Baakiyalakshmi Serial : வீட்டைவிட்டு வெளியேறிய பாக்யா...பேசாமல் நிற்கும் கோபி..மனம் மாறுகிறாரா ராதிகா?
ராதிகா மகள் மயூவை அழைத்துக் கொண்டு ஸ்கூலில் டீசி வாங்க புறப்படுகிறார். அவரை அம்மாவும், அண்ணனும் தடுத்து நிறுத்தி கோபியுடன் சேர்ந்து வாழுமாறு அறிவுறுத்துகின்றனர்.
பாக்கியலட்சுமி சீரியலில் கோபிக்கும் ராதிகாவுக்கும் இடையேயான உறவு குறித்து பாக்கியாவுக்கு உண்மை தெரிந்த நிலையில் அவர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் பேவரைட்டாக உள்ளது. இந்த சீரியலின் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழ்த்து வருகிறார். அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது.
இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்யலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். பாக்யா தான் தன் மனைவி என போதையில் கோபி ராதிகாவிடம் உளறியது, கோபியின் மீதான சந்தேகத்தால் அவரது போனை பாக்யா சோதனை செய்தது. ராதிகா - கோபி இடையேயான சண்டை, நடுவில் ராதிகாவின் முதல் கணவன் ராஜேஷின் எண்ட்ரி, கோபி வீட்டில் உண்மை தெரிந்தது, அவர் விபத்தில் சிக்கியது, பாக்யாவுக்கு கோபிக்கும் ராதிகாவுக்கும் இடையேயான உறவு குறித்து தெரிந்தது, அவரை நடுவீட்டுல் நிற்க வைத்து கேள்வி கேட்டது என இந்த சீரியல் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் தொடர்ந்து நகர்கிறது. இனி இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என பார்க்கலாம்.
பாக்யாவுடனான விவாகரத்துக்கு கோர்ட்டில் ஆஜராக சொல்லி கடிதம் வந்ததை தொடர்ந்து இனியும் தான் இந்த வீட்டில் இருக்கப்போவதில்லை என கூறி பாக்யா வீட்டை விட்டு வெளியேறுகிறார். அவரை சமாதானப்படுத்தி அழைத்து வர வேலைக்காரி செல்வியும், இளைய மகன் எழிலும் உடன் செல்கின்றனர். எல்லாவற்றுக்கும் பதில் பேசாமல் அமைதியாக நிற்கும் கோபியை மூத்த மகன் செழியனும், அம்மா ஈஸ்வரியும் கேள்வி மேல் கேள்வி கேட்க அவர் பதிலேதும் பேசாமல் இருக்கிறார்.
இதனிடையே வீட்டை விட்டு வெளியேறி தனது ஆபீஸிற்கு செல்லும் பாக்யாவிடம் ராதிகா பற்றி செல்வி குறை கூறுகிறார். தன் கணவரை விட கோபி மோசமனாவராக உள்ளார் என்றும், அவரை அடிச்சிருக்கலாம் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார். ஆனால் பாக்யாவும் எந்தவித உணர்வையும் வெளிப்படுத்தாமல் இருப்பதால் எழில், செல்வி இருவரும் அதிர்ச்சியடைகின்றனர்.
இதனையடுத்து ராதிகா மகள் மயூவை அழைத்துக் கொண்டு ஸ்கூலில் டீசி வாங்க புறப்படுகிறார். அவரை அம்மாவும், அண்ணனும் தடுத்து நிறுத்தி கோபியுடன் சேர்ந்து வாழுமாறு அறிவுறுத்துகின்றனர். குறிப்பாக ராதிகா அம்மா அவரிடம், பாக்யா திருமணம் செய்ததை தவிர கோபி என்ன தவறு செய்தார், கோபி உங்கள் இருவரிடமும் அன்பாக தானே இருக்கிறார் என கேட்க ராதிகா ஆமாம் என பதிலளிப்பதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது. இனி ராதிகா கோபியுடன் இணைந்து வாழ மனம் மாறுவாரா அல்லது தனது குடும்ப நலன் கருதி ராதிகாவுடன் வாழ கோபி மறுப்பாரா என கேள்விகள் ரசிகர்களிடத்தில் எழுந்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்