'விஜயகாந்த் கோபப்பட்டால் அதில் ஒரு நியாயம் இருக்கும்’ - அஞ்சலி செலுத்திய பின் நடிகர் ரஜினிகாந்த்..


சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு நேரில் சென்று நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி செலுத்தினார், அதனை தொடர்ந்து பேசிய அவர், “ மனதுக்கு மிகவும் கடினமாக உள்ளது. அவரை பற்றி பேச வேண்டும் என்றால் நிறைய உள்ளது. நட்புக்கு இலக்கணமாக இருந்தவர். அவருடன் ஒரு முறை பழகிவிட்டால் வாழ்க்கையில் அதனை மறக்க முடியாது. மேலும் படிக்க


72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை.. வழியனுப்ப அலைகடலென திரண்டு நிற்கும் மக்கள்..


கேப்டன் விஜயகாந்தின் நல்லடக்க நிகழ்ச்சியில் பொது மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அவரின் இறுதிச் சடங்குகளைக் காண, தேமுதிக அலுவலகம் முன்பாக பெரிய எல்இடி திரைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகம் முன்பாக காலையில் இருந்து கூடியிருக்கும் தொண்டர்களுக்கு, அன்னதானம் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் படிக்க


விஜயகாந்த் மறைவால் தள்ளிப்போகும் ‘தளபதி 68’ அப்டேட்... நடிகர் விஜய் எடுத்த முடிவு!


விஜயகாந்தின் மறைவை அனுசரிக்கும் விதமாக தமிழ் திரையுலகின் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. நேற்று திரையரங்கங்களில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. மேலும் படப்பிடிப்புகள் ஒத்திவைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்து கார்த்திருந்த விஜய நடித்து வரும் தளபதி 68 படத்தின் அப்டேட்ஸ் தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் படிக்க


மெசேஜ் வழியே இரங்கல்.. அஜர்பைஜானில் இருந்து ஆறுதல் தெரிவித்த அஜித்!


மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மறைவுக்கு நடிகர் அஜித் குறுஞ்செய்தி மூலம் இரங்கல் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நடிகரும், தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவரது மறைவு ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் நிலைகுலைய செய்துள்ளது. அரசியலிலும் சரி, சினிமாவிலும் சரி யாராலும் வெறுக்க மற்றும் மறக்கவே முடியாதவராக திகழ்ந்தார் விஜயகாந்த். மேலும் படிக்க


“விஜயகாந்த் விஷயத்தில் பொய் சொல்கிறாரா சீமான்?” - கிளம்பிய சர்ச்சை.. இணையத்தில் கருத்து மோதல்


விஜயகாந்த் நடித்த தவசி படத்துக்கு வசனம் எழுதியதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தது இணையத்தில் கடுமையான கருத்து மோதலை உண்டாக்கியுள்ளது. உடல்நலக்குறைவால் தேமுதிக தலைவர் விஜயகாந்த்  நேற்று காலமானார். அவரது மறைவு ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. விஜயகாந்தை கடைசியாக காண தமிழ்நாடு முழுவதும் இருந்து மக்கள் சென்னையை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். மேலும் படிக்க


'விஜயகாந்த் கோபப்பட்டால் அதில் ஒரு நியாயம் இருக்கும்’ - அஞ்சலி செலுத்திய பின் நடிகர் ரஜினிகாந்த்..


கோயம்பேட்டில் நடிகர் விஜயகாந்த் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த விஜயை நோக்கி, ”வெளியே போ” என சிலர் முழக்கமிட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. உடல்நிலை பாதிப்பு காரணமாக நேற்று காலை தேமுதிக தலைவர் விஜயகாந்த் உயிரிழந்தார். அவரது உடலுக்கு திரைத்துறை பிரபலங்களும், அரசியல் கட்சி தலைவர்களும், தேமுதிக கட்சி தொண்டர்களும், ரசிகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் படிக்க


“உங்களால முடிஞ்ச சிறந்த விஷயங்களை செஞ்சிட்டிங்க விஜி.. ஓய்வெடுங்க” - ராதிகா சரத்குமார் கண்ணீர் பதிவு


விஜயகாந்த் (Vijayakanth) இந்த உலகில் இனி இல்லை என்பதை யாருடைய மனமும் ஏற்றுக் கொள்ளாது என நடிகை ராதிகா சரத்குமார் கண்ணீர் மல்க பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் நேற்று காலமான நிலையில் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த மக்கள் தீவுத்திடலில் குவிந்த வண்ணம் உள்ளனர். பலரும் விஜயகாந்துக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தும் நிலையில் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் விஜயகாந்துக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் படிக்க