மேலும் அறிய

Ethir neechal July 13th update : முதலிரவு வேணும்... அடம் பிடிக்கும் கரிகாலன்... ட்விஸ்ட் கொடுத்து  கலங்கவைத்த ஆதிரை... எதிர் நீச்சல் நேற்றைய அப்டேட்   

* கரிகாலனோடு வாழமுடியாது என ஆடம் பிடித்த ஆதிரை* குணசேகரன் கொடுமையால் முதலிரவுக்கு சம்மதம் சொன்னா ஆதிரை* அருண் தான் பிடிக்கும் என கரிகாலனுக்கு ஷாக் கொடுத்த ஆதிரைநேற்றைய எதிர்நீச்சல் எபிசோட்

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் தொடரில் நேற்றைய எபிசோடில் கரிகாலனிடம் மன்னிப்பு கேட்க முடியாது என தர்ஷினி சொன்னதால் கோபமான குணசேகரன் இவர்களை அடக்க வேண்டும் அதை அதிரையில் இருந்து தொடங்குவோம் என முதலிரவுக்கு ஏற்பாடு செய்ய சொல்கிறார். கரிகாலன் தயரானாலும் ஆதிரை விடாபிடியாக முடியாது என இருக்கிறாள். என்ன நடக்கிறது என்பதை பார்க்க குணசேகரன், கரிகாலனோடு கீழே சென்று பார்க்க வருகிறார். அத்துடன் முதல் நாள் எபிசோட் முடிவுக்கு வந்தது. 

Ethir neechal July 13th update : முதலிரவு வேணும்... அடம் பிடிக்கும் கரிகாலன்... ட்விஸ்ட் கொடுத்து  கலங்கவைத்த ஆதிரை... எதிர் நீச்சல் நேற்றைய அப்டேட்   

அதன் தொடர்ச்சியாக நேற்றைய எபிசோடில் கரிகாலன் வீட்டில் இருக்கும் பொம்பளைகளை கடுமையாக திட்டி கொண்டு இருக்கிறார். கரிகாலனுக்கு பொம்பளைகளை எப்படி நடத்த வேண்டும் என அறிவுரை கூறுகிறார். சமயலறையில் நந்தினி, ரேணுகா, ஜனனி மற்றும் ஆதிரை பேசிக்கொண்டு இருக்கிறார்கள். ஆதிரையிடம் தனக்கு இதில் விருப்பம் இல்லை என்பதை தெளிவாக சொல்லிவிட  சொல்கிறார்கள். ஆதிரையின் என்ன முடிவு செய்து இருக்கிறாள் என்பது தெரிய வேண்டும். கரிகாலனை வீட்டுக்குள் அனுமதித்து இருப்பதும் அவனை எதிர்க்காததும் ஒரு வகையில் தப்பு தான் என்கிறாள் ஜனனி. ஆதிரை உன்னுடைய முடிவு என்ன என கேட்டதும் 'நான் அருணிடம் பேச வேண்டும். அவன் என்னை வேண்டாம் என ஒதுக்கவில்லையே. கல்யாணம் செய்து கொள்ள வரும் போது தானே விபத்து நடந்தது. ஒரு முறை அருணிடம் பேசினால் தான் என்னால் முடிவு எடுக்க முடியும்' என்கிறாள் ஆதிரை. 

கீழே வந்து பார்த்த குணசேகரன் 'இது என்ன அடுத்த மீட்டிங்கா? சடங்குக்கு ஏற்பாடு செய்ய சொன்னா இங்க உட்கார்ந்து வெட்டியா பேசிகிட்டு இருக்கீங்க. நந்தினி உன்னால ஏற்பாடு செய்ய முடியுமா முடியாதா?" என்கிறார். நந்தினி "என்னால முடியாது. இது அதிரையின் வாழ்க்கை. அவளுக்கு விருப்பம் இல்லாமல் எதையும் செய்ய முடியாது. இந்த கல்யாணத்தையே அவள் ஏத்துக்கவில்லை" என்கிறாள். "இங்க பாரு ஆதிரை இனிமே எல்லாம் அமைதியா போக முடியாது வெட்டி வீசிட்டு போய்கிட்டே இருப்பேன்" என குணசேகரன் சொல்ல, அருவமனையை எடுத்த ஆதிரை என்ன வெட்டணுமா? என்ன வெட்டி வீசினாலும் நான் இவன ஏத்துக்க மாட்டேன். இவன எனக்கு பிடிக்கல. இவன் எனக்கு வேண்டாம் என ஆத்திரத்தில் கத்தினாலும் கொஞ்சமும் சட்டை செய்யாத குணசேகரன் இந்த ஜென்மத்துல அவன் தான் உன்னுடைய புருஷன் அவனோட தான் நீ குடும்பம் நடத்த வேண்டும். இவளுங்க பேச்சை கேட்டு ஆடுறீயா வா அந்த ஜான்சி ராணி வீட்டில் உன்னை விட்டு விடுகிறேன் என இழுத்து செல்கிறார் குணசேகரன். என்ன செய்வது என தெரியாமல் நான் இதற்கு சம்மதிக்கிறேன் நீங்க ஏற்பாடு செய்யுங்கள் என சொல்கிறாள் ஆதிரை. 

Ethir neechal July 13th update : முதலிரவு வேணும்... அடம் பிடிக்கும் கரிகாலன்... ட்விஸ்ட் கொடுத்து  கலங்கவைத்த ஆதிரை... எதிர் நீச்சல் நேற்றைய அப்டேட்   

ஜீவனந்தத்திடம் கௌதம் ஜனனி நண்பன் என்ன சொன்னா பிறகும்  உங்களால்  எப்படி அவனை நம்ப முடிகிறது என கேட்கிறாள் பர்ஹானா. நம்மிடம் இருந்து விஷயங்களை தெரிந்து கொண்டு ஜனனியிடம் போய் சொல்ல மாட்டான் என்பதை எப்படி உறுதியாக சொல்கிறீர்கள் என் கேட்கிறாள். கௌதம் பெரிய அளவில் எதுவும் பிரச்சனை செய்யமாட்டான் என தோன்றுகிறது. கௌதம் நிச்சயம் நாளை ஜனனியை சந்தித்து பட்டம்மாள் சொத்து பற்றி கேட்டு தெரிந்து கொள்வான். நாளை உங்களுக்கு புரியும் என சொல்லிவிட்டு செல்கிறார். 

கரிகாலனுக்கு ஆதிரைக்கும் முதலிரவுக்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டனர். ஆதிரை நல்லபடியாக கரிகாலனிடம் பேசவும் அவளை நம்பி விடுகிறான். ஆனால் ஆதிரை எதிர்காலம் பற்றி பேசலாம் என சொல்லி எனக்கு அருணை தான் ரொம்ப பிடிக்கும். நான் அவனை தான் விரும்புகிறேன். இதை புரிந்து கொண்டு ஒதுங்கி போய்விடு என கரிகாலனிடம் சொன்னதும் அவன் அழுது கொண்டே குணசேகரனிடம் செல்கிறான். அவனை மிரட்டி நீ போய் இப்ப அவரை கூப்பிட்ட நான் பல உண்மைகளை சொல்ல வேண்டி இருக்கும் என சொன்னதும் எதை எதையோ நினைத்து அழுகிறான் கரிகாலன். நான் கண்டதையும் நினைப்பதற்கு முன்னர் நீயே என்ன என்று சொல்லிவிடு என்கிறான். நீ நினைத்தது தான் என சொல்லி கரிகாலனை கலங்க விட்டுவிட்டாள் ஆதிரை. அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”திமுகவை அழிக்க கிளம்பி வந்தவர்களுக்கு..” : தஞ்சையில், விஜய் அரசியல் குறித்து சீறிய உதயநிதி..
”திமுகவை அழிக்க கிளம்பி வந்தவர்களுக்கு..” : தஞ்சையில், விஜய் அரசியல் குறித்து சீறிய உதயநிதி..
முதல்வர் மருந்தகம் தொடங்க ஆசையா? விண்ணப்பிப்பது எப்படி? முழு தகவலும் உள்ளே
முதல்வர் மருந்தகம் தொடங்க ஆசையா? விண்ணப்பிப்பது எப்படி? முழு தகவலும் உள்ளே
Ration Shop Recruitment 2024: இன்றே கடைசி; ரேஷன் கடை பணிக்கு விண்ணப்பிச்சீங்களா? நேர்காணல் மட்டும்தான்- ரூ.29 ஆயிரம் சம்பளம்
இன்றே கடைசி; ரேஷன் கடை பணிக்கு விண்ணப்பிச்சீங்களா? நேர்காணல் மட்டும்தான்- ரூ.29 ஆயிரம் சம்பளம்
”மன்னிப்பு கேளுங்க ஸ்டாலின்” தமிழ்த்தாய்க்கு அவமானம்? சீறும் தலைவர்கள்
”மன்னிப்பு கேளுங்க ஸ்டாலின்” தமிழ்த்தாய்க்கு அவமானம்? சீறும் தலைவர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Maharashtra Rahul Gandhi : காங்கிரஸ் உக்கிரம் ஆட்சியை பிடிக்க ஒரே FORMULA கட்டம் கட்டிய ராகுல்!S Ve Sekar : ”வாயத் தொறந்தாலே பொய்! அண்ணாமலைக்கு தகுதியே இல்ல” வெளுத்துவாங்கும் எஸ்.வி.சேகர்Sekar babu : Madurai Theft CCTV | ’’மதுரையை மிரட்டும் குரங்கு குல்லா கொள்ளையர்கள்’’நடுங்கவைக்கும் CCTV காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”திமுகவை அழிக்க கிளம்பி வந்தவர்களுக்கு..” : தஞ்சையில், விஜய் அரசியல் குறித்து சீறிய உதயநிதி..
”திமுகவை அழிக்க கிளம்பி வந்தவர்களுக்கு..” : தஞ்சையில், விஜய் அரசியல் குறித்து சீறிய உதயநிதி..
முதல்வர் மருந்தகம் தொடங்க ஆசையா? விண்ணப்பிப்பது எப்படி? முழு தகவலும் உள்ளே
முதல்வர் மருந்தகம் தொடங்க ஆசையா? விண்ணப்பிப்பது எப்படி? முழு தகவலும் உள்ளே
Ration Shop Recruitment 2024: இன்றே கடைசி; ரேஷன் கடை பணிக்கு விண்ணப்பிச்சீங்களா? நேர்காணல் மட்டும்தான்- ரூ.29 ஆயிரம் சம்பளம்
இன்றே கடைசி; ரேஷன் கடை பணிக்கு விண்ணப்பிச்சீங்களா? நேர்காணல் மட்டும்தான்- ரூ.29 ஆயிரம் சம்பளம்
”மன்னிப்பு கேளுங்க ஸ்டாலின்” தமிழ்த்தாய்க்கு அவமானம்? சீறும் தலைவர்கள்
”மன்னிப்பு கேளுங்க ஸ்டாலின்” தமிழ்த்தாய்க்கு அவமானம்? சீறும் தலைவர்கள்
”காவல்துறையின் ஈரல் அழுகிப்போச்சு – திமுகவுக்கு வன்னியர் வன்மம்” கொதித்தெழுந்த ராமதாஸ்..!
”காவல்துறையின் ஈரல் அழுகிப்போச்சு – திமுகவுக்கு வன்னியர் வன்மம்” கொதித்தெழுந்த ராமதாஸ்..!
Robo Shankar :
Robo Shankar : "ஒன்ஸ்மோர் கேட்டு கலவரம் பண்ணேன்..கமல் ஓங்கி அடிச்சுட்டார்..." ரோபோ சங்கர் ஓப்பன் டாக்
Breaking News LIVE 7th NOV 2024:  டிரம்ப் வெற்றி எதிரொலி; எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு ஒரே நாளில் ரூ.2 லட்சம் கோடி உயர்வு
Breaking News LIVE 7th NOV 2024: டிரம்ப் வெற்றி எதிரொலி; எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு ஒரே நாளில் ரூ.2 லட்சம் கோடி உயர்வு
Soorasamharam 2024: களைகட்டும் சூரசம்ஹார நிகழ்வு; பழனியில் சூரன் உருவபொம்மை தயாரிக்கும் பணி தீவிரம்
களைகட்டும் சூரசம்ஹார நிகழ்வு; பழனியில் சூரன் உருவபொம்மை தயாரிக்கும் பணி தீவிரம்
Embed widget