"அண்ணாவையும் சேர்த்து படிங்க”.. அசுரன் வசனம்.. விஜய் பேச்சுக்கு வெற்றிமாறன் இதுதான் சொல்லிருக்காரு..!


அசுரன் படத்தில் இடம்பெற்ற கல்வி தொடர்பான வசனத்தை, விஜய் பேசியதை  இயக்குனர் வெற்றிமாறன் வரவேற்றுள்ளார். சென்னையில் காவல்துறை சார்பில் போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் இயக்குனர் வெற்றிமாறன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு போதைப்பொருட்களுக்கு எதிரான பரப்புரையை மேற்கொண்டனர். மேலும் படிக்க


12 மணி நேரம்..1400 பேருக்கு விருதுகள்.. சளைக்காமல் நின்ற விஜய்.. ரஞ்சிதமே ஸ்டைலில் பினிஷிங்..


நடிகர் விஜய் 12 மணி நேரத்திற்கும் மேலாக நின்றிருந்து மாணவர்களுக்கு விருது வழங்கிய நிகழ்ச்சி, இணையத்தில் பாராட்டுகளை பெற்று வருகிறது. தமிழ்நாட்டில் அண்மையில் வெளியான 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதிவாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு, விஜய் மக்கள் இயக்கம் சார்பில் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. நீலாங்கரையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நடிகர் விஜய் கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார். மேலும் படிக்க


நிரா நிரா நீ என் நிரா... டக்கர் பட பாடலை கௌதம் மேனன் பாடியிருக்காரா... குவியும் லைக்ஸ்!


இயக்குநர் கெளதம் மேனன் பாடுவார் என்று நமக்குத் தெரியும், ஆனால் ராப் பாடுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இயக்குநர் கௌதம் மேனன் டைரக்‌ஷன் மட்டுமில்லாமல் நடிகராகவும் கலக்கிக்கொண்டு இருக்கிறார். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், மைக்கேல், விடுதலை, பத்து தல ஆகிய படங்களில் நடித்து தனது நடிப்பு மீதான தாகத்தை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறார். மேலும் படிக்க


ஹனுமனுக்காக தியேட்டருக்கு படையெடுக்கும் ரசிகர்கள்.. ரூ.200 கோடியை கடந்த ‘ஆதிபுருஷ்’ ..!


இயக்குநர் ஓம் ராவத் இயக்கியுள்ள ஆதிபுருஷ் படம் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் ரூ.200 கோடியை கடந்துள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  வால்மீகி எழுதிய ராமாயணத்தை அடிப்படையாக கொண்டு இயக்குநர் ஓம் ராவத்  இயக்கியுள்ள ’ஆதிபுருஷ்’ படம் எடுக்கப்பட்டுள்ளது. ரூ.500 பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ராமனாக பிரபாஸ், சீதையாக கீர்த்தி சனோன், ராவணனாக சைப் அலி கான், லட்சுமணனான சன்னி சிங் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும் படிக்க


தர்மம் காக்கும் ராவணன்... 13 ஆண்டுகளை நிறைவு செய்த மணிரத்னத்தின் ’ராவணன்’!


இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், பிரியாமணி, ப்ரித்விராஜ், பிரபு ஆகியோர் நடித்து ராவணன் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 13 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ திரைப்படத்திற்குப் பின் கிட்டதட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் மீண்டும் நடித்தார் ஐஸ்வர்யா ராய். மேலும் படிக்க


என்னை அநாகரிகமாக திட்டுறாங்க... சர்ச்சையான ஹனுமன் வசனம்... ஆதிபுருஷ் பட எழுத்தாளர் விரக்தி!


'ஆதிபுருஷ்' திரைப்பட வசனங்கள் குறித்து கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில்,  பார்வையாளர்களுக்கு மதிப்பளித்து வசனங்களை மாற்றி அமைப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. பிரபல டோலிவுட் நடிகரான பிரபாஸ் பாகுபலி படத்தைத் தொடர்ந்து பான் இந்தியா நடிகராக உருவெடுத்து, தொடர்ந்து ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களைக் குறிவைத்து படங்களில் நடித்து வருகிறார்.  அந்த வகையில், நேற்று முன் தினம் (ஜூன்.16) வெளியான திரைப்படம் ‘ஆதிபுருஷ் மேலும் படிக்க