Vijayakanth Funeral LIVE: மீளா துயிலில் கலந்தார் விஜயகாந்த் : சந்தனப் பேழைக்குள் அடங்கியது கருப்பு வைரம்

Vijayakanth Funeral LIVE Updates: தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். இதுகுறித்த அப்டேட்களை உடனுக்குடன் இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

Continues below advertisement

LIVE

Background

Vijayakanth Funeral LIVE Updates:

தேமுதிக தலைவர் விஜயகாந்த்(Vijayakanth), கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு உடல்நல பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்தார். அதற்கு உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் சிகிச்சை பெற்றும் வந்தார். இதனிடையே கடந்த நவம்பர் 18 ஆம் தேதி சளி மற்றும் இருமல் காரணமாக விஜயகாந்த் சென்னை போரூரில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கிட்டதட்ட 23 நாட்கள் சிகிச்சைக்குப் பின் அவர் கடந்த டிசம்பர் 11 ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதற்கு இடைப்பட்ட காலத்தில் விஜயகாந்த் உடல்நிலைப் பற்றி பல்வேறு விதமான வதந்திகள் பரவ தொடங்கியது.  தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் அச்சத்தைப் போக மியாட் மருத்துவமனை, தேமுதிக தலைமைக்கழகம் ஆகியவை விஜயகாந்த் உடல்நிலை குறித்த தகவல்களை வெளியிட்டு வந்தனர். 

தொடர்ந்து விஜயகாந்த் மனைவி பிரேமலதா கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் விஜயகாந்த் பூரண உடல்நலத்துடன் இருப்பதாகவும், வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் உடல்நலக்குறைவால் மீண்டும் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த் நேற்று காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல் மியாட் மருத்துவமனையில் இருந்து விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பின் நேற்று முழுவதும் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தொடர்ந்து குவியும் மக்கள் கூட்டத்தை கருத்தில் கொண்டு, தீவுத்திடல் மைதானத்துக்கு விஜயகாந்த் உடல் மாற்றப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது,

Continues below advertisement
19:52 PM (IST)  •  29 Dec 2023

மனிதநேயமும் துணிச்சலும் என்றென்றும் குடிகொண்டிருக்கும் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

19:07 PM (IST)  •  29 Dec 2023

எங்கள் இதயங்களில் நிரந்தரமாக வாழ்வீர்கள் நண்பரே...

19:02 PM (IST)  •  29 Dec 2023

Vijayakanth Funeral : மீளா துயிலில் கலந்தார் விஜயகாந்த் : சந்தனப் பேழைக்குள் அடங்கியது கருப்பு வைரம்

மீளா துயிலில் கலந்தார் விஜயகாந்த் : சந்தனப் பேழைக்குள் அடங்கியது கருப்பு வைரம்

18:40 PM (IST)  •  29 Dec 2023

விஜயகாந்த் குடும்பத்தினர் சார்ப்பில் இறுதிச் சடங்குகள் செய்யப்படுகின்றன

விஜயகாந்த் குடும்பத்தினர் சார்ப்பில் இறுதிச் சடங்குகள் செய்யப்படுகின்றன

18:14 PM (IST)  •  29 Dec 2023

72 குண்டுகள் முழங்க விஜயகாந்த் உடலுக்கு இறுதி மரியாதை வழங்கப்பட்டது

18:05 PM (IST)  •  29 Dec 2023

72 குண்டுகள் முழக்க விஜயகாந்த் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது

72 குண்டுகள் முழக்க விஜயகாந்த் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது

18:03 PM (IST)  •  29 Dec 2023

மலர்வளையம் வைத்து, விஜயகாந்த் உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அஞ்சலி

மலர்வளையம் வைத்து, விஜயகாந்த் உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

18:01 PM (IST)  •  29 Dec 2023

விஜயகாந்த் இறுதி நிகழ்வு : முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் மா.சு, அமைச்சர் கே.என் நேரு, அமைச்சர் உதயநிதி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்

விஜயகாந்த் இறுதி நிகழ்வு : முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் மா.சு, அமைச்சர் கே.என் நேரு, அமைச்சர் உதயநிதி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்

17:59 PM (IST)  •  29 Dec 2023

கோயம்பேடு அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டது விஜயகாந்த் உடல்.. சற்று நேரத்தில் நல்லடக்கம்

கோயம்பேடு அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டது விஜயகாந்த் உடல்.. சற்று நேரத்தில் நல்லடக்கம்

17:54 PM (IST)  •  29 Dec 2023

Amul Cartoon Vijayakanth : "குட்பை கேப்டன்" : காற்றில் கலந்த விஜயகாந்துக்கு உருக்கமான கார்ட்டூன் வெளியிட்ட அமுல்

17:39 PM (IST)  •  29 Dec 2023

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் மறைவையொட்டி, அவரது மனைவி திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கு, காங்கிரஸ் முன்னாள் தலைவர் திரு. ராகுல் காந்தி MP இரங்கல் கடிதம்

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் மறைவையொட்டி, அவரது மனைவி திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் திரு. ராகுல் காந்தி MP கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்

17:33 PM (IST)  •  29 Dec 2023

கோயம்பேடு அலுவலகத்தில் நிகழும் இறுதிச்சடங்கு நிகழ்வுகளை பொதுமக்கள் காண LED திரை அமைக்கப்பட்டுள்ளது

கோயம்பேடு அலுவலகத்தில் நிகழும் இறுதிச்சடங்கு நிகழ்வுகளை பொதுமக்கள் காண LED திரை அமைக்கப்பட்டுள்ளது

17:07 PM (IST)  •  29 Dec 2023

மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர் தூவியும் மக்கள் கண்ணீர் அஞ்சலி

Vijayakanth Funeral : சாலையின் இருபுறத்திலும் மெழுகுவர்த்திகளை ஏந்தியும், மலர்களைத் தூவியும் கண்ணீர் அஞ்சலி செலுத்திய மக்கள்..

16:57 PM (IST)  •  29 Dec 2023

புரட்சிக் கலைஞரின் இறுதிச் சடங்கைக் காண எல்இடி திரைகள் அமைப்பு

கேப்டன் விஜயகாந்தின் நல்லடக்க நிகழ்ச்சியில் பொது மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அவரின் இறுதிச் சடங்குகளைக் காண, தேமுதிக அலுவலகம் முன்பாக பெரிய எல்இடி திரைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

16:48 PM (IST)  •  29 Dec 2023

உயிரிழந்த பிறகும் தொண்டர்களுக்கு உணவிட்டு அனுப்பும் கேப்டன் விஜயகாந்த்!

கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகம் முன்பாக காலையில் இருந்து கூடியிருக்கும் தொண்டர்களுக்கு, அன்னதானம் வழங்கப்பட்டு வருகின்றது.

16:24 PM (IST)  •  29 Dec 2023

அன்னமிட்ட கைகளுக்கு, அலைதிரண்டு மக்கள் வெள்ளம் அஞ்சலி செலுத்த, நிகழ்கிறது இறுதி ஊர்வலம்..

அன்னமிட்ட கைகளுக்கு, அலைதிரண்டு மக்கள் வெள்ளம் அஞ்சலி செலுத்த, நிகழ்கிறது இறுதி ஊர்வலம்..

16:12 PM (IST)  •  29 Dec 2023

விஜயகாந்த் இறுதிச்சடங்குக்கான ஏற்பாடுகள் கோயம்பேடு அலுவலகத்தில் தயார் நிலை..

Vijayankath Funeral LIVE : விஜயகாந்த் இறுதிச்சடங்குக்கான ஏற்பாடுகள் கோயம்பேடு அலுவலகத்தில் தயார் நிலை..

16:11 PM (IST)  •  29 Dec 2023

விடைபெறும் விஜயகாந்த்

16:00 PM (IST)  •  29 Dec 2023

Vijayakanth Funeral : சாலையின் இருபுறமும் காத்திருந்து, விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்கும் மக்கள்..

சாலையின் இருபுறமும் காத்திருந்து, விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்கும் மக்கள்..

15:51 PM (IST)  •  29 Dec 2023

Vijayakanth Funeral : விஜயகாந்த் புகைப்படங்களை கைகளில் ஏந்தி, ஊர்வலத்தில் பங்கேற்றுள்ள பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள்..

Vijayakanth Funeral : விஜயகாந்த் புகைப்படங்களை கைகளில் ஏந்தி, ஊர்வலத்தில் பங்கேற்றுள்ள பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள்..

15:35 PM (IST)  •  29 Dec 2023

Vijayakanth Funeral : விஜயகாந்த் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ளும் முதலமைச்சர்.. 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை

விஜயகாந்த் இறுதிச்சடங்கில் முதலமைச்சர் கலந்துகொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.. 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை அளிக்கப்படவுள்ளது

15:26 PM (IST)  •  29 Dec 2023

விஜயகாந்தின் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன், இறுதிச்சடங்கு நடக்கவிருக்கிறது

விஜயகாந்தின் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன், இறுதிச்சடங்கு நடக்கவிருக்கிறது

15:24 PM (IST)  •  29 Dec 2023

விஜயகாந்தின் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன், இறுதிச்சடங்கு நடக்கவிருக்கிறது

விஜயகாந்தின் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன், இறுதிச்சடங்கு நடக்கவிருக்கிறது

15:12 PM (IST)  •  29 Dec 2023

பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு விஜயகாந்துக்கு பிரியாவிடை கொடுக்கும் காட்சி

15:11 PM (IST)  •  29 Dec 2023

விடைபெறும் விஜயகாந்த் : மக்கள் வெள்ளத்துடன் நிகழும் இறுதி ஊர்வலம்

15:09 PM (IST)  •  29 Dec 2023

Vijayakanth Funeral Procession : மக்கள் வெள்ளத்தில் தொடங்கிய இறுதி ஊர்வலம்

14:53 PM (IST)  •  29 Dec 2023

விஜயகாந்த் உடலை வைப்பதற்கு தயார் செய்யப்படுள்ள பாக்ஸ்.. அதில் கேப்டன் என்ற வாசகம் எழுதி உள்ளது

14:49 PM (IST)  •  29 Dec 2023

விடைபெறும் விஜயகாந்த்.. தீவுத்திடலில் இருந்து கோயம்பேடு நோக்கி தொடங்கியது இறுதி ஊர்வலம்

விடைபெறும் விஜயகாந்த்.. தீவுத்திடலில் இருந்து கோயம்பேடு நோக்கி தொடங்கியது இறுதி ஊர்வலம் . 72 துப்பாக்கி குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்படவிருக்கிறது

14:32 PM (IST)  •  29 Dec 2023

Vijayakanth Funeral LIVE: விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய ஆளுநர்

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் அஞ்சலி செலுத்தினார். 

14:14 PM (IST)  •  29 Dec 2023

Vijayakanth Funeral LIVE : நடிகர் அஜித் ஆறுதல்

விடாமுயற்சி திரைப்பட ஷூட்டிங்குக்காக அசர்பைஜானில் உள்ளதால், பிரேமலதா மற்றும் குடும்பத்தினருக்கு தொலைபேசி மூலம் ஆறுதல் தெரிவித்தார் அஜித்

13:47 PM (IST)  •  29 Dec 2023

இறுதிச்சடங்கில் பொது மக்களுக்கு அனுமதியில்லை - தேமுதிக

இறுதிச்சடங்கில் பொது மக்களுக்கு அனுமதியில்லை. குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய சுற்றமான 200 பேருக்கு மட்டுமே அனுமதி - தேமுதிக

13:19 PM (IST)  •  29 Dec 2023

"எங்கள் அண்ணா”வாகவே இருந்தவர் விஜயகாந்த் - நமிதா இரங்கல்

"எங்கள் அண்ணா”வாகவே இருந்தவர் விஜயகாந்த். அவர் படப்பிடிப்பு தளத்தில் இருந்தால் பதற்றம் இல்லாமல் இருக்கமுடியும் - நமிதா இரங்கல்

13:10 PM (IST)  •  29 Dec 2023

எவ்வளவு பணிவு இருந்ததோ, அந்த அளவுக்கு நியாயமான கோபமும் கொண்டவர் விஜயகாந்த் - கமல்

எவ்வளவு பணிவு இருந்ததோ, அந்த அளவுக்கு நியாயமான கோபமும் கொண்டவர் விஜயகாந்த். அவரை இழந்தது என்னைப்போன்றோருக்கான தனிமையாக கருதுகிறேன் - கமல்

13:02 PM (IST)  •  29 Dec 2023

தீவுத்திடலில், விஜயகாந்த் இறுதி ஊர்வலத்துக்கான பணிகள் குறித்து அமைச்சர் உதயநிதி, சென்னை ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு

தீவுத்திடலில், விஜயகாந்த் இறுதி ஊர்வலத்துக்கான பணிகள் குறித்து அமைச்சர் உதயநிதி, சென்னை ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு

12:55 PM (IST)  •  29 Dec 2023

அனைவரின் கஷ்டங்களை உணர்ந்து அதற்கேற்ப உதவியும் மரியாதையும் அளித்தவர் விஜயகாந்த் - நிர்மலா சீதாராமன்

Vijayankath  Passes Away Funeral LIVE : 

அனைவரின் கஷ்டங்களை உணர்ந்து அதற்கேற்ப உதவியும் மரியாதையும் அளித்தவர் விஜயகாந்த் - நிர்மலா சீதாராமன்

12:42 PM (IST)  •  29 Dec 2023

Vijayankath Passes Away Funeral LIVE : எளிமை, நட்பு என்னும் பண்புகளுக்கு அவர்தான் இலக்கணம் - கமல்ஹாசன் நேரில் அஞ்சலி

Vijayankath  Passes Away Funeral LIVE : 

எளிமை, நட்பு என்னும் பண்புகளுக்கு அவர்தான் இலக்கணம் - கமல்ஹாசன் நேரில் அஞ்சலி

12:34 PM (IST)  •  29 Dec 2023

விஜயகாந்த் மறைவு: நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் கமல்ஹாசன்..

சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடலுக்கு நடிகர் கமல்ஹாசன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். 

12:09 PM (IST)  •  29 Dec 2023

Vijayakanth LIVE Update: ”விடைபெறும் விஜயகாந்த்” - மத்திய அரசு சார்பில் நிதியமைச்சர் அஞ்சலி

மறைந்த தேமுதிக தலைவர்  விஜயகாந்த் உடலுக்கு மத்திய அரசு சார்பில் நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன் அஞ்சலி செலுத்தினர். அவருடன் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனும் நேரில் அஞ்சலி செலுத்தினர். 

11:58 AM (IST)  •  29 Dec 2023

Vijayakanth LIVE Update: விஜயகாந்த் உடல் நல்லடக்கம் - சென்னை மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றம்

விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்படுவதை முன்னிட்டு சென்னை மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றம்  - கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்வதை முன்னிட்டு தீர்மானம் நிறைவேற்றம் 

11:28 AM (IST)  •  29 Dec 2023

Vijayakanth LIVE Update: விஜயகாந்த் உடலுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அஞ்சலி

மறைந்த தேமுதிக தலைவர்  விஜயகாந்த் உடலுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அஞ்சலி  செலுத்தினார். விஜயகாந்த் என்றாலே உங்களுக்கு அச்சம் என்பதும் துணிவும்தான் என புகழாரம் 

11:06 AM (IST)  •  29 Dec 2023

’ கேப்டன் என்பது மிகவும் பொருத்தமான பெயர்’ - விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்திய பின் நடிகர் ரஜினிகாந்த்..

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “ மனதுக்கு மிகவும் கடினமாக உள்ளது. அவரை பற்றி பேச வேண்டும் என்றால் நிறைய உள்ளது. நட்புக்கு இலக்கணமாக இருந்தவர். அவருடன் ஒரு முறை பழகிவிட்டால் வாழ்க்கையில் அதனை மறக்க முடியாது. நண்பர்கள் மீதும் அரசியல்வாதிகள் மீதும் கோபப்படக்கூடியவர். ஆனால் அவர் கோபப்பட்டால் அதில் ஒரு நியாயமான காரணம் இருக்கும். அந்த கோபத்திற்கு பின்னால் ஒரு அன்பு இருக்கும், சுயநலம் இருக்காது. தைரியமானவர், வீரமானவர். நான் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சுயநினைவின்றி இருந்த போது ஏராளமான மக்கள் ஒன்று திரண்டு இருந்தனர், அப்போது விஜயகாந்த் என்ன செய்தார் என்று யாருக்கும் தெரியாது. 5 நிமிடத்தில் அங்கு இருக்கும் மக்களை அப்புறப்படுத்தினார். 

அதேபோல் மலேசியாவில் நிகழ்ச்சி ஒன்று முடிந்த பின் மிகவும் சோர்வாக இருந்த தருணத்தில் ரசிகர்கள் சூழ்ந்த நிலையில் இருந்த போது, விஜயகாந்த் 2 நிமிடங்களில் அங்கு கூடி இருந்த ரசிகர்களை அப்புறப்படுத்தி என்னை பூப்போல் அழைத்துச் சென்றார். அப்படிப்பட்ட ஒரு மனிதரை கடைசி நாட்களில் பார்க்கும் போது மிகவும் கவலையாக இருந்தது. கேப்டன் என்பது மிகவும் பொறுத்தமான பேர். 71 வயதில் அனைத்தையும் சாதித்து விட்டு சென்றுள்ளார். வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி, மக்கள் மனதில் இருப்பவர் யார் - விஜயகாந்த். விஜியகாந்த் நாமம் வாழ்க” என மனம் உருகி பேசியுள்ளார். 

10:35 AM (IST)  •  29 Dec 2023

Vijayakanth LIVE Update: விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்திற்கு மலர்களால் தயாராகும் வாகனம்

10:28 AM (IST)  •  29 Dec 2023

Vijayakanth LIVE Update: விஜயகாந்த் உடலுக்கு ரஜினிகாந்த் ராதாரவி, வாகை சந்திரசேகர் அஞ்சலி

மறைந்த தேமுதிக தலைவர் ரஜினிகாந்த் ராதாரவி, வாகை சந்திரசேகர் ஆகியோர் நேரில் அஞ்சலி - குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். 

10:04 AM (IST)  •  29 Dec 2023

Vijayakanth LIVE Update: விஜயகாந்த் உடலை கண்டு கதறி அழுத குஷ்பூ - பார்த்திபன், பாக்யராஜ் நேரில் அஞ்சலி

விஜயகாந்த் உடலுக்கு நடிகை குஷ்பூ கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.பார்த்திபன், பாக்யராஜ், சுந்தர் சி ஆகியோரும் நேரில் வந்து விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தினர். 

09:47 AM (IST)  •  29 Dec 2023

Vijayakanth LIVE Update: விஜயகாந்த் மறைவில் ‘மனிதம்’ கற்று கொள்வோம் - நடிகர் பார்த்திபன் இரங்கல்

09:43 AM (IST)  •  29 Dec 2023

Vijayakanth LIVE Update: விஜயகாந்தை காண தீவுத்திடலில் குவியும் மக்கள் - பல கி.மீ., தூரத்திற்கு காத்திருப்பு

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த தீவுத்திடலில்  பல கி.மீ., தூரத்திற்கு காத்திருக்கும் பொதுமக்கள் - சென்னை மாநகராட்சி சார்பில் அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

09:25 AM (IST)  •  29 Dec 2023

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவு: ஓ. பன்னீர்செல்வம் நேரில் அஞ்சலி..

சென்னை தீவுத்திடல்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு சட்டமன்ற உறுப்பினர் ஓ பன்னீர்செல்வம் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். 

09:22 AM (IST)  •  29 Dec 2023

கேப்டன் விஜயகாந்த் மறைவு: பெண்ணாடத்தில் பெண்கள் மொட்டை அடித்து இரங்கல்

கடலூர்: பெண்ணாடத்தில் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு பெண்கள் மொட்டை அடித்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

08:41 AM (IST)  •  29 Dec 2023

Vijayakanth LIVE Update: பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடல்.. தீவுத்திடலில் போக்குவரத்து மாற்றம்

  • காமராஜர் சாலை, நேப்பியர் பாலம், போர் நினைவகம் மற்றும் தீவு திடலின் இடது வாசல் வழியாக அண்ணாசாலைக்கு நுழையும் கொடி ஊழியர்கள் சாலையிலும் அனைத்து விஐபி மற்றும் விவிஐபி-க்களின் வாகனங்கள் அனுமதிக்கப்படும்.
  • மற்ற மூத்த கலைஞர்கள் பல்லவன் முனை மற்றும் வாலாஜா முனை (அண்ணா சாலை, கொடிப் பணியாளர் சாலை சந்திப்பு) வரை அனுமதிக்கப்படுவார்கள்.தீவுத் திடல் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், போக்குவரத்தின் அளவு ஓரளவிற்கு அதிகமானதாக இருக்கும். எனவே, வாகன ஓட்டிகள் மாற்று வழியை தேர்வு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
  • பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் கட்சிக் கேடர் வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் (போக்குவரத்து பேருந்துகள் மற்றும் மேக்சிகேப்கள்) அண்ணா சிலை அருகே அனுமதிக்கப்படும், மேலும் கட்சி தொண்டர்களுக்கான அனுமதி முடிந்தவுடன் கடற்கரை சாலை வாகன நிறுத்துமிடத்திற்கு திருப்பி விடப்படுவார்கள்.
  • அனைத்து இலகுரக வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் தன்னார்வ வாகனங்கள் பெரியார் சிலை, சுவாமி சிவானந்தா சாலை, எம்எல்ஏ விடுதி சாலை வழியாக அனுமதிக்கப்படும்
  •  தீவுத் திடல், ஈ.வி.ஆர்.சாலை, அண்ணாசாலை, காமராஜர் சாலை, கோயம்பேடு மேம்பாலம், கோயம்பேடு, வடபழனியிலிருந்து திருமங்கலம் வரையிலான 100 அடி சாலையில் வணிக வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை
08:39 AM (IST)  •  29 Dec 2023

Vijayakanth LIVE Update: விஜயகாந்த் மறைவு - சீர்காழியில் 3 ஆயிரம் கடைகள் அடைப்பு

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவையொட்டி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 3 ஆயிரம் கடைகளை அடைத்து வியாபாரிகள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

08:25 AM (IST)  •  29 Dec 2023

Vijayakanth LIVE Update: நடிகர் சங்க கட்டடத்துக்கு விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும் - நடிகர் ராம்கி கோரிக்கை

விஜயகாந்த் உடலுக்கு நேரில் சென்று  நடிகர்கள் ராம்கி, லிவிங்ஸ்டன் அஞ்சலி செலுத்தினர்.  நடிகர் சங்க கட்டடத்துக்கு விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

08:03 AM (IST)  •  29 Dec 2023

Vijayakanth LIVE Update: தீவுத்திடல் விஜயகாந்த் உடல்.. சென்னை மாநகராட்சி சார்பில் சிறப்பு ஏற்பாடுகள்

தீவுத்திடல் விஜயகாந்த் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு சென்னை மாநகராட்சி சார்பில் அடிப்படை வசதிகள் ச்யெயப்பட்டுள்ளது. 

07:39 AM (IST)  •  29 Dec 2023

Vijayakanth LIVE Update: அசாத்தியமான மன உறுதி கொண்ட மனிதர் விஜயகாந்த் - நடிகர் ரஜினிகாந்த் புகழஞ்சலி

அசாத்தியமான மன உறுதி கொண்ட மனிதர் விஜயகாந்த்.. அவரை இழந்தது மிகப்பெரிய துரதிர்ஷ்டம். அவரது ஆன்மா சாந்தியடைட்டும் - நடிகர் ரஜினிகாந்த் புகழஞ்சலி 

07:21 AM (IST)  •  29 Dec 2023

Vijayakanth LIVE Update: விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மிஷ்கின் வெளியிட்ட பதிவு

07:09 AM (IST)  •  29 Dec 2023

Vijayakanth LIVE Update: விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி - இன்று படப்பிடிப்புகள் ரத்து

விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த திரையுலகினரும் அவரது உடலுக்கு திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

06:33 AM (IST)  •  29 Dec 2023

Vijayakanth LIVE Update: தீவுத்திடல் வந்தடைந்தது விஜயகாந்த் உடல்- போலீசார் தீவிர கண்காணிப்பு

மறைந்த விஜயகாந்த் உடலானது தீவுத்திடலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு கட்டுக்கடங்கா கூட்டம் அலைமோதுவதால் பாதுகாப்பு பணிக்காக 3 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

06:15 AM (IST)  •  29 Dec 2023

Vijayakanth LIVE Update: தீவுத்திடல் வந்தடைந்தது விஜயகாந்த் உடல்.. அஞ்சலி செலுத்த குவியும் மக்கள்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் தேமுதிக அலுவலகத்தில் இருந்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வசதியாக தீவுத்திடலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மதியம் 1 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம்

22:34 PM (IST)  •  28 Dec 2023

Actor Vijay Paid Tributes to Vijayakanth : கண்ணாடி பேழையின் மீது கைவைத்து கண்ணீர் விட்ட விஜய்

Actor Vijay Paid Tributes to Vijayakanth : கண்ணாடி பேழையின் மீது கைவைத்து கண்ணீர் விட்ட விஜய், விஜயகாந்த் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்

22:01 PM (IST)  •  28 Dec 2023

விஜயகாந்துக்கு மதுரையில் சிலை நிறுவுமாறு மேயருக்கு கடிதம் எழுதியுள்ளார் மாணிக்கம் தாக்கூர் எம்.பி

விஜயகாந்துக்கு மதுரையில் சிலை நிறுவுமாறு மேயருக்கு கடிதம் எழுதியுள்ளார் மாணிக்கம் தாக்கூர் எம்.பி

21:50 PM (IST)  •  28 Dec 2023

Vijayakanth Tributes : விஜயகாந்த்துக்கு அஞ்சலி : தீவுத்திடலில் ஆய்வு நடத்தி வருகிறார் சென்னை ஆணையர் ராதாகிருஷ்ணன்.

விஜயகாந்த்துக்கு அஞ்சலி : தீவுத்திடலில் ஆய்வு நடத்தி வருகிறார் சென்னை ஆணையர் ராதாகிருஷ்ணன்.

21:21 PM (IST)  •  28 Dec 2023

ஈழத்தமிழர்கள் மீதான அன்பால் மகனுக்கு பிரபாகரன் என பெயர் சூட்டினார்.. அவர் புகழ் ஓங்குக - வைகோ

ஈழத்தமிழர்கள் மீதான அன்பால் மகனுக்கு பிரபாகரன் என பெயர் சூட்டினார்.. அவர் புகழ் ஓங்குக - வைகோ

20:52 PM (IST)  •  28 Dec 2023

அற்புதமான மனிதர் விஜயகாந்த் - பிரகாஷ்ராஜ்

தைரியமான, அக்கறையுள்ள மனிதர், நடிகர் விஜயகாந்தை இழந்து நிற்கிறோம் - நடிகர் பிரகாஷ்ராஜ்

20:51 PM (IST)  •  28 Dec 2023

விஜயகாந்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் புகழாரம்

விஜயகாந்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் புகழாரம்

20:49 PM (IST)  •  28 Dec 2023

தீவுத்திடலில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட பின்பு, அங்கிருந்து 1 மணியளவில் இறுதி ஊர்வலம் தொடங்கும் - தேமுதிக

தீவுத்திடலில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட பின்பு, அங்கிருந்து 1 மணியளவில் இறுதி ஊர்வலம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது - தேமுதிக 

20:30 PM (IST)  •  28 Dec 2023

Vijayakanth LIVE Update: நாளை மாலை விஜயகாந்த் இறுதிச்சடங்கு

“தீவுத்திடலில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக தேமுதிக அலுவலகம் அடைந்து 4.45 மணிக்கு இறுதிச்சடங்குகள் நடைபெற்று, விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்படும்” என தேமுதிக அறிக்கை வெளியிட்டுள்ளது.

20:28 PM (IST)  •  28 Dec 2023

தீவுத்திடலுக்கு எடுத்து செல்லச் செல்லப்படும் விஜயகாந்த் உடல்!

காலை 6 மணிமுதல் மதியம் 1 மணிவரை தீவுத்திடலில் விஜயகாந்தின் உடல் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

20:19 PM (IST)  •  28 Dec 2023

Vijayakanth LIVE Update: தீவுத்திடலில் அஞ்சலி

நாளை காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை விஜயகாந்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக தீவுத்திடலில் வைக்கப்பட உள்ளது.

20:17 PM (IST)  •  28 Dec 2023

Vijayakanth LIVE Update: தீவுத்திடலுக்கு எடுத்துச் செல்லப்படும் விஜயகாந்தின் உடல்!

பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு வசதியாக நடிகர் விஜயகாந்தின் உடல் நாளை தீவுத்திடலுக்கு மாற்றப்படுவதாக தேமுதிக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

20:15 PM (IST)  •  28 Dec 2023

கலங்கி நின்ற அர்ஜுன்

விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த வந்த நடிகர் அர்ஜுன், கலங்கி நின்று குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தார்

19:44 PM (IST)  •  28 Dec 2023

Vijayakanth LIVE Update: ஒரு கண்ணில் கருணை, மறு கண்ணில் துணிச்சல்.. விஜயகாந்துக்கு சூர்யா இரங்கல்

“அண்ணன் விஜயகாந்த் அவர்கள் நம்மளோட இல்லைங்கற செய்தி கேட்டு மனசுக்கு அவ்வளவு வருத்தமா இருக்கு. ஒரு கண்ணில் துணிச்சலும் மறு கண்ணில் கருணையுமாய் வாழ்ந்த அபூர்வ கலைஞர் அவர்.

கடைக்கோடி மக்கள் வரை எல்லாருக்கும் எல்லா உதவியும் செஞ்சு புரட்சிக் கலைஞனாய், கேப்டனாய் நம் எல்லார் மனசுலயும் இடம்பிடிச்சவர். அண்ணன் விஜயகாந்தின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கறேன். அவரது குடும்பத்தாருக்கும் லட்சக்கணக்கான ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்" என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

19:38 PM (IST)  •  28 Dec 2023

Vijayakanth Funeral LIVE : விஜயகாந்த் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தார் இசைஞானி இளையராஜா

Ilayaraja : விஜயகாந்த் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தார் இசைஞானி இளையராஜா

19:13 PM (IST)  •  28 Dec 2023

Mallikarjun Karge On Vijayakanth : போற்றப்பட்டவர் விஜயகாந்த் - மல்லிகார்ஜுன் கார்கே

Mallikarjun Karge On Vijayakanth : நல்ல நடிகராகவும், அரசியல்வாதியாகவும் தமிழ்நாட்டு மக்களால் போற்றப்பட்டவர் விஜயகாந்த் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார்

18:06 PM (IST)  •  28 Dec 2023

Vijayakanth LIVE Update: விஜயகாந்த் குடும்பத்துக்கும் ரசிகர்களுக்கும் ஆறுதல்;  மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இரங்கல்

“தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். அவரது குடும்பத்துக்கும் நண்பர்களுக்கும் எண்ணற்ற ரசிகர்களுக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

 

18:04 PM (IST)  •  28 Dec 2023

விஜயகாந்த் மறைவு : எளிமை குறையா மனிதர், மக்கள் நலன் விரும்பிய மனிதர் - கனிமொழி இரங்கல்

விஜயகாந்த் மறைவு : எளிமை குறையா மனிதர், மக்கள் நலன் விரும்பிய மனிதர் - கனிமொழி இரங்கல்

17:59 PM (IST)  •  28 Dec 2023

Vijayakanth LIVE Update: விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பாஜக தலைவர் அண்ணாமலை

விஜயகாந்த் உடலுக்கு தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

17:56 PM (IST)  •  28 Dec 2023

Vijayakanth LIVE Update: தமிழ்நாட்டுக்கே பேரிழப்பு.. விஜயகாந்த் மறைவுக்கு கார்த்தி இரங்கல்

விஜயகாந்த் மறைவு திரையுலகுக்கு மட்டுமின்றி தமிழ்நாட்டுக்கே பேரிழப்பு என நடிகரும் நடிகர் சங்க பொருளாளருமான கார்த்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

17:55 PM (IST)  •  28 Dec 2023

Vijayakanth LIVE Update: இயக்குநர்கள் பி.வாசு, மாரி செல்வராஜ் விஜயகாந்துக்கு நேரில் அஞ்சலி!

தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள நடிகர் விஜயகாந்தின் உடலுக்கு நேரில் சென்று நடிகர் அதர்வா, கணேஷ், நடிகை ஆர்த்தி, இயக்குநர்கள் பி.வாசு, மாரி செல்வராஜ் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

17:10 PM (IST)  •  28 Dec 2023

நடிகர்கள் விஜயகுமார், கவுண்டமணி, ஆனந்த்ராஜ் ஆகியோர் விஜயகாந்த் பூத உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி

Vijayakanth Funeral LIVE : நடிகர்கள் விஜயகுமார், கவுண்டமணி, ஆனந்த்ராஜ் ஆகியோர் விஜயகாந்த் பூத உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி

17:09 PM (IST)  •  28 Dec 2023

Vijayakanth Funeral LIVE : தமிழ் தலைவாஸ் அணி, விஜயகாந்த் மறைவுக்கு ட்விட்டரில் இரங்கல் செய்தி

16:56 PM (IST)  •  28 Dec 2023

மண்ணின் மைந்தரின் மறைவு.. வருந்துகிறேன் - அமைச்சர் பி.டி.ஆர்

16:33 PM (IST)  •  28 Dec 2023

விஜயகாந்த் உடலுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று இரங்கல்

விஜயகாந்த் உடலுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று இரங்கல்

16:07 PM (IST)  •  28 Dec 2023

பொன் மனம் கொண்டவர் விஜயகாந்த்.. அவரின் மறைவால் வேதனை அடைகிறேன் - ரோஜா

பொன் மனம் கொண்டவர் விஜயகாந்த்.. அவரின் மறைவால் வேதனை அடைகிறேன் - நடிகை ரோஜா, இரங்கல்

15:51 PM (IST)  •  28 Dec 2023

Vijayankath Passes Away Funeral LIVE : மக்களின் கண்ணீரை உணர்ந்தவன் நீ - இயக்குநர் லிங்குசாமி

15:32 PM (IST)  •  28 Dec 2023

பாமக : ஜி.கே.மணி இரங்கல் செய்தி

Vijayakanth Funeral LIVE : "தே.மு.தி.க தலைவர், திரைப்பட நடிகர் நண்பர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மறைவுற்ற செய்தி அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அவர் அரசியலுக்கு வருவதற்கு முன்பே என்னுடன் நீண்ட காலமாக நட்புடன் பழகி வந்த நல்ல நண்பர். அவர் உடல் நலம் குறைவால் மருத்துவமனையில் இருந்த நேரத்தில் கைப்பேசியில் தொடர்பு கொண்டு அவரது குடும்பத்தினரிடம் உடல் நலன் விசாரித்தேன் அவர் உடல் நலன் தேறி  வருகிறார் என்று தெரிவித்தனர்.
 
அவர் உடல் நலம் பெற்று பூரண நலத்துடன் தொடர்ந்து முன்பு இருந்த மாதிரியே செயல்படுவார் என்று ஆவலுடன் எண்ணிக் கொண்டிருந்தேன். இந்நிலையில் அவர் மறைவுற்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரை இழந்து மீளாத் துயரில் வாடும் அவரது மனைவி, மகன்கள், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், அவரது இயக்கத்தைச் சார்ந்தவர்கள் அனைவருக்கும் அனுதாபத்தையும், ஆறுதலையும், தெரிவித்துக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்
 
 
 
15:26 PM (IST)  •  28 Dec 2023

Vijayakanth Funeral LIVE : விஜயகாந்த் மறைவுக்கு மதுரை ஆதீனம் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Vijayakanth Funeral LIVE : விஜயகாந்த் மறைவுக்கு, அவரது குடும்பத்துக்கு மதுரை ஆதீனம் இரங்கல் தெரிவித்துள்ளார். ஆளுநர் தமிழிசை, அமைச்சர் உதயநிதி ஆகியோர் நேரில் வந்து இரங்கல் தெரிவித்தனர்

14:40 PM (IST)  •  28 Dec 2023

Vijayakanth Funeral LIVE Update: திரு. விஜயகாந்த் மறைவிற்கு இயக்குநர் பாரதிராஜா கண்ணீர் அஞ்சலி

Vijayakanth LIVE Update:

உழைப்பு, தன்னம்பிக்கை  வெற்றி என எல்லா நேர்மறை எண்ணங்களுக்கும் முன்னுதாரணம் என்று சொன்னால் நமது கேப்டனை சொல்லலாம். 

தன்னை வெற்றி கொள்வதைப் போல வேறு வெற்றி எதுவும் இல்லை. தன்னை வெற்றிகொண்டு, பின் சுற்றம் அரசியல் எனப் பெரும் வலம் வந்த மனிதன் நல்ல முன்னுதாரணம்தான். 

இன்று அவரை இழந்துவிட்டோம் என்பது பெரிய இழப்பாகும். 

நிறைய நல்லுதவிகள்.. நிறைய முயற்சிகள் …என ஒரு படிப்பினையாய் முன் நின்ற மகனை இழந்துவிட்டோம். 
அவர் இங்கு காட்டிய மனிதநேயத்திற்கு நன்றி சொல்வதைவிட சிறப்பான அஞ்சலி வேறெதுவும் இருக்க இயலாது. 

நன்றி மனிதநேயனே...
மனித நேய மிக்க கேப்டன் விஜயகாந்த் மறைவிற்கு தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் எங்கள் அஞ்சலிகள். 
 
பாரதிராஜா
தலைவர் 
தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்

13:56 PM (IST)  •  28 Dec 2023

Vijayakanth LIVE Update: கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த தேமுதிக அலுவலகம் வந்த நடிகர் கவுண்டமணி

கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த தேமுதிக அலுவலகம் வந்தார் நடிகர் கவுண்டமணி

13:43 PM (IST)  •  28 Dec 2023

Vijayakanth LIVE Update: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவிற்கு நடிகர் சிவகார்த்திகேயன் இரங்கல்..!

நடிகர் சிவகார்த்திகேயன் இரங்கல்:

தமிழ்த்திரையுலகம் நமக்குத் தந்த ஒப்பற்ற மாமனிதர் புரட்சிக்கலைஞர் திரு.விஜயகாந்த் அவர்களின் மறைவு குறித்த செய்தி என்னை ஆழ்ந்த துயருக்குள் ஆழ்த்திவிட்டது. எத்தனையோ கோடி உள்ளங்களின் அன்புக்குச் சொந்தக்காரர், அள்ளித்தரும் பண்புக்கும், அரவணைப்பும் தலைமைப்பண்பும் தனக்கே உரிய பாணியில் கொண்ட மேம்பட்ட மனிதர் , பிறர் பசியை தன் பசியாய் உணர்ந்த உன்னத மனிதர், அன்பால் பண்பால் அறத்தால் மறத்தால் நம் அனைவரின் அன்பையும் ஆதரவையும் வெற்றி கொண்டவர். அவரது மறைவு திரை உலகம் மட்டுமல்லாது, தமிழக அரசியலிலும் ஓர் மிகப்பெரிய இழப்பு. புரட்சிக்கலைஞர் திரு.விஜயகாந்த் அவர்களின் மறைவால் வாடும் அனைவருக்கும் இந்த நேரத்தில் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

13:40 PM (IST)  •  28 Dec 2023

Vijayakanth LIVE Update: விஜயகாந்த் நிஜ வாழ்விலும் ஹீரோதான் - நடிகர் சிம்பு

விஜயகாந்த் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோதான். மக்கள் மனதில் என்றும் வாழும் சகாப்தம் விஜயகாந்த் என நடிகர் சிலம்பரசன் இரங்கல் தெரிவித்துள்ளார். 

13:07 PM (IST)  •  28 Dec 2023

Vijayakanth LIVE Update: விஜயகாந்த் மறைந்த செய்தியை அறிந்து இதயம் நொறுங்கி போனது - சிரஞ்சீவி உருக்கம்

விஜயகாந்த் மறைந்த செய்தியை அறிந்து இதயம் நொறுங்கிப் போவதாக நடிகர் சிரஞ்சீவி உருக்கம். 

13:04 PM (IST)  •  28 Dec 2023

Vijayakanth LIVE Update: கோயம்பேடு பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்..!

தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்தின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்படுவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோயம்பேடு 100 அடி சாலை வழியே செல்வதை தவிர்க்க வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

12:25 PM (IST)  •  28 Dec 2023

Vijayakanth LIVE Update: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவிற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல்..!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல்:

தே.மு.தி.க தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் உடல்நலக்குறைவால் மரணமடைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். சிறந்த மனிதநேயர் - துணிச்சலுக்கு சொந்தக்காரர் - தமிழ்த்திரையுலகின் தவிர்க்கவியலா நாயகராக திகழ்ந்தவர் - முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் மீது அவருக்கும் , அவர் மீது கலைஞர் அவர்களுக்கும் இருந்த பேரன்பை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அன்புக்குரிய நண்பர். நடிகர் சங்கத் தலைவராகவும் - எதிர்க்கட்சித் தலைவராகவும் திறம்பட செயல்பட்ட கேப்டன் அவர்களின் இழப்பு, தமிழ்த்திரையுலகிற்கும் - அரசியல் உலகிற்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது மரணத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கல். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர் - தே.மு.தி.க தொண்டர்கள் - நண்பர்கள் - திரையுலகினருக்கு என் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். கேப்டன் #விஜயகாந்த் அவர்களின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்.

12:16 PM (IST)  •  28 Dec 2023

Vijayakanth LIVE Update: விஜயகாந்த் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது - ஜே.பி.நட்டா

மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் நடிகருமான திரு விஜயகாந்த் அவர்களின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது.
 
திரைப்படத் தயாரிப்பிலும் பொதுச் சேவையிலும் மிகுந்த ஆர்வம் கொண்ட அவர், இந்தத் துறைகளில் குறிப்பிடத்தக்க முத்திரையைப் பதித்தார். மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கான அவரது நேர்மையான அர்ப்பணிப்பு மற்றும் அர்ப்பணிப்புக்காக அவர் நினைவுகூரப்படுவார்.
 
துயரத்தின் இந்த நேரத்தில் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி.

12:14 PM (IST)  •  28 Dec 2023

Vijayakanth LIVE Update: விஜயகாந்த் மறைவிற்கு அமித்ஷா இரங்கல்..!

தேமுதிக தலைவரும், தமிழ் திரையுலகில் மூத்த நடிகருமான விஜயகாந்த் அவர்களின் மறைவு குறித்து அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன். கேப்டன் என்று அன்புடன் அழைக்கப்படும் விஜயகாந்த் அவர்கள் தனது திரை மற்றும் ஆஃப்ஸ்கிரீன் பாத்திரங்கள் மூலம் மக்களிடையே தேசபக்தியை தூண்டினார். அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் ஷாந்தி ஷாந்தி என உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழில் ட்வீட் செய்துள்ளார். 

12:08 PM (IST)  •  28 Dec 2023

Vijayakanth LIVE Update: விஜயகாந்த் மறைவிற்கு சிவகுமார் இரங்கல் செய்தி

தமிழக அரசியலில் 
எம்.ஜி.ஆரை அடுத்து
நம்பிக்கையான 
ஒரு தலைவராக
உருவாகிக் கொண்டருந்தவர்..
ஆயிரக்கணக்கில் ரசிகர்களை 
மாதம் ஒருமுறை
நேரில் சந்தித்ததை
கோபி படப்பிடிப்பில்
பார்த்துள்ளேன்.
தி.நகர் ரோகிணி லாட்ஜில்
உள்ள தன் அறையில்
நண்பர்களை தங்கவிட்டு
படப்பிடிப்பு முடிந்து வந்து
 வெராண்டாவில் படுத்துக்கொள்வார்.
எளிமையானவர், நேர்மையானவர்.



நடிகர் சங்க தலைவராக அவர் இருந்த போது கமல், ரஜினியை மலேசிய கலைநிகழ்ச்சிக்கு நேரில் அழைக்கச்சென்று அவர்கள் கரம் பற்றி வேண்டிக்கொண்டவர்.
'சாமந்திப்பூ' -படத்தில் சிறு வேடத்தில் என்னோடு நடித்தார்.   'புதுயுகம்' - படத்தில் என் உயிர் நண்பனாக நடித்தார்..
கலையுலகம், அரசியல் உலகம் ஒரு நல்ல மனிதரை இழந்துவிட்டது. சூர்யா, கார்த்தியுடன் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்

12:06 PM (IST)  •  28 Dec 2023

Vijayakanth LIVE Update: நடிகர் நெப்போலியன் கேப்டன் மறைவிற்கு விடுத்துள்ள இரங்கல் செய்தி

உலகில் வாழும் அனைத்து தமிழ்ச் சொந்தங்களுக்கும் எனது பணிவான வணக்கம்..!

தேமுதிகவின் தலைவரும் , கேப்டன் என நம் எல்லோராலும் செல்லமாக அழைக்கப்படும் , நமது அன்பு அண்ணன் திரு விஜய்காந்த் அவர்கள் மறைவு செய்தி 
கேட்டு நாங்கள் அதிற்ச்சியுற்றோம்..!
மிகவும் வேதனையும் , வருத்தமும் அடைந்தோம்..!!
அன்பு சகோதரி குஷ்பு அவர்களும், தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன் சிவா அவர்களும் எனக்கு தொலைபேசியில் அழைத்து அண்ணன் விஐய்காந்த் அவர்களின் மறைவு குறித்து தகவல் சொன்னார்கள்…!!

இன்னும் அதிக நாள் இருந்து திரைப்படத் துறைக்கும், 
நமது நாட்டிற்கு நிறைய செய்யவேண்டிய ஒரு நல்ல நடிகரையும், ஒரு நல்ல தலைவரையும் நாம் இழந்துவிட்டோம்…!

அவரோடு நான் பழகிய நாட்கள், அவருடன் இணைந்து  பணியாற்றிய படங்கள், நடிகர் சங்க அனுபவங்கள், 
நட்சத்திர இரவுகள் நடத்தி நிதி வசூல் செய்து நடிகர் சங்க கடனை அடைத்து கட்டிடத்தை மீட்டெடுத்தல் என, எண்ணிலடங்காத செயல்களை எல்லாம் , அவருடன் , நண்பர் சரத்குமார் அவர்களும் , நானும் உடன் இருந்து கடினமாக உழைத்து , வெற்றி கண்டு கடந்து வந்த பாதைகளை எல்லாம் , எங்களால்  என்றும் , எதையும் எங்கள் வாழ்நாளில் மறக்க இயலாது ..!


கடந்த ஆண்டு நான் அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்திருந்த போது , அவரை சந்திக்க அனுமதி கேட்டு, அவரது இல்லத்தில் நேரடியாக சந்தித்து உடல் நலம் விசாரித்தது, மகிழ்வோடு பழைய நினைவுகளை எல்லாம் பேசி அவரை மகிழ்வித்தது , இன்றும் எனது மனதில் நேற்று நடந்தது போல இருக்கிறது…!
வாழ்வில் மறக்கமுடியாத 
ஒரு நல்ல மனிதர்..!!

அவரை இழந்து வாடும் 
அவரது குடும்பத்திற்கும், 
அவரது நண்பர்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும்,
மற்றும் அவரது ரசிகர்களுக்கும், தேமுதிக நிர்வாகிகளுக்கும் அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும்
எங்கள் குடும்பம் சார்பாக ஆழ்ந்த இரங்களையும் , வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்…!!
அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறோம்..!! 🙏

12:01 PM (IST)  •  28 Dec 2023

Vijayakanth LIVE Update: விஜயகாந்த் மறைவுக்கு திரையுலகினர், தலைவர்கள் அஞ்சலி..!

திரையுலகிலும், அரசியலிலும் தமக்கென தவிர்க்க முடியாத இடத்தை வென்றெடுத்தவர் விஜயகாந்த் - ராமதாஸ்

தனிப்பட்ட முறையில் பழகுவதற்கு இனிய பண்பாளர்; மனதில் பட்டத்தை வெளிப்படையாக பேசுபவர் - முத்தரசன்

இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே என்கிற கொள்கை அடிப்படையில் உதவி செய்தவர் - ஜவாஹிருல்லா 

விஜயகாந்த் மறைவு செய்தி அறிந்து வருத்தமடைந்தேன் - தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் இரங்கல். 

11:46 AM (IST)  •  28 Dec 2023

Vijayakanth LIVE Update: பசியாற உணவளித்த மனிதநேயவாதி - சீமான் புகழாரம்

தம்மை நாடிவந்த மக்கள் அனைவருக்கும் பசியாற உணவளித்த மனிதநேயவாதி. விஜயகாந்த் அவர்களின் புகழ் தமிழ்நாடு மக்கள் மனங்களில் என்றென்றும் நிலைத்திருக்கும். அன்பு சகோதரர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம் - சீமான் 

11:32 AM (IST)  •  28 Dec 2023

Vijayakanth LIVE Update: தேமுதிக அலுவலகத்திலேயே விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்படும் - சுதீஸ் அறிவிப்பு

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நாளை மாலை 4.45 மணிக்கு முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுகிறது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திலேயே விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

11:28 AM (IST)  •  28 Dec 2023

Vijayakanth LIVE Update: இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் - ஓபிஎஸ் இரங்கல்

அன்புச் சகோதரர் விஜயகாந்த் அவர்களை இழந்து வாடும் அவரது மனைவி அன்புச் சகோதரி திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்திற்கும், திரைப்பட ரசிகர்களுக்கும், தேசிய முற்போக்கு திராவிடக் கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

11:26 AM (IST)  •  28 Dec 2023

Vijayakanth LIVE Update: மெரினாவில் விஜயகாந்தின் உடல் நல்லடக்கமா..?

மறைந்த விஜயகாந்த் அவர்களை மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்யவேண்டும் என்று அவரது தொண்டர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

11:21 AM (IST)  •  28 Dec 2023

Vijayakanth LIVE Update: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவிற்கு டிடிவி தினகரன் இரங்கல்..!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவிற்கு டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “திரையுலகம் மட்டுமல்லாது தமிழக அரசியல் வரலாற்றிலும் தனக்கென தனி அடையாளத்தை பதித்த தேமுதிக தலைவர் கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது.

சாமானியனாக சினிமாவுக்குள் நுழைந்து தன் புரட்சிகரமான கருத்துக்கள் மூலம் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்ததோடு, தமிழக அரசியலிலும் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்ந்த திரு.விஜயகாந்த் அவர்களின் மறைவு ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கே மிகப்பெரிய இழப்பு ஆகும் இயன்றதை செய்வோம் இல்லாதவருக்கே எனும் முழக்கத்தை முன்னிறுத்தி நடிகராக, நடிகர் சங்கத்தலைவராக, அரசியல்வாதியாக, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக, ஏழை, எளிய மக்களுக்கு உதவும் மனிதாபிமானம் கொண்டவராக கேப்டன் அவர்கள் ஆற்றிய பணிகள் என்றென்றும் தமிழக மக்கள் மனதில் நிலைத்திருக்கும்.

தமிழ் மீதும் தமிழக மக்கள் மீதும் அதீத பற்று கொண்டிருந்த கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர், திரையுலகத்தினர், ரசிகர்கள் மற்றும் தேமுதிக தொண்டர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார். 

11:15 AM (IST)  •  28 Dec 2023

Vijayakanth LIVE Update: எளிமை குறையாத மனிதர் விஜயகாந்த் - கனிமொழி எம்.பி.

தே.மு.தி.க நிறுவனர் விஜயகாந்த் அவர்கள் மறைவெய்திய செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. எளிமை குறையாத மனிதராக, மக்கள் நலனுக்காகப் பொதுவாழ்வில் துணிச்சலாகச் செயலாற்றியவர். தலைவர் கலைஞரிடமும் எனது அம்மாவிடமும் அன்பு பாராட்டி, எங்களின் நலன் விரும்பியாக இருந்த அவரது மறைவு தமிழ்நாட்டு அரசியலுக்கு மட்டுமன்றி எனக்கும் பேரிழப்பாகும். அவரது குடும்பத்தினர் மற்றும் கட்சியினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் - கனிமொழி எம்.பி.

11:08 AM (IST)  •  28 Dec 2023

Vijayakanth LIVE Update: கட்சி தொடங்கி 6 ஆண்டுகளில் எதிர்க்கட்சி தலைவர்..!

2011ம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த தேமுதிக 29 இடங்களில் வென்றது. இதையடுத்து விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராக பேரவைக்குள் நுழைந்தார். 

11:05 AM (IST)  •  28 Dec 2023

Vijayakanth LIVE Update: புரட்சிகர கதாபாத்திரங்களால் புரட்சிக்கலைஞர் என்ற பட்டம்..!

தான் நடிக்கும் புரட்சிகர கதாபாத்திரங்களில் நடித்ததால் புரட்டிக் கலைஞர் என அழைக்கப்பட்டார் விஜயகாந்த். 

11:01 AM (IST)  •  28 Dec 2023

Vijayakanth LIVE Update: மதுரை மேலமாசி வீதியில் உள்ள விஜயகாந்தின் பூர்வீக வீடு..!

விஜயகாந்தின் மறைவுச் செய்தி கேட்டு அவரின் உடன் பிறந்த சகோதரர் செல்வராஜ் மற்றும் மனைவி மீனாட்சி ஆழ்ந்த சோகத்துடன் உள்ளனர்.

11:00 AM (IST)  •  28 Dec 2023

Vijayakanth LIVE Update: உங்கள் உதவிகளுக்கு என்றும் மறைவில்லை - ஏ.ஆர். முருகதாஸ்

உங்கள் நினைவிக்கும், உங்கள் உதவிகளுக்கும் என்றும் மறைவில்லை. அந்த கம்பீரம், அந்த மனிதநேயம், அந்த நேர்மை இனி எப்போதும் காண்போம் கேப்டன். - ஏ.ஆர். முருகதாஸ்

விஜயகாந்த் போல் ஒரு நடிகரை பார்க்கவே முடியாது!.. ஏ.ஆர்.முருகதாஸ்  நெகிழ்ச்சி… - CineReporters

10:54 AM (IST)  •  28 Dec 2023

Vijayakanth LIVE Update: அஞ்சாத துணிச்சல் அவரது அடையாளம் - கமல்ஹாசன் புகழாரம்

எதற்கும் அஞ்சாத துணிச்சல் அவரது அடையாளமாக இருந்தது. சினிமா, அரசியல் தளங்களில் தடம் பதித்த புரட்சித் கலைஞர் நம் நினைவுகளில் நிலைத்திருப்பார் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவிற்கு கமலஹாசன் தனது இரங்கலை பதிவிட்டுள்ளார். 

Friend Vijaykanth I want to return home with full health -Kamalhasan |  நண்பர் விஜயகாந்த் முழு நலமுடன் வீடு திரும்ப விரும்புகிறேன் -கமல்ஹாசன்

10:51 AM (IST)  •  28 Dec 2023

கேப்டன் விஜயகாந்துக்கு இறுதி மரியாதை செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அன்பிற்கினிய நண்பர் - தேசிய முற்போக்கு திராவிடக் கழக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு இறுதி மரியாதை செலுத்தினேன். நல்ல உள்ளத்திற்குச் சொந்தக்காரரான நண்பர் விஜயகாந்த் அவர்கள் திரையுலகிலும் பொதுவாழ்விலும் தனது கடும் உழைப்பினால் வெற்றிகரமான முத்திரைகளைப் பதித்த சாதனையாளர். நடிகராக, நடிகர் சங்கத் தலைவராக, அரசியல் கட்சித் தலைவராக, சட்டமன்ற உறுப்பினராக, எதிர்க்கட்சித் தலைவராக அவர் ஏற்றுக்கொண்ட பணி எதுவாக இருந்தாலும் அதில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தன்னைச் சார்ந்த அனைவருக்கும் உறுதுணையாக இருந்தவர். குடும்ப நண்பராக என்னிடம் பழகியவர். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் மீது என்றென்றும் தனிப்பாசம் கொண்டவர். தனது திருமணம் உள்ளிட்ட குடும்ப நிகழ்வுகளைத் தலைவர் கலைஞர் தலைமையில் நடத்திய தமிழ் உணர்வாளரான நண்பர் விஜயகாந்த், நடிகர் சங்கத்தலைவராக இருந்தபோது தலைவர் கலைஞர் அவர்களின் கலையுலகப் பொன்விழாவைப் பாராட்டி, திரையுலகின் சார்பில் மாபெரும் விழா எடுத்து, தங்கப் பேனாவை பரிசாக அளித்தவர். தலைவர் கலைஞர் அவர்கள் உடல்நலன் குன்றியிருந்தபோது, நேரில் வந்து உடல்நலன் விசாரித்து சென்றதுடன், தலைவர் கலைஞர் மறைவெய்ந்தியபோது, வெளிநாட்டில் இருந்த நண்பர் விஜயகாந்த் கண்ணீர் மல்க காணொளி அனுப்பி தன் இரங்கலைத் தெரிவித்ததையும், வெளிநாட்டிலிருந்து திரும்பியதும் விமான நிலையத்திலிருந்து நள்ளிரவில் நேராகச் சென்னை கடற்கரையில் உள்ள தலைவர் கலைஞரின் ஓய்விடம் சென்று தன் வணக்கத்தைச் செலுத்தியதையும் எவரும் மறக்க முடியாது. தமிழுணர்வும் தாராள மனமும் கொண்ட உன்னத மனிதரான நண்பர் விஜயகாந்த் அவர்களுடன் கலைத்துறையில் இணைந்து செயல்பட்ட காலங்கள் நெஞ்சில் நிழலாடுகின்றன. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வசனத்தில் விஜயகாந்த் கதாநாயகனான நடித்த ‘மக்கள் ஆணையிட்டால்’ என்ற படத்தில், கலைஞர் எழுதிய பாடல் காட்சியில் நானும் பங்கேற்றிருந்தது நினைவில் மலர்கிறது. அவருடனான நட்பு எந்தக் காலத்திலும், எத்தகைய அரசியல் சூழலிலும் மாறவேயில்லை. நண்பர் விஜயகாந்த் உடல்நலன் குன்றியிருந்த நிலையில், இரண்டு முறை நேரில் சென்று சந்தித்து, அவர் விரைந்து நலம் பெற விரும்பினேன். இயற்கை இரக்கமின்றி என் நண்பரின் வாழ்வை எடுத்துக் கொண்டிருக்கிறது. கேப்டன் எனத் தமிழ் மக்களால் அன்புடன் அழைக்கப்படும் அன்பு நண்பர் விஜயகாந்த் அவர்களின் மறைவு தமிழ்நாட்டிற்கும் திரையுலகிற்கும் பேரிழப்பாகும். இந்த மிகத் துயரமான சூழலில், என்னை நானே தேற்றிக் கொண்டு, கேப்டன் விஜயகாந்த்தை இழந்து தவிக்கும் சகோதரி பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கும், தேசிய முற்போக்கு திராவிடக் கழகத் தொண்டர்களுக்கும், திரையுலகத்தினருக்கும், இரசிகர்களுக்கும் என் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். திரு. விஜயகாந்த் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும்.

 

10:48 AM (IST)  •  28 Dec 2023

Vijayakanth LIVE Update: விஜயகாந்த் மறைவுக்கு அமைச்சர் காந்தி, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி மௌன அஞ்சலி!

காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக நெசவாளர் அணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவில் கைத்தறி நெசவாளர்கள் நேரடி விற்பனை மற்றும் வர்த்தக கண்காட்சியை துவக்க வைக்க வருகை தந்த  கைத்தறி மற்றும் துணை நூல் துறை அமைச்சர் காந்தி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்

10:38 AM (IST)  •  28 Dec 2023

திரையில் நல்லவர், அரசியலில் வல்லவர் விஜயகாந்த் - வைரமுத்து

எரிமலை எப்படிப் பொறுக்கும் என்ற என் பாடலுக்கு உயிர்கொடுத்த கதாநாயகன் உயிரிழந்து போனார் திரையில் நல்லவர் ; அரசியலில் வல்லவர் சினிமாவிலும் அரசியலிலும் ‘டூப்’ அறியாதவர் கலைவாழ்வு பொதுவாழ்வு கொடை மூன்றிலும் பாசாங்கு இல்லாதவர் கலைஞர் ஜெயலலிதா என இருபெரும் ஆளுமைகள் அரசியல்செய்த காலத்திலேயே அரசியலில் குதித்தவர் எதிர்க்கட்சித் தலைவர் என்ற உயரம் தொட்டவர் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாதவரை நில்லென்று சொல்லி நிறுத்திவிட்டது  காலம் வருந்துகிறேன் கண்ணீர் விடும் குடும்பத்தார்க்கும் கதறி அழும் கட்சித் தொண்டர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்

10:36 AM (IST)  •  28 Dec 2023

கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் அழியாத தடம் - ராகுல்காந்தி

தேமுதிக நிறுவனர் திரு விஜயகாந்த் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்.

சினிமா மற்றும் அரசியலுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் அழியாத தடம் பதித்துள்ளது. இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

10:34 AM (IST)  •  28 Dec 2023

அஞ்சாத துணிச்சல் அவரது அடையாளம் - கமல்ஹாசன் இரங்கல்

மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமலஹாசன் தனது எக்ஸ் தளத்தில், "எனது அன்பிற்கினிய சகோதரர், தேசிய முற்போக்குத் திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர், தமிழ் சினிமாவின் தனித்துவம் மிக்க நடிகர், கேப்டன் என்று அனைவராலும் அன்பு பாராட்டப்பட்ட விஜயகாந்த் அவர்களின் மறைவுச் செய்தி மிகுந்த துயரத்தைத் தருகிறது. தன் ஒவ்வொரு செயலிலும் மனிதநேயத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்தவர். தமிழ்நாட்டு அரசியல் வெளியில் புதுத்திசையிலான நம்பிக்கையை உருவாக்கியவர். எளியோருக்கு நீளும் உதவிக்கரம் கொண்டிருந்தவர். எதற்கும் அஞ்சாத துணிச்சல் அவரது அடையாளமாக இருந்தது. சினிமா, அரசியல் இரண்டு தளங்களிலுமே தடம் பதித்த புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் நம் நினைவுகளில் என்றென்றும் நிலைத்திருப்பார். அவரது பிரிவால் வருந்தும் குடும்பத்தார், தொண்டர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் என் உளப்பூர்வமான ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

10:29 AM (IST)  •  28 Dec 2023

விஜயகாந்த் மறைவு ஈட்டி போல் தாக்கியது: டி.ராஜேந்தர்

அருமை நண்பர் விஜயகாந்த் இயற்கை எய்தார் என்ற செய்தி இதயத்தை ஈட்டி போல் தாக்கியது. திரையுலகில் ஒரு நடிகராய் உதயமாகி புரட்சி கலைஞராய் பெயரெடுத்தவர் விஜயகாந்த். 

10:21 AM (IST)  •  28 Dec 2023

Vijayakanth Death LIVE: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவிற்கு வைகோ இரங்கல்..!

கேப்டன் விஜயகாந்த் மறைவு தமிழ்நாட்டிற்கு பேரிழப்பு!

வைகோ இரங்கல்:

தேமுதிக தலைவர் கேப்டன்  விஜயகாந்த் அவர்கள் மறைவு மிகுந்த துயரத்தை தருகிறது. நான்மாட கூடல் நகரில் வளர்ந்து தனது சொந்த முயற்சியாலும் உழைப்பாலும் திரை உலகில் உச்சத்தைத் தொட்ட உன்னத கலைஞர் அவர்.

ஏழை எளிய மக்களுக்கு உதவும் கொடை உள்ளம் படைத்தவர். தமிழ் மொழி, இன உணர்வுடன்  ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு என்றும் ஆதரவு வழங்கினார். தேமுதிக கட்சியைத் தொடங்கி அதனை  தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சியாக வளர்த்து எடுத்தார்.

விஜயகாந்த்துக்கு போனில் பிறந்தநாள் வாழ்த்து சொன்ன வைகோ | Vaiko wishes  Vijayakanth - Tamil Oneindia

சகோதரர் விஜயகாந்த் அவர்கள் மறைவு தமிழ்நாட்டின் பொதுவாழ்விற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும்,தேமுதிக தொண்டர்களுக்கும் ,அவரை நேசிக்கும் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

10:19 AM (IST)  •  28 Dec 2023

Vijayakanth Death LIVE: கட்சி அலுவலகம் கொண்டு செல்லப்படும் விஜயகாந்த் உடல்..!

விஜயகாந்த் உடல் அஞ்சலி செலுத்துவதற்காக கட்சி அலுவலகம் கொண்டு செல்லப்பட இருக்கிறது. 

10:19 AM (IST)  •  28 Dec 2023

Vijayakanth Death LIVE: கட்சி அலுவலகம் கொண்டு செல்லப்படும் விஜயகாந்த் உடல்..!

விஜயகாந்த் உடல் அஞ்சலி செலுத்துவதற்காக கட்சி அலுவலகம் கொண்டு செல்லப்பட இருக்கிறது. 

10:16 AM (IST)  •  28 Dec 2023

Vijayakanth Death LIVE: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி..!

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். 

விஜயகாந்துடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு | Tamil News CM MK Stalin  meet vijayakanth

10:14 AM (IST)  •  28 Dec 2023

Vijayakanth Death LIVE: கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு முழு அரசு மரியாதை - முதலமைசச்ர் ஸ்டாலின் இரங்கல்

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். கேப்டன் விஜயகாந்த மறைவு செய்தி வேதனையும் அதிர்ச்சியும் அளிக்கிறது. மேலும் அவரது உடலுக்கு முழு அரசு மரியாதை செய்யப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

10:12 AM (IST)  •  28 Dec 2023

Vijayakanth Death LIVE: விஜயகாந்தின் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்..!

நடிகர் விஜயகாந்தின் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், “விஜயகாந்த் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. தமிழ் திரையுலகின் ஜாம்பவான் விஜயகாந்தின் நடிப்பு பலரின் இதயங்களை கவர்ந்தது. பொது சேவையில் ஈடுபாடு கொண்டிருந்த விஜயகாந்தின் மறைவு வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது. விஜயகாந்துடனான எனது நினைவுகளை அன்புடன் நினைவூ கூர்கிறேன்.” என குறிப்பிட்டுள்ளார். 

10:00 AM (IST)  •  28 Dec 2023

Vijayakanth Death LIVE: மாணிக்கத்தை இழந்துவிட்டோம் - நடிகை குஷ்பு

மாணிக்கத்தை, தங்கமான உள்ளம் கொண்ட மனிதனை இழந்துவிட்டோம் - நடிகை குஷ்பு

Enkitta Mothathe Part-5 Tamil Movie | Vijayakanth, Shobhana,Kushboo |  R.Sundarrajan | Ilaiyaraaja - YouTube

09:54 AM (IST)  •  28 Dec 2023

Vijayakanth Death LIVE: சமக தலைவர் சரத்குமார் இரங்கல்..!

அன்பு நண்பர் புரட்சிக்கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நம்முடன் இல்லை என்ற செய்தி கேட்டு பேரதிர்ச்சிக்குள்ளானேன். என்றாவது ஒருநாள் குணமடைந்து, என்றும் போல் கேப்டன் மீண்டும் சுறுசுறுப்புடன் இயங்குவார் என எதிர்பார்த்த என்னை போல், அவரை நேசித்த லட்சோபலட்ச மக்களை இச்செய்தி மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டது. அவரை இழந்து மீளாத்துயரில் வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும், தமிழ்த் திரைக்கலைஞர்களுக்கும், ரசிகர்களுக்கும், தேமுதிக கட்சியினருக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

09:52 AM (IST)  •  28 Dec 2023

Vijayakanth Death LIVE: விஜயகாந்திற்கு பாஜக தலைவர் அண்ணாமலை இரங்கல்..!

தேமுதிக தலைவர், மதிப்பிற்குரிய கேப்டன் விஜயகாந்த் அவர்கள் காலமானார் என்ற செய்தி, மிகுந்த வருத்தமும் மனவேதனையும் அளிக்கிறது. தென்தமிழகத்தில் பிறந்து, தென்னிந்தியத் திரையுலகையே கட்டியாண்ட பெருமைக்குரியவர். ஏழை எளிய தொழிலாளர்களின் பசிப்பிணி போக்கிய மாமனிதர். உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் பேரன்பைப் பெற்ற அற்புதமான கலைஞர். தன்னலமற்ற தலைவர். தமிழ்மக்கள் நலன் ஒன்றையே நோக்கமாகக் கொண்டவர். கொடுத்துச் சிவந்த கரங்களுக்குச் சொந்தக்காரர்.

சொல்லொன்று செயலொன்று என்றில்லாது, சொன்ன சொல் வழி நின்றவர். பாசாங்கில்லாத மனிதர். பாரதப் பிரதமர் பேரன்பைப் பெற்றவர். கேப்டன் விஜயகாந்த் அவர்களது மறைவு, தமிழகத்திற்கும், தமிழ் மக்களுக்கும் பேரிழப்பு. அவரது இன்னுயிர் நம்மை விட்டுப் பிரிந்தாலும், அவரது புகழ் என்றும் அவர் பெயரை நிலைத்திருக்கச் செய்யும். கேப்டன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தேமுதிக தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும், தமிழக பாஜக சார்பில் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருப்பாதங்களை அடைய, இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.

09:51 AM (IST)  •  28 Dec 2023

Vijayakanth Death LIVE: விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்துகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு இன்னும் சற்றுநேரத்தில் அஞ்சலி செலுத்த உள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 

09:55 AM (IST)  •  28 Dec 2023

Vijayakanth Death LIVE: விஜயகாந்த் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல்..!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், “ தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், அன்பு சகோதரருமான திரு.விஜயகாந்த அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவரை இழந்துவாடும் அன்னாரது மனைவியும் தேமுதிக பொதுச்செயலாளருமான மரியாதைக்குரிய திருமதி பிரேமலதா விஜயகாந்த் , குடும்பத்தினர் மற்றும் அவரது தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். பொதுவாழ்விலும், கலைத்துறையிலும் செயற்கரிய பல செயல்கள் செய்துள்ள, மக்களால் அன்போடு கேப்டன் என்று அழைக்கப்படும் திரு.விஜயகாந்த் அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.” என தெரிவித்துள்ளார். 

09:46 AM (IST)  •  28 Dec 2023

Vijayakanth Death LIVE: நடிகர் விஜயகாந்த் மறைவு.. தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் காலை காட்சி ரத்து!

நடிகர் விஜயகாந்த் மறைவையொட்டி தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் காலை காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. 

09:45 AM (IST)  •  28 Dec 2023

Vijayakanth Death LIVE: சாலிகிராமம் கொண்டு வரப்பட்ட விஜயகாந்தின் உடல்..!

விஜயகாந்தின் உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. 

09:43 AM (IST)  •  28 Dec 2023

Vijayakanth Death LIVE: விஜயகாந்த் மறைவுக்கு நடிகர் விக்ரம் இரங்கல்..!

மிகவும் அன்பான, அக்கறையுள்ள மனிதர்களில் ஒருவர் மறைந்தது வருத்தம் அளிக்கிறது என நடிகர் விக்ரம் இரங்கல் தெரிவித்துள்ளார். 

09:27 AM (IST)  •  28 Dec 2023

Vijayakanth Death LIVE: விஜயகாந்த் மறைவு பேரிழப்பு - திருமாவளவன்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவு தமிழ் சினிமாவுக்கு தமிழ்நாடு அரசியலுக்கும் பேரிழப்பு என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.  

09:25 AM (IST)  •  28 Dec 2023

Vijayakanth Death LIVE: விஜயகாந்த் மறைவுக்கு தமிழிசை இரங்கல்..!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர்,சகோதரர் கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்கள் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் மனவேதனை அடைந்தேன். நல்ல திரைப்படக்கலைஞர்.... நல்ல அரசியல் தலைவர்.... நல்ல மனிதர்.... நல்ல சகோதரர்.... ஒட்டுமொத்தமாக ஒரு நல்லவரை நாம் இழந்து இருக்கிறோம். சகோதரர் திரு.விஜயகாந்த் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும்,தொண்டர்களுக்கும்,நண்பர்களுக்கும்,ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும்,ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.” என பதிவிட்டிருந்தார். 

09:21 AM (IST)  •  28 Dec 2023

Vijayakanth Death LIVE: ஆண்டாள் அழகர் கல்லூரியில் விஜயகாந்தின் உடல் அடக்கமா..?

செங்கல்பட்டில் உள்ள ஆண்டாள் அழகர் கல்லூரியில் அருகே உள்ள விஜயகாந்த் க்கு சொந்தமான இடத்தில் அவரது உடலை அடக்கம் செய்ய வாய்ப்பு என தகவல் வெளியாகி வருகிறது. 

இது தொடர்பாக கட்சி வட்டாரங்கள் மற்றும் காவல்துறை வட்டாரங்களிடம் விசாரித்த பொழுது, அதற்கான எந்த அறிவிப்பும் இதுவரை வரவில்லை. தகவலை இதுவரை யாரும் உறுதிப்படுத்தவில்லை வதந்தி பரவி வருவதாக தெரிவித்துள்ளனர்.

09:19 AM (IST)  •  28 Dec 2023

Vijayakanth Death LIVE: மருத்துவ நிலை அறிக்கையில் சொன்னது என்ன..? 

மியாட் மருத்துவனை சார்பில் வெளியிட்ட அறிக்கையில், “கேப்டன் விஜயகாந்த் நுரையீரல் அழற்சி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் ஆதரவுடன் சிகிச்சை பெற்றிருந்தார். மருத்துவ பணியாளர்களின் கடின முயற்சி இருந்தபோதிலும் இன்று காலை 28 டிசம்பர் 2023 காலமானார்.” என குறிப்பிடப்பட்டு இருந்தது.