நடிகை கீர்த்தி பாண்டியனை மணந்தார் நடிகர் அசோக் செல்வன்.. இணையத்தில் தெறிக்கும் திருமண புகைப்படங்கள்!


நடிகர் அசோக் செல்வனும், நடிகர் அருண் பாண்டியனின் மகளுமான கீர்த்தி பாண்டியனும் இன்று திருநெல்வேலியில் பிரம்மாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்டனர். இந்தநிலையில், இவர்களது திருமணம் செய்துகொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  'ப்ளூ ஸ்டார்' என்ற திரைப்படத்தில் அசோக் செல்வனும், கீர்த்தி பாண்டியனும் நடித்து வந்தபோது, இருவருக்கும் இடையேயான பழக்கம் காதலாக மலர்ந்துள்ளது. மேலும் படிக்க


ப்ளடி ஸ்வீட்... அடுத்து என்ன... ரஜினிகாந்தின் டைட்டில் வீடியோவை செதுக்கும் லோகேஷ் கனகராஜ்!


லோகேஷ் கனகராஜ் இயக்கும் தலைவர் 171 திரைப்படத்திற்கான டைட்டில் டீசர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் நெல்சன் திலீப்குமார் இயக்கிய ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்த், மோகன்லால், ஷிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்டவர்கள் நடித்தனர். அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைத்த நிலையில், ரூ.600 கோடிகளுக்கு மேலாக வசூல் செய்தது. மேலும் படிக்க


ஏ.ஆர்.ரஹ்மானின் நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கியும் போகலயா..? பணத்தை திருப்பி வாங்குவது எப்படி? - முழு விவரம்


ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சியால் பெரும் போக்குவரத்து நெருக்கடியும், டிக்கெட் வாங்கியும் நிகழ்ச்சியை பார்க்க முடியாத நிலையும் ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  சென்னையில் நடைபெற்ற ஏ.ஆர். ரஹ்மானின் ’மறக்குமா நெஞ்சம்’ நிகழ்ச்சியில் ஏராளமான குளறுபடிகள் நடந்ததால் பார்வையாளர்கள் கடும் சிரமங்களை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டது. மேலும் படிக்க


மீண்டும் வெள்ளித்திரையில் சில்க்.. ஒரு பாட்டுக்கு 1.5 கோடி.. மார்க் ஆண்டனி படத்தில் வேற என்னலாம் ஸ்பெஷல்?


விஷால் , எஸ். ஜே சூர்யா நடித்திருக்கும் மார்க் ஆண்டனி திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், மார்க் ஆண்டனி படம் குறித்தான கூடுதல் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் மூலம் தனக்கென ஒரு தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் ஆதிக் ரவிச்சந்திரன். இரட்டை அர்த்த வசனங்கள், ஆபாசத்திற்கு நெருக்கமான காட்சியமைப்புகள் என சர்ச்சையில் சிக்குவதற்கான கதைளையே தொடர்ந்து படங்களாக இயக்கி வருகிறார் ஆதிக் ரவிச்சந்திரன். மேலும் படிக்க


"ஏ.ஆர்.ரஹ்மானை திட்டாதீங்க.. பணத்தை திருப்பி கொடுத்துட்றோம்.." நிகழ்ச்சி ஏற்பட்டாளர் விளக்கம்..!


ரஹ்மானின் 'மறக்குமா நெஞ்சம்' நிகழ்ச்சியை பார்க்கமுடியாமல் திரும்பிய  ரசிகர்களில் இதுவரை 400 பேர்களுக்கு பணம் திருப்பிக் கொடுக்கப் பட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற ஏ.ஆர். ரஹ்மானின் ’மறக்குமா நெஞ்சம்’ நிகழ்ச்சியில் ஏராளமான குளறுபடிகள் நடந்ததால் பார்வையாளர்கள் கடும் சிரமங்களை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டது. பனையூரில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்க பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய பலர் உள்ளே செல்ல முடியாத நிலையில், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் படிக்க


லியோ, சலார் திரைப்படங்களை பின்னுக்கு தள்ளிய மார்க் ஆண்டனி! - ஐ.எம்.டி.பி சொல்லும் கணக்கு இதுதான்!


இந்திய சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப் படும் இரண்டு படங்கள்  லியோ மற்றும் சலார். ஆனால் இந்த இரண்டு படங்களையும் பின்னுக்கு தள்ளி அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களின் வரிசையில் முதலிடம் பிடித்துள்ளது ஒரு படம். ஒவ்வொரு ரசிகரும் தங்களுக்கு பிடித்த நடிகர்களின் படங்களை எதிர்பார்ப்பது இயல்பானது தான். ஆனால் ஒரு சிலப் படங்கள் தீவிர ரசிகர்களைக் கடந்து அனைத்து தரப்பு மக்களிடமும் ஒரு பெரிய எதிர்பார்ப்பை உருவாக்குகின்றன. மேலும் படிக்க