மேலும் அறிய

Ethirneechal : சக்தி வந்த புதிய பிரச்சனை.. ஜனனிக்கு உதவும் ரேணுகா.. ட்விஸ்ட் எடுக்கும் எதிர்நீச்சல்

*நந்தினிக்கு பிறந்தநாள் கொண்டாட்டம். சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்த ஜனனி* சக்திக்கு உடம்பு சரியில்லை என்றதும் பதறிய ஜனனிஇன்றைய எதிர் நீச்சல் எபிசோட் ப்ரோமோ

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethir neechal) சீரியலின் நேற்றைய எபிசோடில் ரேணுகா முதல் நாள் டான்ஸ் கிளாஸை ஆன்லைனில் தொடங்கினாள். ஐஸ்வர்யா, ஜனனி மற்றும் நந்தினி அவள் சொல்லி கொடுக்கும் அழகை ரசிக்கிறார்கள். கிளாஸ் முடிந்த உடனே ரேணுகாவின் ஃபோனுக்கு பணம் கிரெடிட்டாகி உள்ளது என மெஸேஜ் வருகிறது. அதை பார்த்து ரேணுகா எனக்குத்தான் அக்கவுண்ட்டே கிடையாதே பிறகு எப்படி மெசேஜ் வருகிறது என கேட்கிறாள். 

Ethirneechal : சக்தி வந்த புதிய பிரச்சனை.. ஜனனிக்கு உதவும் ரேணுகா.. ட்விஸ்ட் எடுக்கும் எதிர்நீச்சல்

ரேணுகா, ஈஸ்வரி மற்றும் நந்தினி மூவருக்கும் முன்னரே அக்கவுண்ட் ஓப்பன் செய்துவிட்ட தகவலை சொல்லி நீங்க ஒவ்வொரு நாள் ஆன்லைன் கிளாஸ் முடித்த உடனே உங்கள் அக்கவுண்டில் பணம் கிரெடிட்டாகிவிடும் என்று சொல்லவும் ரேணுகா அழுது விடுகிறாள். ”எங்களுக்காக நீ எவ்வளவு செய்யுற உனக்கு நன்றி என்ற ஒற்றை வார்த்தை பத்தவே பத்தாது..” என ஆனந்த கண்ணீர் விடுகிறாள். 

நந்தினி ரேணுகாவின் ட்ரீட்டாக ஸ்வீட் செய்து கொடுக்கிறாள். அனைவரும் சந்தோஷமாக சிரித்து பேசிக்கொண்டு இருக்கும் போது ஞானமும், கதிரும் வந்து இறங்குகிறார்கள். அவர்களை நக்கலடித்து சிரித்து கொள்கிறார்கள். "உங்களுக்கும் ஸ்வீட் வேணுமா?" என கேட்டு கதிரை டென்ஷனாக்குகிறாள். "நாங்களே சொத்துபோன கவலையில் இருக்கோம் நீ வேற ஏன் மா?" என்கிறார் ஞானம். 

Ethirneechal : சக்தி வந்த புதிய பிரச்சனை.. ஜனனிக்கு உதவும் ரேணுகா.. ட்விஸ்ட் எடுக்கும் எதிர்நீச்சல்

கதிரும் ஊரில் இருந்து திரும்பிவர போன விஷயம் என்ன ஆனது? ஜீவானந்தம் பற்றி ஏதாவது தகவல் தெரிந்ததா என ரேணுகா கேட்கிறாள். ஜீவானந்தம் அந்த ஊரில் இருக்கும் பலருக்கும் பல நல்லதை செய்துள்ளார் அவரை பற்றி பெருமையாக பேசுகிறார்களே தவிர அவர் எங்க இருக்கார் என கேட்டால் ஒருவரும் வாயை திறக்கவே மாட்டேன் என்கிறார்கள்" என்கிறான் சக்தி. "அந்த அளவுக்கு ட்ரெயின் செய்து வைத்துள்ளான்" என நந்தினி சொல்கிறாள்.

"ஜனனி சக்தியை ஒரு இடத்திற்கு சென்று வரலாம்" என சொல்கிறாள். "எங்க யாரை பார்க்கப் போகிறோம் என சொன்னால் மட்டுமே அழைத்து செல்வேன்" என சக்தி சொல்கிறான். "போற வழியில சொல்றேன்" என சொல்லி கூட்டி செல்கிறாள். அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது. 

அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர் நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

Ethirneechal : சக்தி வந்த புதிய பிரச்சனை.. ஜனனிக்கு உதவும் ரேணுகா.. ட்விஸ்ட் எடுக்கும் எதிர்நீச்சல்

ஜனனி, சக்தி இருவரும் சர்ப்ரைஸாக ரெடியாக கேக் வாங்கி வைத்துள்ளார்கள். இன்று நந்தினியின் பிறந்தநாள் அதற்காகத்தான் அந்த கேக் கட்டிங் செலிப்ரேஷன். இதை சற்றும் எதிர்பார்க்காத நந்தினி ஆச்சரியமடைகிறாள். அவளுக்கு சர்ப்ரைஸாக ஏதோ ஒரு லெட்டரை கொடுக்கிறாள் ஜனனி. "ஹேப்பி பர்த்டே அக்கா. இது உங்களுக்கு ஸ்பெஷலான பர்த்டே" என்கிறாள். அதை பார்த்து ஷாக்கான நந்தினியிடம்  இருந்து, அந்த லெட்டரை வாங்கி ரேணுகா பார்த்து ரெஜிஸ்டரே பண்ணிட்டியா என கேட்கிறாள். அனைவரும் சந்தோஷமாக இருக்கிறார்கள். 

Ethirneechal : சக்தி வந்த புதிய பிரச்சனை.. ஜனனிக்கு உதவும் ரேணுகா.. ட்விஸ்ட் எடுக்கும் எதிர்நீச்சல்
அடுத்த நாள் காலை சக்தி படுக்கையில் படுத்துக்கொண்டு இருக்க ஜனனி பதட்டமான "நான் போய் அக்காவ கூட்டிட்டு வரேன்" என சொல்லி ஓடுகிறாள். ரேணுகாவிடம் போய் "அக்கா கொஞ்சம் வாங்களேன். சக்திக்கு ஹை ஃபீவரா இருக்கு" என அழைத்துக்கொண்டு போகிறாள். நந்தினியும் ரேணுகாவும் வேகமாக போய் சக்தியை பார்க்கிறார்கள். இதுதான் இன்றைய எதிர் நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ஹிண்ட். 

நந்தினிக்கு ஜனனி என்ன பரிசாக கொடுத்தாள்? சக்திக்கு திடீர் என ஏன் உடம்பு சரியில்லாமல் போனது? அடுத்து ஜனனி என்ன செய்யப்போகிறாள்? பரபரப்பான கட்டத்தில் எதிர் நீச்சல் தொடர் சென்றுகொண்டே இருக்கிறது

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: கற்பகத்தை தீர்த்துக்கட்ட ஸ்கெட்ச்... காப்பாற்றுவாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கற்பகத்தை தீர்த்துக்கட்ட ஸ்கெட்ச்... காப்பாற்றுவாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சர்ப்ரைஸ் தந்த கார்த்திக்.. சந்திரகலாவுக்கு தெரிந்த உண்மை! கார்த்திகை தீபத்தில் இனி திக் திக்..!
Karthigai Deepam: சர்ப்ரைஸ் தந்த கார்த்திக்.. சந்திரகலாவுக்கு தெரிந்த உண்மை! கார்த்திகை தீபத்தில் இனி திக் திக்..!

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
"நான் வரேன் வடசென்னைக்கு.. தமிழ்நாட்டை தொட விட மாட்டேன்".. கர்ஜித்த ராகுல் காந்தி!
MK Stalin: இது எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? போற போக்கில் தவெகவை சீண்டிய ஸ்டாலின்!
MK Stalin: இது எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? போற போக்கில் தவெகவை சீண்டிய ஸ்டாலின்!
காங்கிரஸ் எம்.பி. பாலியல் புகார்: ராகுல் காந்தி பெண்களிடம் மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்
காங்கிரஸ் எம்.பி. பாலியல் புகார்: ராகுல் காந்தி பெண்களிடம் மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்
தவெக அரசை மக்கள் எப்படி பயன்படுத்த வேண்டும்? ஜே.சி.டி. பிரபாகர் ஓபன் டாக்!
தவெக அரசை மக்கள் எப்படி பயன்படுத்த வேண்டும்? ஜே.சி.டி. பிரபாகர் ஓபன் டாக்!
டிராஃபிக் பிரச்னைக்கு குட்பை! நாளை முதல் பூந்தமல்லி To வடபழனி இனி நிமிடங்களில் போகலாம்!
டிராஃபிக் பிரச்னைக்கு குட்பை! நாளை முதல் பூந்தமல்லி To வடபழனி இனி நிமிடங்களில் போகலாம்!
மக்களே உஷார்! தமிழகத்தில் எகிறப்போகும் வெயில்... எந்தெந்த மாவட்டங்களில் மழை? - வானிலை வார்னிங்
மக்களே உஷார்! தமிழகத்தில் எகிறப்போகும் வெயில்... எந்தெந்த மாவட்டங்களில் மழை? - வானிலை வார்னிங்
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!
Embed widget