நாளை குரு வக்கிர நிவர்த்தி அடைய உள்ளார். அதன் பலன்களை கீழே விரிவாக காணலாம். குரு வக்கிர நிவர்த்தி காரணமாக மேஷம் முதல் சிம்மம் ராசியினர் வரை என்னென்ன பலன்கள் என்பதை கீழே காணலாம்.
மேஷ ராசி :
அன்பார்ந்த மேஷ ராசி வாசகர்களே குருபகவான் உங்கள் ராசியிலிருந்து வக்கிரம் பெற்று பனிரெண்டாம் வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார் தற்போது டிசம்பர் 30ம் தேதி (நாளை) வக்கிர நிவர்த்தி அடைந்து குருவானவர் உங்கள் ராசியில் நேர்கதியில் பயணிக்கப் போகிறார். குரு பகவான் உங்களுடைய ராசிக்கு 12 ஆம் அதிபதி மற்றும் ஒன்பதாம் அதிபதி ஜென்ம ராமர் வனத்திலே சீதையை சிறை வைத்ததும் என்ற பாடலுக்கு ஏற்ப உங்களுடைய ராசியில் குரு பகவான் சஞ்சாரம் செய்யும் காலத்தில் புதுப்பொலிவு புத்துணர்வு கூடும்.
ஒன்பதாம் அதிபதி ராசியில் அமரும்போது உங்களுக்கு நீண்ட நாட்களாக நடக்க வேண்டும் என்று இருந்த அனைத்தும் கைக்கு வந்து சேரும். குருவானவர் விரையாதிபதி என்பதால் லக்னத்தில் அமரும் குரு பகவான் சுப விரயங்களை உங்களுக்கு ஏற்படுத்துவார்.
எது போன்ற விடயங்களாக இருக்கலாம் என்றால், ஒன்பதாம் அதிபதி பாக்யாதிபதி பாக்கிய ஸ்தானத்திற்கு அதிபதி வீட்டில் சுபகாரியங்களை நிகழ்த்தி அதன் மூலமாக விரயங்களை ஏற்படுத்துவார். சுப காரியங்கள் என்றால் மேஷ ராசியின் மகன் மகளுக்கு திருமண வரங்கள் அமைந்து திருமணம் கைகூடுதல், புதுமனை புகு விழா, வீட்டில் புத்திர பாக்கியம் குடும்பத்தாருக்கு கிடைத்து அதன் மூலம் மகிழ்ச்சி, ராசி இல்லாமல் இருந்த குரு உங்களின் ஏழாம் வீட்டை பார்ப்பதால் திருமண பேச்சு வார்த்தைகள் சமூகமாக முடியும். கணவன் மனைவியிடையே அவ்வப்போது சிறு சிறு சண்டை சச்சரவுகள் வந்தாலும் அது பெரிய அளவில் உங்களை பாதிக்காது. பிரச்சனை ஆரம்ப காலத்திலேயே அதை முடித்துவிட்டு பெரிதாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பன்னிரண்டாம் வீட்டில் இதுவரை குருபகவான் சஞ்சாரம் செய்து உங்களுக்கு பண விரயத்தையும் வீண் அலைச்சலையும் பட்டம் பதவி இழத்தல் போன்ற அசுபகாரியங்கள் நிகழ்ந்திருக்கலாம். வீட்டை கட்ட ஆரம்பித்து அது பாதியிலேயே நின்று போய் இருக்கலாம் இதுபோன்ற விஷயங்களில் இருந்து குரு பகவான் வக்கிர நிவர்த்தி அடைந்து தற்போது உங்கள் ராசிக்கு மிகப்பெரிய யோகங்களை கொண்டு வரப் போகிறார்.
ரிஷப ராசி :
அன்பார்ந்த ரிஷப ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு அஷ்டமாதிபதி மற்றும் லாபாதிபதி லாப ஸ்தானத்தில் வக்கிரகதியில் நின்று இருந்தார். எவ்வளவு பெரிய பிரச்சனைகள் வந்தாலும் அதை சமாளிக்க கூடிய தன்மை உங்களுக்கு உண்டு. நீங்கள் எதிர்கொண்ட பிரச்சனைகளை சொல்லி மாளாது. இருப்பினும் ஒரு பிரச்சனையை சமாளிப்பதற்காக வேறு ஒரு பிரச்சனையில் தலையிட்டு உங்களுடைய பெயரை எடுத்துக் கொள்ளாமல் பார்த்துக் கொண்டிருந்திருப்பீர்கள். குருபகவான் வக்கிரம் பெற்று லாப ஸ்தானத்தில் சேர்வதால் திடீரென்று யோகம் அடிக்கும். தொழில் ஸ்தானத்தில் நஷ்டம் ஏற்படுவது போல உங்களுக்கு தோன்றினாலும் அது நஷ்டமாக இல்லாமல் வரக்கூடிய காலங்களில் லாபமாக மாறவிருக்கிறது. வருகின்ற டிசம்பர் மாதம் 30ஆம் தேதி குரு பகவான் வக்கிர நிவர்த்தி அடைந்து உங்களுடைய ராசிக்கு 12-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யப் போகிறார்.
கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்ற விதியின் அடிப்படையில் எட்டாம் பாவ அதிபதி 12 பன்னிரண்டாம் பாவத்தில் அமர்ந்து உங்களுக்கு சுப விரயங்களைத் தான் தருவாரே தவிர அசுப விரயங்களை தர மாட்டார். குறிப்பாக லாவாதிபதி 12ஆம் வீட்டில் அமரும் போது நீண்ட தூர பிரயாணம் வெளி மாநிலம் வெளிநாடு போன்ற மிகப்பெரிய தொழில் சார்ந்த வெற்றிகளை கொண்டு வந்து தரப் போகிறார். ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மூன்று மாதத்தில் ரிஷப ராசி அன்பர்களே கொஞ்சம் கவனமாக இருங்கள். எந்த ஒரு புது காரியங்களை தொடங்க வேண்டாம். யாரை நம்பி ஜாமீன் கையெழுத்து போடுவது புது வீட்டிற்கு குடி போவது புதிய தொழில் தொடங்குவது போன்ற எந்த ஒரு சுப காரியத்தையும் 2024 வருடத்தின் மூன்று மாதத்தில் நீங்கள் செய்யாமல் இருப்பது நல்லது. உங்களுக்கு கடினமாக நிகழ்வுகள் நடந்தால் நீங்கள் நீண்ட தூர பிரயாணம் மேற்கொள்வது நல்லது. அனைத்தும் வெற்றியாகட்டும் வாழ்த்துக்கள் வணக்கம்.
மிதுன ராசி :
அன்பார்ந்த மிதுன ராசி வாசகர்களே டிசம்பர் 30ஆம் தேதி குரு பகவான் உங்களுடைய லாப ஸ்தானத்தில் வக்கிரம் பெற்று இருந்து தற்போது வக்கிர நிவர்த்தி அடையவிருக்கிறார். குரு பகவான் உங்களுடைய ராசிக்கு ஏழாம் அதிபதி மற்றும் தொழில் ஸ்தான அதிபதி அப்படி என்றால் திருமண காரியங்கள் திருமணமானவர்களுக்கு கணவன் மூலமாகவோ அல்லது மனைவி மூலமாக சிறு சிறு சிக்கல்கள், தொழிலில் பெரிய லாபமின்மை அல்லது தொழில் வேறு ஏதேனும் பார்க்கலாமா? வியாபாரம் சொந்தமாக செய்யலாமா? வருமானத்திற்கு எது போன்ற வழிவகைகளை செய்யலாம் என்று தினம்தோறும் சிந்தித்துக் கொண்டே இருப்பீர்கள்.
தற்போது குரு பகவான் அடைந்திருக்கும் வக்கிர நிவர்த்தி உங்களுடைய ராசிக்கு லாப ஸ்தானம் என்பதால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும் பல வருடங்கள் ஆகிவிட்டது எனக்கு திருமணமே நடக்கவில்லை என்று இருந்த திருமண வயதை உடைய ஆண், பெண் இருவருக்கும் இது ஒரு யோகமான காலகட்டம். உங்களுடைய ராசிக்கு பத்தாம் அதிபதி பதினொன்றாம் வீட்டில் அமர்ந்ததால் வியாபாரத்தில் தொழிலில் லாப மேன்மை அடையப் போகிறீர்கள். வேலை இடத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். வீட்டிற்கு ஒரு வருமானம் போதவில்லை, இரண்டு மூன்று தொழில்கள் செய்து அதன் மூலமாக வருமானத்தை ஈட்டலாம் என்று நீங்கள் எண்ணி இருந்தீர்கள் அல்லவா? அதற்கான நேரம் வந்துவிட்டது. 12 வருடத்திற்கு ஒருமுறை வரக்கூடிய லாப ஸ்தான குருபகவான் தற்போது 2024 வருடத்தின் முதல் மூன்று மாதத்தில் உங்களுடைய லாப வீட்டில் அமர்ந்து எதிலும் வெற்றி தேடி கொடுக்கப் போகிறார்.
சிம்ம ராசி :
சிம்ம ராசி வாசகர்களே டிசம்பர் 30ம் தேதி உங்களுடைய ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் வக்கிரம் பெற்று குரு பகவான் உங்களுடைய எட்டாம் வீட்டை நோக்கி பயணிக்கும் காலத்தில் சிறு, சிறு மனக்கசப்புகளையும் பிரச்சனைகளையும் அவ்வப்போது தடுமாற்றங்களையும் சந்தித்து வந்திருப்பீர்கள். இதுநாள் வரை நீங்கள் பட்டு வந்த அவமானங்களுக்கு விடிவு காலம் பிறந்து விட்டது.
குருபகவான் உங்களுடைய ராசிக்கு பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் அமர்ந்து உங்களுக்கு கிடைக்கக்கூடிய அனைத்து விதமான நற்பலன்களையும் வாரி வழங்கப் போகிறார். நீங்கள் எந்த விஷயத்திற்காக காத்திருந்தீர்களோ அந்த விஷயம் நடைபெறப்போகிறது. ஒருவேளை நீங்கள் திருமணத்திற்காக காத்திருந்தால் இதோ வந்து விட்டது திருமண காலம் குழந்தை பேருக்கு தடையே இல்லாத காலம் இது. செல்வ செழிப்போடு வாழக்கூடிய பிரமாதமான குரு வக்ர நிவர்த்தி உங்களுக்கு நடைபெறுகிறது. அனைத்திலும் வெற்றி வாழ்த்துக்கள் வணக்கம் .