மேலும் அறிய

Ethirneechal: ஈஸ்வரிக்கு நந்தினி போட்ட ஆர்டர்; குணசேகரனுக்கு ஜால்ரா போடும் ஜான்சி: எதிர்நீச்சல் இன்றைய அப்டேட்

Ethirneechal : ஈஸ்வரி மடியில் வைத்து காது குத்த வேண்டும் என்பது தான் நந்தினியின் விருப்பம். தன்னை மதிக்காததால் ஆத்திரத்தில் கொந்தளிக்கும் குணசேகரன். இன்றைய எதிர்நீச்சலில் என்ன நடக்கிறது.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரில் தாராவின் காதுகுத்து விழா பல தடை தடங்கல்களுடன் துவங்கி உள்ளது. கறி சமைக்க கோயிலில் தடை, நந்தினியும் மற்றவர்களும் கோயிலுக்கு வருவதற்காக ஏற்பாடு செய்து வைத்திருந்த காருக்கு பதிலாக டிராக்டர் வந்தது என ஆரம்பமே பிரச்சினையாகவே இருக்கிறது. இது பத்தாது என கரிகாலன் கேலியும் கிண்டலுமாக டிராக்டரை பாலோ செய்து வருகிறான். 
 
Ethirneechal: ஈஸ்வரிக்கு நந்தினி போட்ட ஆர்டர்; குணசேகரனுக்கு ஜால்ரா போடும் ஜான்சி: எதிர்நீச்சல் இன்றைய அப்டேட்
 
விழா நடக்கும் இடத்திற்கு வந்து பிரச்சினை செய்ய கதிருக்கும் கரிகாலனுக்கும்  இடையில் கைகலப்பு ஏற்படுகிறது. இப்படி அடுத்தடுத்த தடைகளை தாண்டி தாராவின் காது குத்து எப்படி நடக்க போகிறது? அவர்கள் இதை நடத்த முக்கிய காரணமான மொய் விருந்து என்னவாக போகிறது? அவர்கள் நினைத்தது போல் மொய் தொகை வருமா? குணசேகரன் இதை கெடுக்க என்ன சதியெல்லாம் செய்யப்போகிறார்? இப்படி பல கேள்விகளுடனும் எதிர்பார்ப்புகளுடனும் எதிர்நீச்சல் கதைக்களம் ஒளிபரப்பாகி வருகிறது. 
 
மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடரின் இன்றைய (மே 23 ) எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. 
 
கரிகாலன் வி.ஐ.பி ஒருவரின் வருகைக்காக தான் வெயிட்டிங் என சொன்னது அனைவரும் எதிர்பார்த்தது போல குணசேகரனை தான். அவரை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். காதுகுத்து விழா துவங்குகிறது. யார் மடியில் வைத்து காது குத்துவது என்ற பேச்சு  அடிபட்டதும் நந்தினி தன்னுடைய விருப்பத்தை சொல்கிறாள். "பெத்தவள் நான் சொல்கிறேன். உங்க மடியில உட்கார வச்சு காது குத்தணும். இப்போ அது என்னுடைய ஆசை" என ஈஸ்வரியை பார்த்து சொல்கிறாள். கதிரிடமும் சம்மதம் கேட்க அவனும் சரி என்கிறான். 
 
Ethirneechal: ஈஸ்வரிக்கு நந்தினி போட்ட ஆர்டர்; குணசேகரனுக்கு ஜால்ரா போடும் ஜான்சி: எதிர்நீச்சல் இன்றைய அப்டேட்
 
ஈஸ்வரி மடியில் உட்கார வைத்து காதுகுத்து துவங்கும் போது அங்கே குணசேகரனும் ஜான்சி ராணியும் வருகிறார்கள். "என்ன வேணும்னாலும் பண்ணட்டும். எனக்கு அதை பத்தி எந்த கவலையும் இல்லை" என குணசேகரன் சொல்ல "கவலை இல்லாதவர் எதுக்கு அப்போ இங்க வந்தீங்க" என ஞானம் கேட்கிறான். "இப்போ அண்ணன் வந்து இருக்கிறது எனக்காக" என ஜான்சி ராணி ஆஜராகிறார்கள். பின்னர் அவர்கள் இருவரும் நம்ம வேலையை பார்ப்போம் என கிளப்புகிறார்கள். 
 
ஏற்கனவே தாராவுக்கு காது குத்தி இருப்பதால் எங்கே குத்துவது என கேட்க "குத்தின இடத்திலேயே குத்திடுங்க" என ரேணுகா சொல்கிறாள். "இல்லை அக்கா தனியாவே குத்தட்டும் " என்கிறாள் நந்தினி. நல்லபடியாக காதுகுத்தும் படலம் நிறைவடைகிறது. தன்னை மதிக்கவில்லையே என ஆத்திரத்தில்  குணசேகரன் கடுப்பில் இருக்கிறார். இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ஹிண்ட். 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Breaking News LIVE: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் - விசாரணை ஆணையம் அமைப்பு, 10 லட்சம் இழப்பீடு

Kallakurichi Illicit Liquor: கணவன்- மனைவி உயிரை பறித்த கள்ளச்சாராயம்... கதறும் கள்ளக்குறிச்சி.. பதறும் தமிழ்நாடு
கணவன்- மனைவி உயிரை பறித்த கள்ளச்சாராயம்... கதறும் கள்ளக்குறிச்சி.. பதறும் தமிழ்நாடு
Health Tips : உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இதை பின்பற்றுங்க!

Kallakurichi Hooch Tragedy: ஆம்புலன்ஸ்க்கு காத்திருக்க முடியாது.. பைக்கில் தூக்கிவரப்பட்ட பாதிக்கப்பட்ட நபர்: தொடரும் சோகம்

metaverse

வீடியோ

Kanchipuram Mayor | Tamilisai Vs Annamalai : அ.மலையை வச்சிகிட்டே சம்பவம் செய்த தமிழிசை! Meeting-ல் நடந்தது என்ன?Cellphone Theft : ’’அண்ணே..1 சிக்கன் ரைஸ்’’செல்போனை திருடிய வாலிபர்..பரபரப்பு சிசிடிவி காட்சிகள்Kallakurichi issue : அடுத்தடுத்து உயிரிழப்பு! மாவட்ட ஆட்சியர் மாற்றம்! கள்ளக்குறிச்சி விவகாரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் - விசாரணை ஆணையம் அமைப்பு, 10 லட்சம் இழப்பீடு
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் - விசாரணை ஆணையம் அமைப்பு, 10 லட்சம் இழப்பீடு
Kallakurichi Illicit Liquor: கணவன்- மனைவி உயிரை பறித்த கள்ளச்சாராயம்... கதறும் கள்ளக்குறிச்சி.. பதறும் தமிழ்நாடு
கணவன்- மனைவி உயிரை பறித்த கள்ளச்சாராயம்... கதறும் கள்ளக்குறிச்சி.. பதறும் தமிழ்நாடு
Health Tips : உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இதை பின்பற்றுங்க!
Health Tips : உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இதை பின்பற்றுங்க!
Kallakurichi Hooch Tragedy: ஆம்புலன்ஸ்க்கு காத்திருக்க முடியாது.. பைக்கில் தூக்கிவரப்பட்ட பாதிக்கப்பட்ட நபர்: தொடரும் சோகம்
Kallakurichi Hooch Tragedy: ஆம்புலன்ஸ்க்கு காத்திருக்க முடியாது.. பைக்கில் தூக்கிவரப்பட்ட பாதிக்கப்பட்ட நபர்: தொடரும் சோகம்
Latest Gold Silver Rate:தொடர்ந்து உயரும் தங்கம் விலை; இன்றைய நிலவரம் எவ்வளவு தெரியுமா?

தமிழக அரசின் அலட்சியம்; கள்ளச்சாராயத்தின் கடந்தகால நிகழ்வுகளை சுட்டிக்காட்டி பொங்கி எழுந்த விஜய்!

Chilli Chicken : ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் சில்லி சிக்கன் செய்வது எப்படி?

OPS On Illicit Liquor: ஸ்டாலின் பதவி விலக வேண்டும் - கள்ளச்சாராய விவகாரத்தில் ஓபிஎஸ் போர்க்கோடி

Embed widget