சூர்யா நடிப்பில் த. செ. ஞானவேல் இயக்கத்தில் அண்மையில் வெளியான திரைப்படம் ஜெய்பீம். அமேசான் ஓடிடி தளத்தில் வெளியான இந்தத் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதே நேரத்தில் படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள் சர்ச்சைக்கும் உள்ளாகின.


விமர்சன ரீதியாகவும் கவனம் பெற்ற இந்தத்திரைப்படம் தற்போது ஒரு புதிய சாதனையை படைத்திருக்கிறது. அது என்ன என்றால், 2021 ஆம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்களின் பெயர்களில் ஜெய் பீம் முதலிடத்தை பிடித்திருக்கிறது. இராண்டாம் இடத்தில் தமிழில் பில்லா முதன் பாகத்தை இயக்கிய விஷ்ணுவர்தன் இயக்கிய  ‘ஷெர்ஷா திரைப்படம் இருக்கிறது. 




மூன்றாவது இடத்தில் பிரபுதேவா இயக்கத்தில் நடிகர் சல்மான்கான் இயக்கிய  ‘ராதே’ திரைப்படமும், 4 ஆவது இடத்தில் நடிகர் அக்சய் குமார் நடிப்பில் வெளியான  “பெல் பாட்டம்’ திரைப்படமும் இடம்பெற்றுள்ளன.  5ஆவது இடத்தில் எட்டர்னல்ஸ் திரைப்படமும் 6 ஆவது இடத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான “மாஸ்டர்“ திரைப்படமும் 7 வது இடத்தில் அக்சய் குமார் நடிப்பில் வெளியான  ‘சூர்ய வம்சி’ திரைப்படமும், 8 ஆவது இடத்தில் காட்சில்லா விஸ். காங் திரைப்படமும் 9  வது இடத்தில் மோகன் லால் நடிப்பில் வெளியான த்ரிஷியம் 2 படமும், 10 வது இடத்தில் பூஜ்: தி பிரைடு ஆஃப் இந்தியா படமும் இடம்பெற்றுள்ளன.




முன்னதாக ஜெய் பீம் திரைப்படம், கோல்டன் குளோப் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டதும் கடந்த ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்களின் பட்டியலில் இராண்டாம் இடத்தை பிடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. 




மேலும்  படிக்க..


CDS Chopper Crash | ‛எனக்கு டவுட் இருக்கு... சுப்ரீம் கோர்ட் விசாரிக்கணும்’ -ஹெலிகாப்டர் விபத்து குறித்து சு.சாமி., பகீர்!


Next CDS of India: நாட்டின் அடுத்த தலைமைத் தளபதி யார்? - நீடிக்கும் குழப்பம்!


Mi-17 Black Box: விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் கருப்புப்பெட்டி கண்டுபிடிப்பு...


“ஒரு மருத்துவராக... சிகிச்சை பெற்று வரும் விமானி வருணை சந்தித்தேன்” - ஆளுநர் தமிழிசை பேட்டி!


Coonoor Chopper Crash | சௌர்யா சக்ரா விருதிலிருந்து ககன்யான் திட்டம்வரை... யார் இந்த கேப்டன் வருண் சிங்?



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண