மத்திய உள்துறை அமைச்சகத்தின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தலைநகர் டெல்லியின் எல்லையில் போராட்டம் நடத்திய விவசாயிகள் தங்களது ஆண்டுகால போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளனர். போராட்டம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறுதல், சர்ச்சைக்குரிய விவசாயச் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின் போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் மத்திய அரசிடன் கோரிக்கையாக முன் வைத்தனர். அந்த கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதை அடுத்து விவசாயிகள் போராட்டத்தைக் கைவிடும் முடிவுக்கு வந்துள்ளனர். விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, அது தொடர்பான உறுதியை எழுத்துப்பூர்வமாக கொடுத்துள்ளது. 






இந்த நிலையில் டெல்லி எல்லையில் இருந்து விவசாயிகள் தங்கள் வீடுகளுக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர்.  சில தினங்களுக்குள் விவசாயிகள் மொத்தமாக காலி செய்வார்கள் எனத் தெரிகிறது. 




முன்னதாக, மத்திய அரசு மூன்று புதிய வேளாண் சட்டங்களை கடந்த ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தது. இந்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக, பஞ்சாப், அரியானா விவசாயிகள் நாட்டின் தலைநகரான டெல்லியின் எல்லையில் கடந்த ஓராண்டுகளாக இந்த சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தி போராடி வந்தனர்.






அவர்களின் போராட்டத்தின் பலனாக மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். பின்னர் நடந்த குளிர்கால கூட்டத்தொடரின் போது வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதா மக்களவையி குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டாலும் போராட்டம் நடத்திய விவசாயிகள் சில கோரிக்கைகளை தொடர்ந்து மத்திய அரசிடம் முன் வைத்தனர். அந்த கோரிக்கைகளையும் தற்போது மத்திய அரசு ஏற்றுக்கொண்டதை அடுத்து விவசாயிகள்  போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: Cremation of CDS Bipin Rawat Live: முப்படை தளபதிக்கு உலக நாடுகள் இரங்கல்: இன்று டெல்லி செல்கிறது வீரமரணம் அடைந்தோர் உடல்!