உசிலம்பட்டி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகள் வைத்திருக்கும் போதும் எடுத்துச் செல்லும் போதும் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக டி.எஸ்.பி., நல்லு தெரிவித்துள்ளார். விதிமுறைகளை மீறினால் வழக்கு பதிவு செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விநாயக சதுர்த்தி:
விநாயக சதுர்த்தி என்ற மங்களகரமான திருவிழா இந்தியாவில் இந்துக்கள் கொண்டாடப்படும் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாகும். விநாயகப் பெருமான் என்பவர், சிவன் மற்றும் பார்வதி தேவியின் மகன் மற்றும் அறிவு, செல்வம் மற்றும் புதிய தொடக்கங்களின் கடவுளாக போற்றப்படுகிறார். நாடு முழுவதும், குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத், ஒடிசா, உத்தரபிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இந்த விழா மிகுந்த உற்சாகத்துடன் 10 நாட்களுக்கு மேல் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில்தான் விநாயகப் பெருமான் பிறந்தார் என்பது ஐதீகம்.
மங்களம், ஞானம், செழிப்பு மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தைக் குறிக்கும், விநாயகப் பெருமானை எந்தவொரு பூஜை அல்லது சடங்குக்கும் முன்பாக ஒவ்வொரு வீட்டிலும் வழிபடுகிறார்கள். இந்து புராணங்களின் அடிப்படையில் கணேஷ் கடவுள் சிவன் மற்றும் பார்வதி தேவியின் மகன் என்று நம்பப்படுகிறது. புராணத்தின் படி, சிவபெருமான் கோபமடைந்தபோது, அவர் துக்கமடைந்த பார்வதி தேவியை ஆறுதல்படுத்துவதற்காக கணேஷின் தலையை வெட்டி அதற்கு பதிலாக யானையின் தலையை வைத்தார். எனவே விநாயகப் பெருமான் எப்போதும் யானைத் தலை மற்றும் நான்கு கரங்களுடன் காட்சியளிக்கிறார். பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் கணேஷ், மக்களின் அதிர்ஷ்டத்தை மாற்றுவதற்கும், அவர்களின் பாதையில் இருந்து பேரழிவுகள் மற்றும் தடைகளை நீக்குவதற்கும் வழிபடப்படுகிறார்.
கட்டுப்பாடுகள்:
இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சுமார் 120க்கும் அதிகமான விநாயகர் சிலைகள் வைப்பது வழக்கமாக உள்ளது., இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சிலை வைப்பது மற்றும் எடுத்து சென்று கரைப்பது குறித்து விழா ஏற்பாட்டாளர்களுடன் - காவல்துறை சார்பில் ஆலோசனை கூட்டம் உசிலம்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் நல்லு தலைமையில் நடைபெற்றது., இந்த கூட்டத்தில் விநாயகர் சிலைகள் வைத்து சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடு செய்வது முதல் கண்மாய்களில் எடுத்து சென்று கரைப்பது வரை அரசு வகுத்துள்ள 26 நிபந்தனைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.,
பட்டாசு வெடிக்கத் தடை:
குறிப்பாக வருவாய்த்துறை, காவல்த்துறை, தீயணைப்புத்துறை, மாசுக்கட்டுப்பாட்டுத் துறை உள்ளிட்ட துறைகளில் கட்டாயம் அனுமதி பெற வேண்டும் எனவும், உசிலம்பட்டி பகுதியை பொருத்தமட்டில் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு செல்ல முடியாத நிலை இருப்பதால் ஊர்வலமாக எடுத்துச் செல்ல கூடாது என்றும், சிறப்பு பூஜையின் போதோ, சிலையை எடுத்து செல்லும் போதோ பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என பல்வேறு விதிமுறைகளை விளக்கினார்., தொடர்ந்து அனுமதியின்றி வைக்கப்படும் சிலைகளை பறிமுதல் செய்வதோடு வழக்கு பதிவும் செய்யப்படும் என காவல் துணைக் கண்காணிப்பாளர் நல்லு தெரிவித்தார்.