கோவை மாவட்டம் சூலூர் விமானப் படை தளத்தில் இருந்து நேற்று காலை 10.30 மணிக்கு நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் ராணுவ மையத்துக்கு Mi-17V5 ராணுவ ஹெலிகாப்டர் புறப்பட்டு சென்றது. அப்போது கடும் பனிமூட்டம் காரணமாக காட்டேரி மலை பகுதியில் உள்ள மலை முகடு ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டரில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 14 பேர் பயணம் செய்தனர். 







விபத்தில் சிக்கி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். கேப்டன் வருண் சிங் 80 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில்  தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகிறார்.  அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்து வருகிறது. 


இதற்கிடையே நாட்டின் அடுத்த தலைமைத் தளபதி யார் என்பதைத் தேர்வு செய்வதில் தொடர்ந்து குழப்பம் நிலவி வருகிறது.நாட்டின் மிக முக்கிய பொறுப்பு என்பதால் அடுத்து யாரை அந்தப் பதவியில் நியமிப்பது என்பதில் அரசு கவனமாக உள்ளது. இன்னும் 7லிருந்து 10 நாட்களுக்குள் இந்தப் பதவி நிரப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விதிகளின்படி எந்தவொரு கமாண்டிங் ஆபிஸரும் இந்தப் பொறுப்புக்குத் தகுதியானவர். 


முப்படைத் தளபதியாக 2016ம் ஆண்டு டிசம்பர் 31ல் ஜெனரல் பிபின் ராவத் நியமிக்கப்பட்டார். அவருக்கு முன்பு இந்தப் பதவியில் யாரும் இல்லை என்பதால் இந்தப் பதவிக்கான வரையறைகள் என்ன என்பது இதுவரைத் தெரியாமல் உள்ளது.  எனினும் இந்தப் பதவியில் உள்ளவர்கள் நான்கு நட்சத்திர பேட்ச்களைப் பெற்றவர்களாக இருக்கவேண்டும் அல்லது குறைந்தபட்சம் அதற்கு நிகரான பதவியில் உள்ளவராக இருக்க வேண்டும்.


இதன் அடிப்படையில் ராணுவத் தளபதிகளில் சீனியராக இருக்கும் ஜெனரல் நரவானேவின் பெயர் தற்போது இந்தப் பதவிக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இருப்பினும் அவர் விரைவில் ஓய்வு பெறுகிறார் என்கிற அடிப்படையில் வேறு சில பெயர்களும் இந்தப் பதவிக்காக அடிபடுகின்றன. அதில் 
மூத்த ஜெனரல் லெப்டினண்ட் ஒய்.கே.ஜோஷியின் பெயரும் அடிபடுகிறது.ஆனால் யார் நியமிக்கப்படலாம் என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடியூபில் வீடியோக்களை காண