மேலும் அறிய

Samantha with junior NTR | மீண்டும் வெற்றிக்கூட்டணியுடன் இணையும் சமந்தா- இதுவரையில் நடிக்காத கதாபாத்திரம்?

மிகுந்த பொருட்செலவில் உருவாகவுள்ள அந்த படத்தில் சமந்தா இதுவரை நடிக்காத ரோலில் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

கோலிவுட் , டோலிவுட் என கலக்கி வரும் சமந்தா நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல். இது தவிர சாகுந்தலா, யசோதா உள்ளிட்ட தெலுங்கு படங்களையும் முடித்து கொடுத்துள்ளார் சமந்தா. இந்த நிலையில் அடுத்ததாக ஜுன்னியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஜூனியர் என்.டி.ஆர் தற்போது ஆர்.ஆர்.ஆர் படத்தை முடித்துள்ளார். ராஜமௌளி இயக்கத்தில் ராம்சரண் கூட்டணியில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு , இந்தி , கன்னடம் , மலையாளம் என முக்கிய பிராந்திய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது. இந்த படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கும் ஜூனியர் என்.டி.ஆர் , அடுத்ததாக கொரட்டலா சிவாவுடன் இணைய இருப்பதாக அதிகாரப்பூர்வ செய்திகள் வெளியான நிலையில், சமந்தா ஜூனியர் என்.டி.ஆருக்கு ஹீரோயினாக நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் அதற்கு சமந்தா பச்சைக்கொடி அசைத்ததாகவும் தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது. மிகுந்த பொருட்செலவில் உருவாகவுள்ள அந்த படத்தில் சமந்தா இதுவரை நடிக்காத ரோலில் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

Samantha with junior NTR | மீண்டும் வெற்றிக்கூட்டணியுடன் இணையும் சமந்தா- இதுவரையில் நடிக்காத கதாபாத்திரம்?

பெரும்பாலும் தெலுங்கு படங்களில் முக்கிய நடிகர்களுடன் நடிக்கும்  எந்தவொரு முன்னணி நடிகையாக இருந்தாலும் நடிப்பதற்கான ஸ்கோப் கிடைப்பதில்லை. காதல் காட்சிகளுக்காவும்  சில இடங்களில் கவர்ச்சி காட்டுவதற்காகவும் மட்டுமே நடிகைகள் வந்து போவது போல் தோன்றும் . இந்த நிலையில் சமந்தா படத்தில் ஒப்பந்தமாகியிருப்பதால் அவரை படத்தில் உயர்த்தி காட்டுவது போன்று கேரக்டரை உருவாக்கியுள்ளாராம் கொரட்டல சிவா.சங்கராந்தி பண்டிகை முடிந்த கையோடு படத்திற்கான பூஜை ஐதராபாத்தில் தொடங்கும் என கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம். முன்னதாக சமந்தா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் காம்போவில் பிருந்தாவனம் , ராமையா வஸ்தவய்யா, ரபசா,ஜனதா கேரேஜ் உள்ளிட்ட படங்கள் வெளியாகின. இதில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ஜனதா கேரேஜ் திரைப்படத்தைகொரொட்டல சிவா இயக்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைய இருப்பதுதெலுங்கு ரசிகர்கள் மத்தியில் குஷியை ஏற்படுத்தியுள்ளது.

Samantha with junior NTR | மீண்டும் வெற்றிக்கூட்டணியுடன் இணையும் சமந்தா- இதுவரையில் நடிக்காத கதாபாத்திரம்?

சமந்தா ஹாலிவுட் இயக்குனர் பிலிப்ஜான் இயக்கத்தில் உருவாக உள்ள  Arrangements of Love என்னும் வெப்தொடர் ஒன்றில் நடிக்க  ஒப்பந்தமாகியுள்ளார். இந்த வெப்தொடரை தெலுங்கு திரை உலகில் மிகப்பெரிய வெற்றிபெற்ற ’ஓ பேபி’ என்ற படத்தை தயாரித்த நிறுவனம் தயாரிக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து ஃபேமிலி மேன் வெப் தொடர் இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகேவுடன் இணந்து சிடாடெல் என்னும் வெப் தொடரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தியா மற்றும் இத்தாலி என இரண்டு தேசங்களை இணைக்கும் வகையில்  உருவாக்கப்படவுள்ள கதை என கூறப்படுகிறது. இதில் சமந்தாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிக்கவுள்ளார்.  இந்நிலையில் உலக புகழ்பெற்ற அவஞ்சர்ஸ் என்னும் படத்தின் இயக்குநர்கள் ரூசோ சகோதரர்கள் வருகிற 2022 ஆம் ஆண்டு  இதனை வெளியிட உள்ளதாகவும் , சிடாடெல் வெப் தொடரை பிரபல மார்வெல் தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

தலைப்பு செய்திகள்

Aamir Khan: ஆமிர்கான் 3வது திருமணம்.. வராத இரண்டாவது மனைவி.. முதல் மனைவி குடும்பத்துடன் ஆஜர்!
Aamir Khan: ஆமிர்கான் 3வது திருமணம்.. வராத இரண்டாவது மனைவி.. முதல் மனைவி குடும்பத்துடன் ஆஜர்!
கட்டாகுஸ்தி 2: வீட்டு வேலை செய்யும் கணவன் லூசரா? விஷ்ணு விஷால் அதிரடி!
கட்டாகுஸ்தி 2: வீட்டு வேலை செய்யும் கணவன் லூசரா? விஷ்ணு விஷால் அதிரடி!
புலி படத்தில் விஜய் நடித்ததற்கு இதுதான் காரணம்..நட்டி பகிர்ந்த தகவல்
புலி படத்தில் விஜய் நடித்ததற்கு இதுதான் காரணம்..நட்டி பகிர்ந்த தகவல்
ரெண்டே ரெண்டு பேருக்கு தான் போட்டியே..ஒரே நாளில் வெளியாகும் ஜனநாயகன் மற்றும் சிக்மா
ரெண்டே ரெண்டு பேருக்கு தான் போட்டியே..ஒரே நாளில் வெளியாகும் ஜனநாயகன் மற்றும் சிக்மா

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vaiko: திமுகவுக்கு என்னை பேச தகுதியே இல்ல.. கொந்தளித்த வைகோ.. மிரண்ட மதிமுக தொண்டர்கள்!
Vaiko: திமுகவுக்கு என்னை பேச தகுதியே இல்ல.. கொந்தளித்த வைகோ.. மிரண்ட மதிமுக தொண்டர்கள்!
Ali Khamenei Sons Crying Video: டெஹ்ரானில் நடந்த அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு; கண்ணீர் விட்டு கதறிய 3 மகன்கள்; வீடியோ
டெஹ்ரானில் நடந்த அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு; கண்ணீர் விட்டு கதறிய 3 மகன்கள்; வீடியோ
திருப்பதியில் படியேறி சாமி தரிசனம் செய்த 116 வயது தமிழ்நாட்டு மூதாட்டி.. குவியும் வாழ்த்து!
திருப்பதியில் படியேறி சாமி தரிசனம் செய்த 116 வயது தமிழ்நாட்டு மூதாட்டி.. குவியும் வாழ்த்து!
TVK Vs Udhayanidhi: “திமுகவிற்கு இது பேரிடர் காலம்தான், ஒப்புக்கொண்ட உதயநிதிக்கு வாழ்த்துகள்“ - தவெக தரமான பதிலடி
“திமுகவிற்கு இது பேரிடர் காலம்தான், ஒப்புக்கொண்ட உதயநிதிக்கு வாழ்த்துகள்“ - தவெக தரமான பதிலடி
RBI: ஆர்பிஐயில் ரூ.1.5 லட்சத்தில் ஊதியம்; விண்ணப்பிக்க நாளை கடைசி- முழு விவரம்
RBI: ஆர்பிஐயில் ரூ.1.5 லட்சத்தில் ஊதியம்; விண்ணப்பிக்க நாளை கடைசி- முழு விவரம்
CM Joseph Vijay: கரூர் செல்லும் முதல்வர் விஜய்.. உறுதி செய்த முக்கிய புள்ளிகள்.. என்ன பிளான்?
CM Joseph Vijay: கரூர் செல்லும் முதல்வர் விஜய்.. உறுதி செய்த முக்கிய புள்ளிகள்.. என்ன பிளான்?
நாட்டின் மலிவான எலெக்ட்ரிக் கார் இன்னும் குறைவா.. ரூ.1.45 லட்சம் தள்ளுபடி: மிஸ் பண்ணிடாதீங்க!
நாட்டின் மலிவான எலெக்ட்ரிக் கார் இன்னும் குறைவா.. ரூ.1.45 லட்சம் தள்ளுபடி: மிஸ் பண்ணிடாதீங்க!
K.P.Munusamy: தவெகவுக்கு சென்ற ஓடுகாலிகள்.. விஜயபாஸ்கர், ஆதவ் அர்ஜூனாவை விளாசிய கே.பி.முனுசாமி!
K.P.Munusamy: தவெகவுக்கு சென்ற ஓடுகாலிகள்.. விஜயபாஸ்கர், ஆதவ் அர்ஜூனாவை விளாசிய கே.பி.முனுசாமி!
Embed widget