மேலும் அறிய

Thiruselvam: எதிர்நீச்சல் இயக்குநர் வீட்டில் விசேஷங்க! வாழ்த்துகளை அள்ளித் தெளிக்கும் ரசிகர்கள்!

Thiruselvam : கோலங்கள், எதிர்நீச்சல் சீரியல் மூலம் பிரபலமான இயக்குநராக வலம் வரும் இயக்குநர் திருச்செல்வம் மகளுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் மிகவும் பிரபலமான தொடர் எதிர்நீச்சல். இந்த சீரியலின் இயக்குநர் திருச்செல்வம் வீட்டில் ஒரு மங்களகரமான நிகழ்வு நடைபெற உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

இயக்குனர் திருச்செல்வம்:

சன் டிவியில் ஒளிபரப்பான 'கோலங்கள்' மெகா சீரியல் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர் இயக்குநர் திருச்செல்வம். அந்த சீரியலை இயக்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த திருச்செல்வம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பரிச்சயமானவர். 

Thiruselvam: எதிர்நீச்சல் இயக்குநர் வீட்டில் விசேஷங்க! வாழ்த்துகளை அள்ளித் தெளிக்கும் ரசிகர்கள்!

மக்கள் கொண்டாடும் எதிர்நீச்சல்:

தஞ்சாவூரை சேர்ந்த திருச்செல்வமுக்கு  நடிப்பு துறையில் எந்த ஒரு பின்னணியும் இல்லை என்றாலும் அவருக்கு இருந்த தீராத ஆசையால் சென்னைக்கு வந்து மெல்ல மெல்ல அனுபவம் பெற்றார். ஒரு சில திரைப்படங்களில் சவுண்ட் என்ஜினியராகவும், இணை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். அதன் மூலம் அனுபவம் பெற்ற திருச்செல்வம் 'கோலங்கள்' சீரியல் மூலம் இயக்குநராக அடியெடுத்து வைத்தார். முதல் சீரியலே சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரட் தொடராக இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது. 

அதை தொடர்ந்து ராஜ்ஜியம், சித்திரம் பேசுதடி உள்ளிட்ட பல சீரியல்களை  திருச்செல்வம் இயக்கியுள்ளார். அதை தொடர்ந்து கடந்த 2022ம் ஆண்டு முதல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'எதிர்நீச்சல்' தொடரை இயக்கி வருகிறார். ஆணாதிக்கம் நிறைத்த ஒரு குடும்பத்தில் பெண்களை அடிமையாக நடத்தும் ஆண்களை எதிர்த்து தடைகளை தாண்டி பெண்கள் எப்படி போராடி முன்னேறி வருகிறார்கள் என்ற கதைக்களத்தை மையாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது. 

டி.ஆர்.பி வரிசையில் முன்னிலை இடத்தில் இருந்து வந்த 'எதிர்நீச்சல்' தொடர் கடந்த சில நாட்களாக டி.ஆர்.பி வரிசையில் பின்தங்கி வருகிறது. இந்த சீரியலில் இருந்த விறுவிறுப்பு ஆதி குணசேகரனாக நடித்து வந்த நடிகர் மாரிமுத்துவின் மரணத்திற்கு பிறகு குறைய துவங்கியது. அவருக்கு பதிலாக அந்த கதாபாத்திரத்தில் நடிகர் வேல ராமமூர்த்தி இணைந்தார். அவரின் என்ட்ரிக்கு பிறகு கதைக்களம் மொத்தமாக மாற்றப்பட்டு வேறு ஒரு ட்ராக்கில் ஒளிபரப்பாகி வருகிறது. அதனால் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் ஸ்வாரஸ்யம் குறைந்து காணப்படுகிறது. அதனால் இந்த சீரியலை கூடிய விரைவில் முடிவுக்கு கொண்டு வர சேனல் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

திருச்செல்வம் வீட்டில் விசேஷம்:

இந்நிலையில் 'எதிர்நீச்சல்' சீரியல் இயக்குநர் திருச்செல்வம் மகள் பிரியதர்ஷினிக்கும், ஹரிகுமாருக்கும் அடுத்த மாதம் 10ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது இயக்குநர் திருச்செல்வம் தன்னுடைய மகளின் திருமண அழைப்பிதழை சொந்த பந்தங்களுக்கும், நட்பு வட்டத்துக்கும் வைப்பதில் மிகவும் பிஸியாக ஈடுபட்டுள்ளார் என கூறப்படுகிறது. திருச்செல்வம் மகளுக்கு சின்னத்திரை ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். 
   
தலைப்பு செய்திகள்

ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
Online Property Registration : பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
Online Property Registration : பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TASMAC SHOP : மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
Teacher Eligibility Test : டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
TASMAC SALARY HIKE : டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
Holiday Special Bus : 2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
Embed widget