் மூன்றாவதாக என்ட்ரியாகியுள்ளார் லாவண்யா என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram
மீண்டும் ஒரு புது என்ட்ரி :
முல்லை கதாபாத்திரத்தை தவிர வேறு ஒரு கதாபாத்திரமும் அடிக்கடி மாற்றப்பட்டது மட்டுமின்றி காணாமலே போனது. அது தான் மீனாவின் தங்கை கதாபாத்திரம். இத்தனை நாட்களாக காணாமல் போன மீனாவின் தங்கை தற்போது மீண்டு கதைக்குள் கொண்டு வரப்படுகிறார். அதற்கு காரணம் முல்லையின் அக்கா மல்லியின் மகன் பிரஷாந்திற்கு மீனாவின் தங்கையை பெண் கேட்கிறார் மல்லி. இது தான் அந்த காணாமல் போன கதாபாத்திரம் மீண்டும் வருவதற்கு காரணம். மீனாவின் தங்கை ஸ்வேதாவாக நடித்து வந்த கீர்த்தி கர்ப்பமான காரணத்தால் சீரியலில் இருந்து விலக அவருக்கு பதிலாக பாவ்யாஸ்ரீ புது ஸ்வேதாவாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் என்ட்ரி கொடுக்கிறார். இந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இன்னும் சீரியல் முடிவதற்குள் எத்தனை ரீபிளேஸ்மென்ட் நடக்க போகிறதோ தெரியவில்லை என்பது தான் விஜய் டிவி ரசிகர்களின் மைண்ட் வாய்ஸ்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)