மேலும் அறிய

Bharathi Kannamma 2: இன்றுடன் நிறைவடையும் பாரதி காதலியே.. கண்ணம்மா.. 3 மணி நேர கிளைமாக்ஸ் காட்சி...எகிறுமா டிஆர்பி?

Bharathi Kannamma 2: பாரதி கண்ணம்மா 2 சீரியலின் கிளைமாக்ஸ் காட்சி இன்று மாலை 3 மணி முதல் 6:30 மணி வரை தொடர்ந்து ஒளிபரப்பாகி டி. ஆர்.பி ரேடிங்கை எகிற வைக்க போகிறது. 

சின்னத்திரை ரசிகர்களின் அபிமான சேனலாக இருந்து வரும் ஸ்டார் விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோ அனைத்தும் உலகளவில் பிரபலமானவை. அதே நேரத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அந்த வகையில் மாபெரும் வரவேற்பை பல ஆண்டுகளாக பெற்று வந்த ஒரு தொடர் 'பாரதி கண்ணம்மா'(Bharathi Kannamma 2). டி. ஆர்.பி ரேட்டிங் வரிசையில் முதலிடத்தில் இருந்த வந்த இந்த தொடர் இந்த ஆண்டு தொடக்கத்தில் முடிவடைந்தது. 

Bharathi Kannamma 2: இன்றுடன் நிறைவடையும் பாரதி காதலியே.. கண்ணம்மா.. 3 மணி நேர கிளைமாக்ஸ் காட்சி...எகிறுமா டிஆர்பி?

முதல் பாகம் முடிவடைந்த உடனேயே 'பாரதி கண்ணம்மா 2' தொவங்கியது. சீசன் 1ல் நடித்த ரூபாஸ்ரீ, வினுஷா தேவி, ஃபரினா, தீபா உள்ளிட்டோர் இந்த சீசனிலும் தொடர்ந்தார்கள். சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியலின் ஹீரோ சிபு இந்த சீரியலில் பாரதியாக நடித்திருந்தார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் தொடங்கப்பட்ட இந்த சீரியல் 133 எபிசோட் வரை ஒளிபரப்பாகி இன்றுடன் முடிவடைகிறது. முதல் சீசனுக்கு கிடைத்தது போல பெரிய அளவில் பாரதி கண்ணம்மா சீசன் 2க்கு வரவேற்பு கிடைக்கவில்லை என்பதால் தான் இந்த சீரியல் விரைவில் முடிக்கப்படுவதற்கான காரணமாகக் கூறப்படுகிறது. 

கிளைமாக்ஸ் ஸ்பெஷல் எபிசோட் :

கண்ணம்மாவின் பிளாஷ் பேக் ஸ்டோரியில் என்ன நடந்தது? பாரதியின் தந்தை ராஜசேகர் மரணத்திற்கு காரணமானவர் யார்? பாரதியும் கண்ணம்மாவும் ஒன்றிணைவார்களா? போன்ற கேள்விகளுக்கு பதிலாக இன்றைய கிளைமாக்ஸ் எபிசோட் ஒளிபரப்பாக உள்ளது.

இன்று மாலை 3 மணி முதல் 6:30 மணி வரை தொடர்ந்து ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா எபிசோட் இதுவரையில் பெற தவறிய ஒட்டுமொத்த டி. ஆர்.பி ரேடிங்கையும் இந்த ஒரே எபிசோடில் பெற போகிறது என்ற எதிர்பார்ப்பு உள்ளது. 

கொலையாளி யார்? 

சௌந்தர்யாவின் அண்ணன் முரளி தான் பாரதியின் அப்பா ராஜசேகரை கொலை செய்தது என்பதை சாட்சியுடன் நிரூபிப்பதற்காக நடராஜை அழைத்து வருகிறாள் கண்ணம்மா. பாரதிக்கும் வெண்பாவுக்கும் நடைபெற இருக்கும் திருமணத்தை நிறுத்த செல்லும் வழியில் அவளின் பழைய விரோதி ஒருத்தியால் இடைஞ்சல் ஏற்படுகிறது. அதில் இருந்து தப்பித்து கோயிலில் நடைபெற இருந்த திருமணத்தை எப்படி நிறுத்தி முரளியின் வண்டவாளத்தை நிரூபித்தாள் என்பது தான் இன்றைய கிளைமாக்ஸ் எபிசோடில் நடைபெற உள்ளது. 

உண்மையான கொலையாளி யார் என தெரிந்து பின்னர் அனைவரும் ஒன்று சேரும் பாரதி கண்ணம்மா 2 தொடர் இன்றுடன் சுபம் கார்டுடன் முடிவுக்கு வரவுள்ளது. 

இந்த சீரியல் முடிவடைந்த உடன் வரும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு எஸ்.ஏ. சந்திரசேகர், ராதிகா சரத்குமார், ரேஷ்மா முரளிதரன், வெங்கட் உள்ளிட்டோர் நடிக்கும் புதிய தொடரான 'கிழக்கு வாசல்' ஒளிபரப்பாக உள்ளது.

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: ரேஷன் கடைக்காரரை வைத்து புதிய சதி.. விசாரணையில் இறங்கிய கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேஷன் கடைக்காரரை வைத்து புதிய சதி.. விசாரணையில் இறங்கிய கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: கற்பகத்தை தீர்த்துக்கட்ட ஸ்கெட்ச்... காப்பாற்றுவாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கற்பகத்தை தீர்த்துக்கட்ட ஸ்கெட்ச்... காப்பாற்றுவாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தளபதி விஜய்.." ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு சொன்னதும் அதிர்ந்த அரங்கம்!
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை மறுநாள் (15.10.2026) மின்தடை ! முழு விவரம்!
திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை மறுநாள் (15.10.2026) மின்தடை ! முழு விவரம்!
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
Embed widget