மேலும் அறிய

Jai Bhim on Oscar Youtube: ஆஸ்கர் கலெக்‌ஷனில் ஜெய்பீம்: கவுரப்படுத்திய ஆஸ்கர்! பெருமையில் தமிழ் சினிமா!

திரைப்பட கவுரவமாக பார்க்கப்படும் ஆஸ்கர் கம்யூனிட்டி ஜெய்பீமை கவுரவம் செய்துள்ளது. 

Amazon Prime ஓடிடி தளத்தில் வெளியாகி பட்டையை கிளப்பிய திரைப்படம் ‘ஜெய் பீம்.  சமூக வலைத்தளங்களில் ‘டாக் ஆஃப் தி டவுனாக’ மாறிய ஜெய்பீம் ரசிகர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் அரசியல் ரீதியாகவும் வரவேற்பை பெற்றது. படத்தை பார்த்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் படத்தை பார்த்து தூக்கம் வரவில்லை என பாராட்டினார். படத்தில் சூர்யா அத்தனை எதார்த்தமாக , படத்தின் தேவை மற்றும் அதில் தனக்கான கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து நடித்தார் சூர்யா. ஒவ்வொரு சீனிலும் சூர்யா பேசும் அழுத்தமான வசனங்கள் பார்ப்பவருக்கும் மெய் சிலிர்ப்பை உண்டாக்கும்
Jai Bhim on Oscar Youtube: ஆஸ்கர் கலெக்‌ஷனில் ஜெய்பீம்: கவுரப்படுத்திய ஆஸ்கர்! பெருமையில் தமிழ் சினிமா!

ஒரு பக்கம் பாராட்டு குவிந்ததாலும் விமர்சனத்துக்கும் பஞ்சம் இல்லாமல் சர்ச்சையில் சிக்கியது படம்.   படத்தில் இடம்பெற்ற காட்சியில் வில்லன் கதாபாத்திரத்திற்கு குரு என்று பெயர் வைத்ததற்கும், காலண்டரில் அக்னி கலசம் வைக்கப்பட்டதும் பெரிய சர்ச்சையை உண்டாக்கியது.  குறிப்பிட்ட சமூகத்தை குறி வைத்து இந்தக்காட்சிகள் வைக்கப்பட்டதாக கண்டனங்கள் எழுந்தன. படக்குழுவுக்கு எதிராக வழக்குகள் பதியப்பட்டன. போராட்டங்கள் சில நடத்தப்பட்டன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அறிக்கை விடுத்த படத்தில் இயக்குநர் ஞானவேல்  அனைத்து சமூகத்தினருக்கும் இடையே நல்லிணக்கம் ஏற்படுத்தும் கலைவடிவமே திரைப்படம் என்று நான் உறுதியாக நம்புகிறேன். 

இத்திரைப்பட ஆக்கத்தில் எந்தவொரு தனிப்பட்ட நபரையோ, எந்தவொரு குறிப்பிட்ட சமுதாயத்தையோ அவமதிக்கும் எண்ணம் சிறிதளவும் இல்லை என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூற விரும்புகிறேன். இதன் பொருட்டு மன வருத்தம் அடைந்தவர்களுக்கும், புண்பட்டவர்களுக்கும் என் உளப்பூர்வமான வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். அதன் பின்னர் சர்ச்சைகள் அடங்கியது.

 இந்நிலையில் படம் உலகம் முழுவதும் பல்வேறு தரப்பட்ட மக்களையும் சென்று சேர்ந்து வருகிறது. ஜெய்பீம் படத்தை நூற்றுக்கணக்கானவர்கள் முன்னிலையில் வட இந்தியாவில் திரையிட்டு காண்பிக்கப்பட்டது அதற்கு ஒரு உதாரணம். இப்போது திரைப்பட கவுரவமாக பார்க்கப்படும் ஆஸ்கர் கம்யூனிட்டி ஜெய்பீமை கவுரவம் செய்துள்ளது. 

ஆஸ்கரின் அதிகாரப்பூர்வ யூ டியூப் சேனலில் ஜெய்பீம் திரைப்படம் தொடர்பான வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. படத்தின் காட்சிகளும், இயக்குநர் ஞானவேலின் நேர்காணலும் அதில் இடம்பெற்றுள்ளது. இது தமிழ் சினிமாவுக்கும், ஜெய்பீம் படக்குழுவுக்கும் கிடைத்த அங்கீகாரம் என பலரும் பதிவிட்டு வருகின்றனர்

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண 

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More

தலைப்பு செய்திகள்

Aamir Khan: ஆமிர்கான் 3வது திருமணம்.. வராத இரண்டாவது மனைவி.. முதல் மனைவி குடும்பத்துடன் ஆஜர்!
Aamir Khan: ஆமிர்கான் 3வது திருமணம்.. வராத இரண்டாவது மனைவி.. முதல் மனைவி குடும்பத்துடன் ஆஜர்!
கட்டாகுஸ்தி 2: வீட்டு வேலை செய்யும் கணவன் லூசரா? விஷ்ணு விஷால் அதிரடி!
கட்டாகுஸ்தி 2: வீட்டு வேலை செய்யும் கணவன் லூசரா? விஷ்ணு விஷால் அதிரடி!
புலி படத்தில் விஜய் நடித்ததற்கு இதுதான் காரணம்..நட்டி பகிர்ந்த தகவல்
புலி படத்தில் விஜய் நடித்ததற்கு இதுதான் காரணம்..நட்டி பகிர்ந்த தகவல்
ரெண்டே ரெண்டு பேருக்கு தான் போட்டியே..ஒரே நாளில் வெளியாகும் ஜனநாயகன் மற்றும் சிக்மா
ரெண்டே ரெண்டு பேருக்கு தான் போட்டியே..ஒரே நாளில் வெளியாகும் ஜனநாயகன் மற்றும் சிக்மா

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Government : ‘விஜய் ஆட்சிக்கு எதிராக 19 எம்.எல்.ஏக்கள்’ பரபரப்பு தகவலை வெளியிட்ட திமுக..!
‘விஜய் ஆட்சிக்கு எதிராக 19 எம்.எல்.ஏக்கள்’ தகவலை வெளியிட்ட திமுக..!
TVK DMK: உதயநிதிக்கு விஷயம் தெரியுமா..! தவெகவிற்கு தூதுவிடும் உயிர் நண்பர்? சிக்கலில் பள்ளிக்கல்வி மாஜி
உதயநிதிக்கு விஷயம் தெரியுமா..! தவெகவிற்கு தூதுவிடும் உயிர் நண்பர்? சிக்கலில் பள்ளிக்கல்வி மாஜி
Thiruma TVK Vijay: ”தவெக ஆட்சிக்கு வந்ததில் மகிழ்ச்சி இல்லை..! நாங்கள் திமுக கூட்டணிங்க” திருமாவளவன் பேச்சு
”தவெக ஆட்சிக்கு வந்ததில் மகிழ்ச்சி இல்லை..! நாங்கள் திமுக கூட்டணிங்க” திருமாவளவன் பேச்சு
SENTHIL BALAJI vs TVK : செந்தில் பாலாஜியை நெருங்கும் போலீஸ்- இன்று காத்திருக்கும் அதிரடி ட்விஸ்ட்.?
செந்தில் பாலாஜியை நெருங்கும் போலீஸ்- இன்று காத்திருக்கும் அதிரடி ட்விஸ்ட்.?
Crime: திருமணமாகி மூன்றே மாதங்கள்..! காதலிக்காக அழகு மனைவிக்கு கணவன் செய்த கொடூரம் - நேபாளம் ப்ளான்
திருமணமாகி மூன்றே மாதங்கள்..! காதலிக்காக அழகு மனைவிக்கு கணவன் செய்த கொடூரம் - நேபாளம் ப்ளான்
Thiruma TVK Vijay:
"விசிகவை டேமேஜ் செய்கிறாராம், அரசியல் செய்கிறாராம்" உதயநிதி மீது திருமாவளவன் அட்டாக்
Aadhav Arjuna vs DMK : ஆதவ் அர்ஜூனாவின் அமைச்சர் பதவிக்கு குறி.?? திமுகவிற்கு கிரீன் சிக்னல் கொடுத்த உச்சநீதிமன்றம்
ஆதவ் அர்ஜூனாவின் அமைச்சர் பதவிக்கு குறி.?? திமுகவிற்கு கிரீன் சிக்னல் கொடுத்த உச்சநீதிமன்றம்
TVK DMK: உளறிய உதயநிதி?லிஸ்ட் போட்டு திமுகவிற்கு முரட்டு அடி கொடுத்த தவெக - எது பேரிடர் காலம்?
உளறிய உதயநிதி?லிஸ்ட் போட்டு திமுகவிற்கு முரட்டு அடி கொடுத்த தவெக - எது பேரிடர் காலம்?
Embed widget