Watch video | ”மகுடம் வருது ..சத்தம் அதிகரிக்கிறது” - பொன்னியின் செல்வன் காட்சியை விளக்கும் மணிரத்தினம் !

"அப்போது பேரசசரும் , பொன்னியின் செல்வனும் வருகின்றனர். அலை அலையாக கூட்டத்தை காட்டுகிறோம் . மூன்றாவது அலை வரும் பொழுது. மகுடம் வருகிறது “

Continues below advertisement

மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். கல்கியின் நாவலை தழுவி இந்த படம் எடுக்கப்படுகிறது. இந்த படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், கார்த்தி, பார்த்திபன், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட மிகப்பெரும் நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகள் நடைப்பெற்று வருகிறது. இந்த படத்தை லைகா நிறுவனமும், மெட்ராஸ் டாக்கிஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது. படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் தற்போது, எடிட்டிங் , சவுண்டிங் உள்ளிட்ட போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகள் நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் மணிரத்தினம் இசைக்கலைஞர்களுக்கு காட்சிகளை விளக்கும் விதம் குறித்த வீடியோ ஒன்றை ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்துள்ளார். அந்த காட்சியில் மணிரத்தினம் “ஒரு பெரிய சத்தம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக்கொண்டே செல்கிறது..அப்போது பேரசசரும் , பொன்னியின் செல்வனும் வருகின்றனர். அலை அலையாக கூட்டத்தை காட்டுகிறோம் . மூன்றாவது அலை வரும் பொழுது. கிரீடம் வருகிறது “ இப்படியாக காட்சிகளை விளக்குகிறார் மணிரத்தினம் . இதனை வீடியோ எடுத்த ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Continues below advertisement


பொன்னியின் செல்வன் திரைப்படம் பல இயக்குநர்களின் கனவு திட்டம். அதனை மணிரத்தினம் கையில் எடுத்திருப்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இறுதியாக வெளியான படத்தின் போஸ்டரில் படம் சம்மர் 2022  என குறிப்பிட்டிருந்தனர். எனவே படம்  அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.பொன்னியின் செல்வன் படத்தில், சுந்தர சோழராக, பிரகாஷ் ராஜ் நடிக்க, சின்ன பழுவேட்டரையராக பார்த்திபன், கார்த்தி, வந்தியத்தேவனாக, ஆதித்த கரிகாலனாக விக்ரம், பெரிய பழுவேட்டரையராக சரத்குமார் நடித்து வருகிறார். அதேபோல் குந்தவையாக, த்ரிஷாவும், பூங்குழலியாக ஐஸ்வர்யா லட்சுமி, ஆழ்வார்க்கடியான் நம்பியாக ஜெயராம் நடித்து வருகிறார்.தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு உருவாகி வருகின்றது. எடிட்டிங் பணியை ஸ்ரீதர் பிரசாத் மேற்கொள்கிறார்.  ரவி வர்மன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். கொரோனா இரண்டாம் அலை காரணமாக, பாதிக்கப்பட்டிருந்த இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூலை மாதம் புதுச்சேரியில் தொடங்கியது. இதனையடுத்து ஹைதராபாத்தில் பிரமாண்டமாக செட் அமைத்து நடந்து வந்த படப்பிடிப்பு, சமீபத்தில் நிறைவடைந்தது. இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கிறது.

Continues below advertisement
Sponsored Links by Taboola