மேலும் அறிய

Baakiyalakshmi August 19 : சமையலில் சொதப்பி பாக்கியாவை அசிங்கப்படுத்திய செல்வி... ராதிகா கொடுத்த ஷாக்... இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட் 

* செல்வி சமையலில் சொதப்பியதால் பெரிய ரகளை செய்யும் ராதிகா* பாக்கியாவுக்கு ராதிகா கொடுத்த ஷாக்இன்றைய பாக்கியலட்சுமி எபிசோடில் என்ன நடந்தது?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) தொடரின் இன்றைய எபிசோடில் பாக்கியா கேன்டீன் பொறுப்புகளை எல்லாம் செல்வியிடமும்  மற்றவர்களிடம் கொடுத்து விட்டு ஜாக்கிரதையாக செய்யணும் என சொல்லிவிட்டு காலேஜ் கிளம்புகிறாள். அங்கு இனியாவின் தோழிகளிடம் பேசிக்கொண்டு இருக்கும்போது பாக்கியா வந்து அவர்களுக்கு ஸ்னாக்ஸ் கொடுக்கிறாள். 

இனியாவின் தோழி ஒருத்திக்கு ஒரு பிரச்சினை. அவளுடன் ஸ்கூலில் படித்த பையன் ஒருவன் வேறு ஒரு காலேஜில் சேர்ந்து விட்டான். இப்போது தனக்கு ப்ரொபோஸ் செய்துள்ளான். இதை எப்படி சமாளிப்பது என தெரியாமல் அந்த பொண்ணும் குழப்பத்தில் இருக்க இந்த பிரச்சனையை எப்படி சமாளிப்பது என சூப்பர் ஐடியா ஒன்றை சொல்கிறாள் பாக்கியா. அதை பார்த்த இனியா "நீ எப்படி மா இப்படி மாறிட்ட" என பாக்கியாவிடம் சொல்கிறாள். 

Baakiyalakshmi August 19 : சமையலில் சொதப்பி பாக்கியாவை அசிங்கப்படுத்திய செல்வி... ராதிகா கொடுத்த ஷாக்... இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட் 

பாக்கியா காலேஜ் சென்றதும் கேன்டீனில் பேசிக்கொண்டே வேலை செய்துகொண்டு இருக்கிறார்கள். அப்போது செல்வியின் மகன் போன் செய்து "அப்பா குடித்துவிட்டு வந்து அடிக்கிறார்" என சொன்னதும் கோபமாக செல்வி பேசிக்கொண்டே காலிஃபிளவரை கருக விடுகிறாள். ரய்தாவில் உப்பு போடவில்லை என நினைத்து மறுபடியும் உப்பை போடுகிறாள். ராதிகா வந்து சாப்பாடு ரெடியா என கேட்டதும் செல்வி எல்லாம் ரெடி என சொல்கிறாள். வந்தவர்கள் சாப்பாடு நன்றாக இல்லை என சொல்லிவிட்டதால் பெரிய பிரச்சனை செய்கிறாள் ராதிகா. 

பழனிச்சாமியும் லோபிதாவும் பாக்கியாவின் காலேஜுக்கு வந்து அன்றைக்கு ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாசில் என்ன சொல்லி கொடுத்தார்களோ அதை பாக்கியாவுக்கு சொல்லிக்கொடுக்கிறார்கள். அப்போது செல்வி பாக்கியாவுக்கு போன் செய்து "நீ உடனே வா அக்கா, இங்க பெரிய பிரச்னையாகிவிட்டது" என்று சொல்லி கேன்டீனுக்கு வர சொல்கிறாள். 

கேன்டீனுக்கு பாக்கியா வேகவேகமாக வருகிறாள். அங்கே ராதிகா அனைவரையும் பயங்கரமாக திட்டி கொண்டு இருக்கிறாள். நடந்த விஷயங்களை நானே சொல்கிறேன் என ராதிகா சொல்கிறாள். "காலிபிளவர் மஞ்சூரியன் நல்லா கரிக்கட்டை மாதிரி இருந்தது. வாயில வைக்க முடியவில்லை. நல்லா எல்லார் முன்னாடியும் அசிங்கப்படுத்திட்டீங்க" என கத்துகிறாள். 

பாக்கியா மன்னிப்பு கேட்க "மன்னிப்பு கேட்டால் எல்லாம் முடிந்து விடுமா?" என்கிறாள் ராதிகா. "இந்த முறை மட்டும் மன்னிச்சுடுங்க" என பாக்கியா சொன்னதும் "இன்னும் கேன்டீன் உங்ககிட்ட இருக்கும் என நம்புறீங்களா? கோடீஸ்வரன் சார் கிட்ட சொல்லிட்டேன். நீங்க கிளம்பிட வேண்டியதுதான்" என ராதிகா சொன்னதும் அதிர்ச்சியாகிறாள் பாக்கியா. 

Baakiyalakshmi August 19 : சமையலில் சொதப்பி பாக்கியாவை அசிங்கப்படுத்திய செல்வி... ராதிகா கொடுத்த ஷாக்... இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட் 

பாக்யா தலையில் அடித்து கொண்டு அழுகிறாள். செல்வி எல்லாம் என்னுடைய தப்புதான் அக்கா.. என்னை மன்னிச்சுடு.. என கெஞ்சுகிறாள். "உங்களை நம்பி விட்டுட்டு போய் இருக்க கூடாது. எல்லாம் என்னுடைய தப்புதான். இப்படி தப்பு பண்ணா நம்மளை கீழே புடிச்சு தள்ளிடுவாங்க. நம்மள மாதிரி சாதிக்க நினைக்கிற மற்ற பெண்களையும் இப்படித்தான் என சொல்லி முன்னேற விட மாட்டாங்க" என அழுது புலம்ப பழனிச்சாமி அவர்கள் இருவரையும் சமாதானம் செய்கிறார். அத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) எபிசோட் முடிவுக்கு வந்தது.  

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: கற்பகத்தை தீர்த்துக்கட்ட ஸ்கெட்ச்... காப்பாற்றுவாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கற்பகத்தை தீர்த்துக்கட்ட ஸ்கெட்ச்... காப்பாற்றுவாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சர்ப்ரைஸ் தந்த கார்த்திக்.. சந்திரகலாவுக்கு தெரிந்த உண்மை! கார்த்திகை தீபத்தில் இனி திக் திக்..!
Karthigai Deepam: சர்ப்ரைஸ் தந்த கார்த்திக்.. சந்திரகலாவுக்கு தெரிந்த உண்மை! கார்த்திகை தீபத்தில் இனி திக் திக்..!
Karthigai Deepam: ரேவதிக்கு மீண்டும் கல்யாணமா? சந்திரகலா போடும் சதித்திட்டம் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேவதிக்கு மீண்டும் கல்யாணமா? சந்திரகலா போடும் சதித்திட்டம் - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
​
​"2 நிமிட 'ரீல்ஸ்' எடுக்க தான் சட்டமன்றமா ?" – மேடையில் ஆவேசப்பட்ட கனிமொழி
Chennai Power Cut: சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
VS Babu Health Update: தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலை எப்படி இருக்கு? அமைச்சர் அருண்ராஜ் முக்கிய அப்டேட்!
VS Babu Health Update: தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலை எப்படி இருக்கு? அமைச்சர் அருண்ராஜ் முக்கிய அப்டேட்!
Sugarcane Farmers : கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
Embed widget