மேலும் அறிய

Ethir neechal July 15 episode : சிஐடி வேலை செய்யாத.. ஜனனியை மிரட்டும் கெளதம்.. பரபரப்பான எதிர்நீச்சல் எபிசோட்  

*விருந்து சமைத்து எடுத்து வந்த ஜான்சி* ஜனனியை சொத்து விஷயத்தில் இருந்து விலக சொல்லும் கௌதம்* ஞானத்திடம் சண்டையிடும் ரேணுகாநேற்றைய எதிர்நீச்சல் எபிசோட்

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் தொடரின் நேற்றைய எபிசோடில் ஜான்சி ராணி, குணசேகரன் வீட்டுக்கு வகைவகையாக சமைத்து வந்து விருந்து பரிமாறுகிறாள். ஆஹா ஓஹோ என ஜான்சியை பாராட்டி குணசேகரன் சாப்பிட, சாப்பாட்டையே  காணாதவன் போல வழித்து துடைத்து சாப்பிடுகிறான் கரிகாலன். பல நாட்களுக்கு பிறகு நல்ல சாப்பாடு போட்டதற்கு ஜான்சிக்கு நன்றி கூறிய குணசேகரன் உன் கைப்பக்குவம் பிரமாதம் என பாராட்டுகிறார்.

Ethir neechal July 15 episode : சிஐடி வேலை செய்யாத.. ஜனனியை மிரட்டும் கெளதம்.. பரபரப்பான எதிர்நீச்சல் எபிசோட்  

பிறகு ஜான்சி ராணி தான் கிளம்புவதாக கூறி கரிகாலனையும் ஆதிரையையும் அழைக்கிறாள். ஆதிரை, அம்மா வந்தவுடன் பார்த்துவிட்டு செல்வதாக கூறுகிறாள் ஆனால் குணசேகரன் மறுவீட்டுக்கு வந்து மூன்று நாட்கள் ஆனது அதனால் நீயும் கிளம்பு என துரத்துகிறார். உனக்கு வேண்டிய எல்லா வசதிகளையும் நான் செய்து தருகிறேன் என ஆதிரையிடம், ஜான்சி ராணி கூறுகிறாள். ஆதிரை உடனே கரிகாலனை வைத்து ஜான்சி ராணியிடம் நாங்கள் அத்தை வரும் வரைக்கும் இருந்து பார்த்து விட்டு பிறகு வருகிறோம் என சொல்லி போக சொல்கிறான். 

சக்தியும், ஜனனியும் கௌதமை சந்திக்கிறார்கள். போட்டோவில் இருந்த நபர் பற்றி ஏதாவது விவரம் தெரிந்ததா? குணசேகரன் அனுப்பிய நபர் தானே என கௌதமிடம் ஜனனி கேட்க, இனிமேல் உங்க அப்பத்தா சொத்தில் தலையிடுவதை விட்டுவிட்டு உங்க பிசினஸில் கவனம் செலுத்து என சொல்கிறான் கௌதம்.

இதை சற்றும் எதிர்பார்க்காத ஜனனியும் சக்தியும் அதிர்ச்சி அடைகிறார்கள். அவன் என்ன அவ்வளவு பெரிய ரவுடியா? அவனால் நமக்கு ஆபத்து இருக்கிறதா? என ஜனனி கேட்கிறாள். இது பெரிய அளவில் வெடிக்க போகுது அதனால் நீ அதிலிருந்து ஒதுங்கி விடு அதுதான் உனக்கு நல்லது. என்கிறான். உனக்கு அவன் யார் என்பது தெரியுமா? தெரிந்து தான் இதை சொல்கிறாயா என மீண்டும் ஜனனி அதையே கேட்க, யார் என்பது எல்லாம் தெரியாது ஆனால் இதில் தலையிட்டால் வெளிவர முடியாத அளவுக்கு பெரிய சிக்கல்கள் வரும் என்கிறான். உன்னால் முடியவில்லை என்றாலும் பரவாயில்லை, இது அப்பத்தாவின் உரிமை நான் பார்த்து கொள்கிறேன் என சொல்லிவிட்டு செல்கிறாள் ஜனனி. இவர்கள் மூவரும் பேசியதை யாரோ ஒருவன் கண்காணித்து கொண்டு இருக்கிறான். 

Ethir neechal July 15 episode : சிஐடி வேலை செய்யாத.. ஜனனியை மிரட்டும் கெளதம்.. பரபரப்பான எதிர்நீச்சல் எபிசோட்  

ரேணுகா ஞானத்திடம் வந்து ஐஸ்வர்யா நாளை முதல் வேறு ஒரு ஸ்கூலுக்கு போக போவது பற்றி சொல்கிறாள். எதுவும் பேசாமல் இருந்த ஞானத்தை பார்த்து தன்மானத்தோடு இருக்க சொல்லி ஒரு மனைவி சொல்வது அத்தனை பெரிய குத்தமா என சண்டையிடுகிறாள். அவர்களுடன் சண்டை பெரிதாக ஞானம் கையை ஓங்க கதிர் வந்து தடுக்கிறான். குணசேகரன் தம்பிகள் என்ற ஒன்றுக்காக தான் உங்களை இந்த ஊரில் மதிக்கிறார்கள் இல்லை என்றால் நீங்கள் மண்ணோடு மண்ணாக போய்விடுவீர்கள், ஒரு நாய் கூட உங்களை மதிக்காது என புலம்பி விட்டு செல்கிறாள்.

ஞானத்தை பார்த்து கதிர், இப்படியே பேசவிட்டு வேடிக்கை பார்த்து கொண்டே இரு. ஒரு நாள் விபூதி பட்டை போட்டுவிட்டு போய்க்கொண்டே இருப்பார்கள். நாலு சாத்து சாத்தவேண்டியது தானே வேடிக்கை பார்த்துக் கொண்டே இருப்பதை பார்த்தால் எனக்கே அசிங்கமா இருக்கிறது என கத்திவிட்டு அவனும் சென்று விடுகிறான். இத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது. 

தலைப்பு செய்திகள்

TN Weather Update: தமிழக வானிலை அறிக்கை - எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை?
தமிழக வானிலை அறிக்கை - எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை?
த.வெ.க-வில் இணையும் 4 முன்னாள் அமைச்சர்கள், 7 முன்னாள் எம்.எல்.ஏ-க்கள்; அதிர்ச்சியில் அதிமுக!
த.வெ.க-வில் இணையும் 4 முன்னாள் அமைச்சர்கள், 7 முன்னாள் எம்.எல்.ஏ-க்கள்; அதிர்ச்சியில் அதிமுக!
TN Govt: தவிக்க விட்ட திமுக..! தூசி தட்டி கையிலெடுத்த தவெக அரசு - இளம் மருத்துவர்கள் செம்ம குஷி
தவிக்க விட்ட திமுக..! தூசி தட்டி கையிலெடுத்த தவெக அரசு - இளம் மருத்துவர்கள் செம்ம குஷி
288 கி.மீட்டர் மைலேஜ் மாமே! Vespa 125 ஸ்கூட்டர் எதுக்கு வாங்கனும்? இவ்ளோ வசதி இருக்கா
288 கி.மீட்டர் மைலேஜ் மாமே! Vespa 125 ஸ்கூட்டர் எதுக்கு வாங்கனும்? இவ்ளோ வசதி இருக்கா

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: தமிழக வானிலை அறிக்கை - எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை?
தமிழக வானிலை அறிக்கை - எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை?
த.வெ.க-வில் இணையும் 4 முன்னாள் அமைச்சர்கள், 7 முன்னாள் எம்.எல்.ஏ-க்கள்; அதிர்ச்சியில் அதிமுக!
த.வெ.க-வில் இணையும் 4 முன்னாள் அமைச்சர்கள், 7 முன்னாள் எம்.எல்.ஏ-க்கள்; அதிர்ச்சியில் அதிமுக!
TN Govt: தவிக்க விட்ட திமுக..! தூசி தட்டி கையிலெடுத்த தவெக அரசு - இளம் மருத்துவர்கள் செம்ம குஷி
தவிக்க விட்ட திமுக..! தூசி தட்டி கையிலெடுத்த தவெக அரசு - இளம் மருத்துவர்கள் செம்ம குஷி
288 கி.மீட்டர் மைலேஜ் மாமே! Vespa 125 ஸ்கூட்டர் எதுக்கு வாங்கனும்? இவ்ளோ வசதி இருக்கா
288 கி.மீட்டர் மைலேஜ் மாமே! Vespa 125 ஸ்கூட்டர் எதுக்கு வாங்கனும்? இவ்ளோ வசதி இருக்கா
June 26 Car Sale: ஒரு வழியா..! டாடாவின் கம்பேக், மஹிந்த்ரா ஷாக், ஹுண்டாய்க்கு என்ன தான் ஆச்சு? மாருதி காட்டில் மழை
ஒரு வழியா..! டாடாவின் கம்பேக், மஹிந்த்ரா ஷாக், ஹுண்டாய்க்கு என்ன தான் ஆச்சு? மாருதி காட்டில் மழை
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
Embed widget