மேலும் அறிய

Actress Kuyili:சொல்வதெல்லாம் உண்மை பாணியிலான நிகழ்ச்சி.. நடுவராக களம் காணும் நடிகை குயிலி..!

1983 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான தூங்காதே தம்பி தூங்காதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடன கலைஞராக குயிலி அறிமுகமானார்.

தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகையாக வலம் வந்த குயிலி சின்னத்திரையில் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

1983 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான தூங்காதே தம்பி தூங்காதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடன கலைஞராக குயிலி அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து 1984 ஆம் ஆண்டு வெளியான பூவிலங்கு படத்தில் நடிகையாக அறிமுகமான குயிலி அதன் பின் டிசம்பர் பூக்கள், ஆயிரம் பூக்கள் மலரட்டும், பாரு பாரு பட்டணம் பாரு உள்ளிட்ட சில படங்களில் முதன்மை வேடத்தில் நடித்தார்.

1987 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான நாயகன் படத்தில் இடம் பெற்ற நிலா அது வானத்து மேலே என்ற பாடலை நடனமாடி தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். இதனைத் தொடர்ந்து கமல்ஹாசன், கார்த்திக்,விஜயகாந்த், பிரசாந்த், தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். 

சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த அதே நேரத்தில் சின்னத்திரையில் கால் பதித்த குயிலி வாழ்க்கை, அண்ணி, அண்ணாமலை, சொர்க்கம், கோலங்கள், கனா காணும் காலங்கள், மேகலா,அன்பே வா, முந்தானை முடிச்சு, சாந்தி நிலையம், சரவணன் மீனாட்சி ,கல்யாண முதல் காதல் வரை, நினைத்தாலே இனிக்கும், என பல சீரியல்களில் தனது நடிப்புத் திறமையால் தனி ரசிகர்களை கொண்டுள்ளார். 

View this post on Instagram
 
A post shared by K-Diaries (@kdiaries1)

இப்படியான நிலையில் நடிகை குயிலி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க உள்ளார். கலைஞர் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சிக்கு வாழ்ந்து காட்டுவோம் என பெயரிடப்பட்டுள்ளது. குடும்பம் மற்றும் கணவன் மனைவிக்குள்ளான பிரச்சனைகளுக்கு உளவியல் மற்றும் சட்ட ரீதியாக ஆலோசனை வழங்குவது பற்றிய நிகழ்ச்சியாக வாழ்ந்து காட்டுவோம் ஒளிபரப்பாக உள்ளது. இது தமிழில் ஒளிபரப்பான சொல்வதெல்லாம் உண்மை,  நேர்கொண்ட பார்வை போன்ற வரிசையிலான நிகழ்ச்சியாகும். 

குடும்ப உறவுகளில் எழும் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்ட சொல்வதெல்லாம் உண்மை அளவுக்கு இந்த நிகழ்ச்சிக்கு இருக்குமா என்பது குயிலி இந்த நிகழ்ச்சியில் எழும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை பொறுத்து இருக்கும் என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.  

மேலும் படிக்க: Ghilli Re-release: மீண்டும் களத்தில் இறங்கும் வேலு.. கில்லி படம் ரீ-ரிலீஸ் பற்றி வெளியான அறிவிப்பு!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
Embed widget