மேலும் அறிய

Netflix Releases:அஜித் படம் முதல் சமுத்திரகனி படம் வரை…நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி உரிமைப் பெற்ற படங்களின் பட்டியல்!

Netflix Releases:நெட்ஃப்ளிக்ஸ் தளம், நடிகர் அஜித் குமாரின் படம் முதல் சியான் விக்ரமின் படம் வரை பல படங்களின் ஓடிடி உரிமையை பெற்றுள்ளது.

திரையரங்கிற்கு சென்று பெரிய திரையில் படங்களை பார்க்கும் காலம் மாறி, தற்போது தொடு திரையில் படங்களை பார்க்கும் காலம் வந்துவிட்டது. அதிலும், இந்தியாவில் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகும் படம் மற்றும் தொடர் என அனைத்திற்கும் பல ரசிகர்கள் உள்ளனர். தற்போது தங்களது தளத்தில் வெளியாகும் தமிழ் படங்களின் லிஸ்டை நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலை ஆராய்வோம் வாங்க…

 

பின்வரும் படங்களின் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளின் ஓடிடி தள உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் தளம் வாங்கியுள்ளது.

ஏகே-62:

பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கவுள்ள படம், ஏகே 62. இந்த படத்தின் போஸ் தியேட்டர் ரிலீஸ் அதாவது திரையரங்கில் வெளியானதற்கு பிறகான ஓடிடி உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் இணையதளம் பெற்றுள்ளது. தற்போது வெளியான துணிவு படத்தின் ஓடிடி உரிமையையும் நெட்ஃப்ளிஸ் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

வாத்தி:

தனுஷ் ஹீரோவாக நடிக்கும் வாத்தி திரைப்படம் இந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ஓடிடி உரிமையையும் நெட்ஃப்ளிக்ஸ் தளம் வாங்கியுள்ளது. 


Netflix Releases:அஜித் படம் முதல் சமுத்திரகனி படம் வரை…நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி உரிமைப் பெற்ற படங்களின் பட்டியல்!

ஜிகர் தண்டா:

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்ப்பை பெற்ற படம் ஜிகர் தண்டா. இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த செய்தியே, அண்மையில்தான் வெளியானது. ஆனால், இப்படத்தின் போஸ்ட் தியேட்டர் ரிலீஸின் ஓடிடி உரிமையை பெற்றுவிட்டதாக நெட்ஃப்ளிக்ஸ் அப்டேட் கொடுத்துள்ளது. 

சந்திரமுகி-2:

ராதிகா சரத்குமார், ராகவா லாரன்ஸ், வடிவேலு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ள படம் சந்திரமுகி-2. இப்படம், திரையரங்கில் வெளியான பிறகு ஓடிடியில் வெளியாவதற்கான உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் கைப்பற்றியுள்ளது. 

தங்கலான்:

‘சியான் விக்ரம்-பா.ரஞ்சித்தின் கூட்டணியில் உருவாகிவரும் படம் தங்கலான். இந்த படம், திரையரங்கில் வெளியான பிறகு நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகவுள்ளது. 

ஜப்பான்:

சர்தார் படத்தையடுத்து கார்த்தி நடித்துவரும் படம்தான் ஜப்பான். இந்த படத்தின் போஸ்டர் பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று வெளியானது. இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.


Netflix Releases:அஜித் படம் முதல் சமுத்திரகனி படம் வரை…நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி உரிமைப் பெற்ற படங்களின் பட்டியல்!

மாமன்னன்:

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் திரையரங்கில் வெளியாகவுள்ள மாமன்னன் படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் வாங்கியுள்ளது. கர்ணன் படத்தை இயக்கி புகழ் பெற்ற மாரி செல்வராஜ், மாமன்னன் படத்தினை இயக்குகிறார்.

இறைவன்:

ஜெயம் ரவி, நயன்தாராவின் நடிப்பில் உருவாகிவரும் படம்தான் இறைவன். இவர்கள் இருவரும் தனி ஒருவன் படத்திற்கு பிறகு இந்த படத்தில் ஜோடி சேருகின்றனர். இந்த படத்தின் ஓடிடி உரிமையும் நெட்ஃப்ளிக்ஸின் கையில்தான் உள்ளது. 

ஆர்யன்:

விஷ்ணு விஷாலின் நடிப்பில் உருவாகி வரும் படம், ஆர்யன். இப்படத்தின் பர்ஸ்ட் லுக், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வெளியானது. இதில், விஷ்ணு விஷாலிற்கு ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார். இதன் ஓடிடி உரிமையையும் நெட்ஃப்ளிக்ஸே வாங்கியுள்ளது. விஷ்ணு விஷாலின் நடிப்பில் முன்னதாக வெளியான கட்டா குஸ்தி திரைப்படம் தற்போது நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

லைகாவின் அடுத்தடுத்த படங்கள்:

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் தயாராகவுள்ள மூன்று படங்களின் ஓடிடி உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் வாங்கியுள்ளது. முதலாவதாக, யோகி பாபு நடிக்கவிருக்கும் படமும், இரண்டாவதாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ள ஒரு படமும், மூன்றாவதாக அருள் நிதி மற்றும் ஆத்மிகா ஆகியோர் ஜோடியாக நடிக்கும் படமும் இடம் பெற்றுள்ளன. 


Netflix Releases:அஜித் படம் முதல் சமுத்திரகனி படம் வரை…நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி உரிமைப் பெற்ற படங்களின் பட்டியல்!

இருகப்பற்று:

விக்ரம் பிரபுவின் நடிப்பில் உருவாகி வரும் படம்,இருகப்பற்று. இந்த படத்தின் போஸ்ட் தியேட்டரிக்கல் ரிலீஸ் உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் வாங்கியுள்ளது. 

ரிவால்வர் ரீட்டா:

பிரபல நடிகை கீர்த்தி சுரேஷின் நடிப்பில் உருவாகி வரும் படம்தான் ரிவாலவர் ரீட்டா. இந்த படத்தின் போஸ்டரை சமீபத்தில் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்தார் கீர்த்தி சுரேஷ். இப்படத்தின் ஓடிடி உரிமையும் நெட்ஃப்ளிக்ஸ் வசமே உள்ளது. 

தலைக்கோதல்:

சாட்டை படத்தில் தயா கதாப்பாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர் சமுத்திரகனி. தனது அடுத்தடுத்த படங்களிலும் சமூகத்திற்கு கருத்து சொல்லும் கதாப்பாத்திரங்களிலேயே நடித்து வருகிறார். இவரது பட வரிசையில் தலைக்கோதல் என்ற படம் இணைந்துள்ளது. இந்த படத்தில் நடிகர் கதிர் இவருடன் இணைந்து நடித்துள்ளார். இதன் உரிமையையும் நெட்ஃப்ளிக்ஸ் கைப்பற்றியுள்ளது. 

அடுத்து என்னப்பா சர்ப்ரைஸ்?

பல படங்களின் ஓடிடி உரிமைகளை வாங்கிவிட்டதாக அறிவித்துள்ள நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம், இன்னும் பல சர்ப்ரைஸ்களை வைத்துள்ளதாக ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளது. இதனால், அடுத்த அப்டேட்டிற்காக, ரசிகர்கள் இன்னும் கொஞ்ச நாள் காத்திருக்கும் நிலைமை உருவாகியுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget