Karthigai Deepam Sep 02: மழையில் கிளம்பிய தீபா.. கார்த்திக் கொடுத்த ஷாக்.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
“எங்க போகுறதுனு தெரியல” என்று சொல்ல, “சரி, என் மேல உங்களுக்கு நம்பிக்கை இருக்குல? நான் கூட்டிட்டு போற இடத்துக்கு வாங்க” என்று சொல்ல தீபாவும் சம்மதம் தெரிவித்து அப்படியே தூங்கி விடுகிறாள்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் தீபாவை காரில் அழைத்து கொண்டு கிளம்ப இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
கார்த்திக் தீபாவிடம் “பொதுவா நான் யாருடைய பெர்சனல் விஷயத்திலும் தலையிட மாட்டேன், ஆனாலும் உங்ககிட்ட கேட்கிறேன், என்ன பிரச்சனை? ஏன் இப்படி முடிவு எடுத்தீங்க” என்று கேள்வி கேட்கிறான். மேலும் “கோயிலுக்கு வர வரைக்கும் நீங்க நல்லபடியா சந்தோஷமாக தான் இருந்தீங்க” என்று கேட்க, தீபா “இப்போ நான் பதில் சொல்ற நிலைமையில் இல்லைங்க” என்று சொல்ல, கார்த்திக் “சரி நீங்க சொல்ல வேண்டாம்” என்று கூறுகிறான்.
“கோயிலுக்கு வந்த பிறகு தீபாவிடம் ஆரம்பத்தில் இருந்தே உன்னை எனக்கு பிடிக்கல, உன்னை என்னால இப்பவும் மருமகளா ஏத்துக்க முடியல, நீ ஏன் இந்த வீட்டு மருமகளாகணும்னு நினைக்கிற” என்று பேசிய விஷயங்கள் தெரிய வருகிறது. அடுத்து கார்த்திக் “சரி உங்களை உங்க வீட்ல டிராப் பண்ணிடுறேன்” என்று சொல்ல, தீபா “அப்பா அங்க வரவே கூடாதுனு ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டாரு அங்க போக முடியாது” என்று சொல்கிறாள்.
மேலும் “எங்க போகுறதுனு தெரியல” என்று சொல்ல, “சரி, என் மேல உங்களுக்கு நம்பிக்கை இருக்குல? நான் கூட்டிட்டு போற இடத்துக்கு வாங்க” என்று சொல்ல தீபாவும் சம்மதம் தெரிவித்து அப்படியே தூங்கி விடுகிறாள். கார்த்திக் நேராக தீபாவின் ஊருக்குள் நுழைய, ஊர் பெரியவர்கள் ஒன்று கூடி திருவிழா நடத்துவது பற்றி பேசி கொண்டிருக்கின்றனர்.
கார்த்திக் காரை கொண்டு வந்து தர்மலிங்கம் வீட்டு வாசலில் நிறுத்தி தீபாவை எழுப்ப கண் திறந்து பார்த்த அவள் அதிர்ச்சி அடைகிறாள். தர்மலிங்கமும் ஜானகியும் இங்க எதுக்கு வந்த என்று கோபப்படுகின்றனர். கார்த்திக் தர்மலிங்கத்தை வீட்டிற்குள் அழைத்துச் சென்று எதையோ பேச, இங்கே மைதிலி வீட்டிற்குள் கூப்பிட தீபா வர மறுக்கிறாள். பிறகு தர்மலிங்கம் வெளியே வந்து தீபாவை உள்ளே கூப்பிடுகிறார். இப்படியான நிலையில் இன்றைய கார்த்திகை தீபம் எபிசோட் நிறைவடைந்தது.