Vikram in Cannes: கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது கமல்ஹாசனின் விக்ரம் ட்ரெயிலர்..
விக்ரம் படத்தின் ட்ரெய்லர் எப்போதும் வெளியாகும் என்பது குறித்தான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில் ஆகியோர் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘விக்ரம்’. ஜூன் 3 ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தத் திரைப்படத்தின் ட்ரெய்லர் வருகிற மே 18-ஆம் தேதி கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Glad to announce the launch of Vikram NFTs and Trailer at Cannes Film festival in association with Vistaverse and Lotus Meta Entertainment!
— Raaj Kamal Films International (@RKFI) April 25, 2022
#KamalHaasan #Vikram #VikramFromJune3 #VikraminVistaverse #Cannes2022 #VikraminCannes pic.twitter.com/1Dan1RnQRR
கமல்ஹாசன் நடிப்பில் வரும் ஜூன் மாதம் 3 ஆம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் ‘விக்ரம்’. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகியிருக்கும் இந்தப்படத்தின் டீஸர், மேக்கிங் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் தமிழக வெளியீட்டு உரிமையை முதல்வரின் மகனும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினுக்கு சொந்தமான ரெட் ஜெயிண்ட் மூவிஸ் கைப்பற்றியிருக்கிறது.
View this post on Instagram
இந்த நிலையில், விக்ரம் படத்தின் ப்ரோமோஷனை பிரம்மாண்டமாக செய்ய படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. அதே போல படத்தின் இசை வெளியீட்டு விழாவை ஐக்கிய அரபு அமீரகத்தில் அனிருத் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முன்னிலையில் வருகிற மே முதல் வாரத்தில் நடத்த திட்டமிட்டு இருக்கிறார்களாம். ப்ரோமோஷனின் முதற்கட்டமாக இந்தியாவில் முக்கியப் பாதைகளில் செல்லும் ரயில்களில் விக்ரம் படத்தின் போஸ்டர்கள் வரையபட்டுள்ளன. இசைவெளியீட்டு நிகழ்ச்சிக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.