மேலும் அறிய

VJ Vishal: பாக்கியலட்சுமி எழில் இனி இல்லை.. விஷால் விலகக் காரணம்.. புது என்ட்ரி இவர் தான்!

VJ Vishal: பாக்கியலட்சுமி சீரியலில் எழில் கேரக்டரில் நடித்த விஜே விஷால் திடீரென விலக அவருக்கு பதிலாக புதிதாக என்ட்ரி கொடுத்த நடிகர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிக முக்கியமான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி தொடர். அடிக்கடி அதிரடி திருப்பங்களுடன் ரசிகர்களின் கவனத்தை மொத்தமாக ஈர்த்துள்ளது. ஒவ்வொரு கேரக்டரிலும் நடிப்பவர்கள் மிகவும் யதார்த்தமாக நடிப்பது தான் இந்த சீரியலின் தொடர் வெற்றிக்கு முக்கியமான காரணம். தற்போது ராதிகா கர்ப்பமாக இருப்பதால் வெடிக்கும் பிரச்சினைகள் கதைக்களத்தை மேலும் சுவாரஸ்யமாக்கி உள்ளது. 

பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா, செழியன், அமிர்தா, ஜெனியின் அப்பா ஜோசப் இப்படி பல கேரக்டர்களில் நடித்தவர்கள் மாறிவிட்டனர். பாக்கியலட்சுமி சீரியல் தொடங்கிய நாள் முதல் தற்போது வரை பாக்கியாவுக்கு சப்போர்ட்டாக எழில் தான் இருந்து வந்தார். எழில் கேரக்டரில் நடிகர் விஜே விஷால்   நடித்து வந்தார். பாசிட்டிவ் கேரக்டரில் நடித்து வந்த அவரின் நடிப்பு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. 

VJ Vishal: பாக்கியலட்சுமி எழில் இனி இல்லை.. விஷால் விலகக் காரணம்.. புது என்ட்ரி இவர் தான்!

தொகுப்பாளராக வேண்டும் என்ற ஆசையோடும் கனவோடும் வாய்ப்பு தேதி வந்த விஷாலுக்கு பாக்கியலட்சுமி தொடரில் நடிக்க வாய்ப்பு வந்தது. இது தான் அவர் நடிக்கும் முதல் சீரியல். கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டு தன்னுடைய திறமையை வெளிப்படுத்தினார். சீரியலில் நடித்துக் கொண்டிருந்த அதே வேளையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'ரெடி ஸ்டெடி போ' நிகழ்ச்சியை ரக்சனுடன் சேர்ந்து தொகுத்து வழங்கி வந்தார். கடந்த குக்கு வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியிலும் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார். 

இப்படி பிரபலமான ஒரு பர்சனாலிடியாக இருந்து வந்த விஜே விஷால் பாக்கியலட்சுமி தொடரில் இருந்து திடீரென விலகியுள்ளார். இது அவரின் தீவிர ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. அவர் விலகக் காரணம் என்ன என்பது இதுவரையில் தெரியவில்லை. இது குறித்து பல நாட்களாகவே வதந்திகள் பரவி வந்த நிலையில் கூட, விஜே விஷால் அதை மறுத்து எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. இது பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. 

எழில் கதாபாத்திரத்துக்கான முக்கியத்துவம் குறைந்து வருவதும் ஒரு காரணமாக இருக்கலாம் அல்லது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கேரக்டர் கொண்ட சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இப்படி பல தரப்பட்ட விவாதங்கள் ரசிகர்கள் மத்தியில்  நடைபெற்று வருகிறது. 

விஜே விஷால் நடித்து வந்த எழில் கதாபாத்திரத்தில் புதிய எழிலாக 'ஈரமான ரோஜாவே 2 ' சீரியலில் நடித்து வந்த நடிகர் நவீன் இணைந்துள்ளார். இவரின் காட்சிகள் இன்றைய எபிசோடிலேயே வருகிறது என்பது மற்றுமொரு சர்ப்ரைஸ். விரைவில் நடிகர் நவீனை எழில் கதாபாத்திரமாக ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அமித் ஷா மேடையில் என்னதான் சொன்னார்? - கையெடுத்து கும்பிட்டுவிட்டு எஸ்கேப் ஆன தமிழிசை!
அமித் ஷா மேடையில் என்னதான் சொன்னார்? - கையெடுத்து கும்பிட்டுவிட்டு எஸ்கேப் ஆன தமிழிசை!
Breaking News LIVE: வயநாடு மக்களவை தொகுதி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல்?
Breaking News LIVE: வயநாடு மக்களவை தொகுதி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல்?
போலீசார் கண் முன்னே 3 பேருக்கு கத்திக்குத்து... போடியில் பரபரப்பு
போலீசார் கண் முன்னே 3 பேருக்கு கத்திக்குத்து... போடியில் பரபரப்பு
TN Assembly Session:  9 நாள்கள் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர்.. வெளியான நிகழ்ச்சி நிரல் விவரம்..!
9 நாள்கள் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர்.. வெளியான நிகழ்ச்சி நிரல் விவரம்..!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Kanimozhi : உதய்-க்காக கனிமொழிக்கு பதவியா? கலைஞர் பாணியில் ஸ்டாலின்! பின்னணி என்ன?Amitshah Warning to Tamilisai : மேடையிலேயே  தமிழிசையை கண்டித்த அமித்ஷா? பாஜக உட்கட்சி பூசல்Annamalai Vs Tamilisai : ”தலைமைக்கு கட்டுப்படனும்” பாஜக போட்ட ORDER! பதறிய அ.மலை, தமிழிசைAnnamalai Minister post  : அண்ணாமலைக்கு NO... அமைச்சர் ஆகாதது ஏன்? பாஜகவின் ப்ளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அமித் ஷா மேடையில் என்னதான் சொன்னார்? - கையெடுத்து கும்பிட்டுவிட்டு எஸ்கேப் ஆன தமிழிசை!
அமித் ஷா மேடையில் என்னதான் சொன்னார்? - கையெடுத்து கும்பிட்டுவிட்டு எஸ்கேப் ஆன தமிழிசை!
Breaking News LIVE: வயநாடு மக்களவை தொகுதி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல்?
Breaking News LIVE: வயநாடு மக்களவை தொகுதி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல்?
போலீசார் கண் முன்னே 3 பேருக்கு கத்திக்குத்து... போடியில் பரபரப்பு
போலீசார் கண் முன்னே 3 பேருக்கு கத்திக்குத்து... போடியில் பரபரப்பு
TN Assembly Session:  9 நாள்கள் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர்.. வெளியான நிகழ்ச்சி நிரல் விவரம்..!
9 நாள்கள் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர்.. வெளியான நிகழ்ச்சி நிரல் விவரம்..!
Share Market Today: தேக்கநிலையில் இந்திய பங்குச் சந்தை; சரிவில் இன்ஃபோசிஸ், டிசிஎஸ்
Share Market Today: தேக்கநிலையில் இந்திய பங்குச் சந்தை; சரிவில் இன்ஃபோசிஸ், டிசிஎஸ்
kuwait Fire Accident: குவைத்தில் பயங்கர தீ விபத்து.. தமிழர்கள் உட்பட 40க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
குவைத்தில் பயங்கர தீ விபத்து.. தமிழர்கள் உட்பட 40க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
Endometriosis: கேரளா ஸ்டோரி பட நடிகைக்கு 'எண்டோமெட்ரியோசிஸ்’ பாதிப்பு!  அறிகுறிகளும் தீர்வும்!
Endometriosis: கேரளா ஸ்டோரி பட நடிகைக்கு 'எண்டோமெட்ரியோசிஸ்’ பாதிப்பு! அறிகுறிகளும் தீர்வும்!
Travel With ABP: மேகத்தின் பிடியில் உள்ள மேகமலை ..  குறைந்த செலவில் ஒரு நாளில் கண்டு ரசிக்க சூப்பர் இடம்..!
மேகத்தின் பிடியில் உள்ள மேகமலை .. குறைந்த செலவில் ஒரு நாளில் கண்டு ரசிக்க சூப்பர் இடம்..!
Embed widget