நடிகர் விஜய் 12 மணி நேரத்திற்கும் மேலாக நின்றிருந்து மாணவர்களுக்கு விருது வழங்கிய நிகழ்ச்சி, இணையத்தில் பாராட்டுகளை பெற்று வருகிறது.


விருது வழங்கும் விழா:


தமிழ்நாட்டில் அண்மையில் வெளியான 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதிவாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு, விஜய் மக்கள் இயக்கம் சார்பில் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. நீலாங்கரையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நடிகர் விஜய் கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார். இதில் ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள், இரண்டாயிரத்திற்கும் அதிகமான பெற்றோரும் கலந்துகொண்டனர். அதோடு ஆயிரக்கணக்கான ரசிகர்களும் கலந்துகொண்டனர்.


பரிசு விநியோகம்:


12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 600-க்கு 600 மதிப்பெண்கள் பெற்ற நந்தினிக்கு வைர நெக்ளஸை விஜய் பரிசாக வழங்கினார். அதைதொடர்ந்து, அனைத்து மாணவர்களுக்கும் சால்வை அணிவித்து, விருதுக மற்று பரிசுத்தொகை வழங்கி விஜய் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். இதனிடையே, அங்கு வந்திருந்த மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு மதிய உணவிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.






குவிந்த பரிசுகள்..வாழ்த்துகள்..


விழாவில் வந்திருந்த மாணவர்கள் அனைவருக்கும் நடிகர் விஜய் தனது கைகளாலேயே பரிசுகளை வழங்கி கவுரவித்தார். அவ்வாறு வந்திருந்த மாணவர்கள் விஜயை கட்டிப்பிடித்தும், நினைவுபரிசுகளை வழங்கியும், முத்தம் கொடுத்தும், விஜயின் படங்களில் இடம்பெறும் சீன்களை நடித்துகாட்டியும் அசத்தினர். சில மாணவர்கள் விஜய் அஇதனால் விஜய் நெகிழ்ச்சி அடைந்தார். மாணவர்களின் பெற்றோரும் உற்சாக மிகுதியுடன் விஜயை கண்டு மகிழ்ந்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


தொய்வடைந்த விஜய்:


சம்பிரதாயத்திற்கு என ஒருசிலருக்கு மட்டும் இல்லாமல், வந்திருந்த அனைத்து மாணவர்களுக்கும் நடிகர் விஜயே தொடர்ந்து விருதுகளை வழங்கினார். தொடர்ந்து 9 மணி நேரத்திற்கும் மேலாக விருது வழங்க ஒரு கட்டத்திற்கு மேல் விஜய் மிகவும் சோர்வாக காணப்பட்டார். சில மாணவர்கள் பேசும்போது, விஜய் ஓரமாக சென்று அங்கிருந்த மேசையின் மிது சாய்ந்தவாறு நின்றிருந்தார். ஆனாலும் தொடர்ந்து சளைக்காமல் விருதுகளை வழங்கி மாணவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.


இரவு விருந்து:


விருது வழங்கும் விழாவை குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்க திட்டமிட்டிருந்த விஜய் மக்கள் இயக்கம், மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கான மதிய உணவிற்கு மட்டுமே ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால், நள்ளிரவு வரை விழா நீடித்ததால் உடனடியாக இரவு உணவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.






12 மணி நேரம்...


இறுதியாக காலை 11 மணியளவில் தொடங்கிய விருது வழங்கும் விழா இரவு 11 மணியை கடந்து நிறைவடைந்தது. 12 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற நிகழ்ச்சியில் 1400-க்கும் அதிகமான மாணவர்களுக்கு தனது கைகளாலேயே விருதுகளை வழங்கி கவுரவித்த பிறகு, ரஞ்சிதமே ஸ்டைலில் மாணாக்கர் மற்றும் பெற்றோருக்க்கு முத்தங்களை வழங்கிவிட்டு, சிரித்த முகத்துடன் மேடையில் இருந்து புறப்பட்டார் விஜய்.