நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரியில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். ஹெலிகாப்டரில் பயணித்த 14 பேரில் கேப்டன் வருண் சிங் மட்டும் தீக்காயங்களுடன் உயிர் பிழைத்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.


கேப்டன் வருண் சிங் இந்த ஆண்டு சுதந்திர தின விழாவின்போது உயரிய விருதான சௌர்யா சக்ரா விருதை பெற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருது வழங்கினார்.


வருண் சிங் இலகுரக போர் விமானத்தில் பணியாற்றியவர். கடந்த வருடம் அக்டோபர் மாதம் தேஜாஸ் போர் விமானத்தில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தில் கோளாறு ஏற்பட்டது. ஒருகட்டத்துக்கு மேல் விமானம் முழுவதுமாக கட்டுப்பாட்டை இழந்தது.


இருந்தாலும் நம்பிக்கையை இழக்காத வருண் சிங் தனது திறமையாலும், அனுபவத்தாலும் விமானத்தை மீண்டும் தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்தார். அதன்பிறகு, சுமார் 10,000 அடி உயரத்தில், விமானம் மீண்டும்  மொத்த கட்டுப்பாட்டை இழந்தது.  அத்தகைய சூழ்நிலையில் இருந்தும் விமானத்தை மீட்டெடுத்த வருண் சிங் துணிச்சலாக அதனை தரையிறக்கினார்


இப்படி, தான் தொடர்ந்து சந்தித்த சிக்கலான சூழ்நிலையிலும் உயிர் சேதம், பொருள் சேதம் எதுவும் ஏற்படாமல் போர் விமானத்தை பத்திரமாகவும், துணிச்சலுடனும் தரையிறக்கிய அவருக்கு சௌர்யா சக்ரா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.


அதுமட்டுமின்றி, விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப இஸ்ரோ 10,000 கோடி ரூபாயில் உருவாக்கியிருக்கும் ‘ககன்யான்’ திட்டத்திற்கும் அவர் தேர்வாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வருண் சிங் தற்போது வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரியின் (டிஎஸ்எஸ்சி) இயக்குநராக உள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: Chopper Crash Ooty LIVE: குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: தலைமை தளபதி பிபின் ராவத் குடும்பத்துடன் பயணித்தாக தகவல்!


Coonoor Chopper Crash | குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து.. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் வருண் சிங்


CDS Bipin Rawat Death | தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழப்பு.. அரசியல் தலைவர்களின் இரங்கல்..


CT Ravi | வெளியில் இருக்கும் எதிரியைவிட உள்ளிருக்கும் எதிரியால் அதிக ஆபத்து: சி.டி.ரவி ட்வீட்.. குஷ்பு ரீ ட்வீட்