Crime: மகளிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட தந்தை... ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்த போக்சோ நீதிமன்றம்!

திருவண்ணாமலை மாவட்டம் மகளை பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

Continues below advertisement

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த கீழ்அய்யம்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் வயது (40), இவர் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்தார். செந்தில் குமாரின் மனைவி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்நிலையில், செந்தில்குமாருக்கு 16 வயதில் மகள் ஒருவர் உள்ளார். இவர் பள்ளியில் பயின்று வருகிறார். பள்ளி முடிந்தவுடன் வீட்டில் தனியாக தான் உள்ளார். மாணவியின் ‌உறவினர்கள் யாரும் இல்லை, இதனால் மாணவி மற்றும் அவருடைய தந்தை மட்டுமே உள்ளனர். இந்நிலையில் ‌வீட்டில் தனியாக இருக்கும்போது, அவரது 16 வயது மகளிடம் செந்தில்குமார் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது, குறித்து இங்கு நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் உன்னை கொன்று விடுவேன் என மகளை மிரட்டியுள்ளார்.

Continues below advertisement


 

அதனைத் தொடர்ந்து இதுபோன்ற அத்துமீறலும், வன்கொடுமையும் தன்னுடைய தந்தை மூலம் நடப்பதால் அதிர்ச்சியடைந்த சிறுமி, தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அந்த சிறுமியை காப்பாற்றியுள்ளனர். அப்போது, சிறுமி அவர்களிடம் தந்தையே தன்னிடம் தவறாக நடக்க முயற்சிப்பது குறித்து கதறி அழுது கண்ணீருடன் தெரிவித்துள்ளார். அதைத்தொடர்ந்து, கடந்த (4.5.2022) அன்று ஆரணி மகளிர் காவல்நிலையத்தில் சிறுமி அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்தனர்.மேலும், இது தொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் வரும் போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைப்பெற்று வந்தது. பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பில் அரசு சிறப்பு பொது வழக்கறிஞர் மைதிலி ஆஜரானார்.


இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி தீர்ப்பு அளித்தார். அதில், மகளிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றத்துக்காக செந்தில்குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார். மேலும், சிறுமியை கொலை செய்வதாக அச்சுறுத்திய குற்றத்துக்காக கூடுதலாக 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் அபராதமும், அதை செலுத்த தவறினால் கூடுதலாக 1 ஆண்டு சிறை தண்டனையும் விதித்தார். அதைத்தொடர்ந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்த செந்தில்குமாரை, காவல்துறையினர் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மகளிடம் தவறாக நடக்க முயன்ற தந்தைக்கு போக்சோ வழக்கில் ஆயுள் தண்டனை விதித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம், எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

புகார் பெட்டி:

உங்கள் பகுதியில் உள்ள குறைகள் பற்றி நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்

Continues below advertisement
Sponsored Links by Taboola