ஈகோ மோதலில் அடித்துக்கொள்ளும் ஹரிஷ் கல்யாண்-எம்.எஸ் பாஸ்கர்.. பார்க்கிங் பட விமர்சனம் இதோ!
ஹரிஷ் கல்யாண், எம்.எஸ்.பாஸ்கர், இந்துஜா ரவிச்சந்திரன், இளவரசு உள்ளிட்டோர் நடிப்பில் ராம்குமார் பாலாகிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள பார்க்கிங் படம், இன்று(டிசம்பர் 1, 2023) வெளியாகியுள்ளது. இப்படத்தின் விரிவான விமர்சனத்தை இங்கு காணலாம். டைட்டிலுக்கு ஏற்றவாரு, பார்க்கிங் எனும் சிறு விஷயம் எப்படி பூதாகரமாக வெடிக்கும் என்பதே படத்தின் ஒரு வரிக்கதை. இதில் ஈஸ்வர் (ஹரிஷ் கல்யாண்), இளம்பரிதி (எம்.எஸ்.பாஸ்கர்) ஆகிய இருவரும் ஒரே காம்பவுண்டில் இருக்கும் வாடகை வீட்டில் இருக்கின்றனர். மேலும் படிக்க
விஜய் முதல் சுஷாந்த் வரை எல்லாருக்கும் அன்பான பாட்டி.. பிரபல மலையாள நடிகை உயிரிழப்பு.. ரசிகர்கள் சோகம்!
பிரபல மூத்த மலையாள நடிகை சுப்புலட்சுமி உடல்நலக்குறைவால் நேற்று (நவ.30) உயிரிழந்தார். அவருக்கு வயது 87. தமிழ் சினிமாவில் பீஸ்ட், விண்ணைத் தாண்டி வருவாயா உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர் மலையாள நடிகை சுப்புலட்சுமி ( R Subbalakshmi). கேரள மாநிலம், திரிசூரில் 1936ஆம் ஆண்டு பிறந்தவரான சுப்புலட்சுமி பிரபல இசைக்கலைஞர் மற்றும் நாட்டிய ஆசிரியராகவும் பணிபுரிந்துள்ளார். கலைத்துறையில் முக்கியப் பங்காற்றி வந்த சுப்புலட்சுமி, ஒரு டப்பிங் கலைஞராக சினிமா துறையில் தன் பயணத்தினைத் தொடங்கியுள்ளார். மேலும் படிக்க
சாதிக்கும் துடிப்புடன் கரண்டி பிடித்த நயன்.. அறுசுவை விருந்து படைத்தாரா.. அன்னபூரணி விமர்சனம்!
பிறந்த குழந்தை முதலே நுண்ணிய சுவையையும் தனித்து அறியும் Enhanced Taste buds கொண்டவர், உணவின் மேல் காதல் பொங்க வளரும் குழந்தை அன்னபூரணி. ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சமையல் சேவை புரியும் ‘ஆச்சார’ பிராமண குடும்பத்தில் பிறந்தவரான அன்னபூரணிக்கு நாடு போற்றும் செஃப் ஆக வேண்டும் என்பது கனவு. மீன் வாசம்கூட பிடிக்க விடாமல் திருப்பி நடத்தும் குடும்பத்தில் பிறந்த அன்னபூரணி, செஃப் ஆக குடும்பப் பின்னணியும் அதன் கலாச்சாரங்களும் தடையாக இருக்கிறது. மேலும் படிக்க
”படைப்பாளிகளின் பாவம் சுமக்காதீர்கள்” ஞானவேல் ராஜாவை கடுமையாக கண்டித்த இயக்குநர் சேரன்!
தமிழ் சினிமாவில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக ’பருத்திவீரன்’ படம் தொடர்பான பல கருத்துகள், விவாதங்கள், அறிக்கைகள் என அடுத்தடுத்து சில நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. 16 ஆண்டுகளுக்கு முன் வெளியான பருத்திவீரன் திரைப்படம் தொடர்பாக அந்த படத்தின் இயக்குநர் அமீரும், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். ஒருபடி மேலே போன தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தனியார் யூடியூப் சேனல் ஒன்றில், அமீரை திருடன் என்றும், வேலை தெரியாதவர், என் காசில் தொழிலை கற்றுகொண்டார் என தரக்குறைவாக விமர்சிக்க, அது மிகப்பெரிய அளவில் சர்ச்சையானது. மேலும் படிக்க
'லவ்வர்’.. மணிகண்டன் நடிப்பில் தயாராகி வரும் பக்கா ரொமான்ஸ் சினிமா.. லைக்ஸ் அள்ளும் போஸ்டர்!
தமிழ் சினிமாவில் சமகாலத்தில் உள்ள ஆகச் சிறந்த கலைஞர்களை வரிசைப்படுத்தினால் அதில் நடிகர், இயக்குநர், வசன கர்த்தா, திரைக்கதை ஆசிரியர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என்ற அவதாரங்களை எடுத்து வலம் வந்து கொண்டு உள்ள இளம் கலைஞர் மணிகண்டனுக்கு எப்போதும் இடம் உண்டு. மணிகண்டன் ஒரு படத்தில் நடிக்க அல்லது பணிபுரிய ஒத்துக் கொள்கின்றார் என்றால் அந்தப் படம் நிச்சயம் தமிழ் சினிமாவில் பேசப்படும் படமாக இருக்கும். மேலும் படிக்க
ஒற்றை ஆளாக படத்தை தூக்கி நிறுத்தும் ரன்பீர்... ராஷ்மிகா - ரன்பீர் காம்போவில் அனிமல் எப்படி இருக்கு?
ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி தியோல் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள அனிமல் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. அமித் ராய் ஒளிப்பதிவு செய்து அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இப்படத்தை இயக்கியுள்ளார். டி சீரீஸ் ஃபிலிம்ஸ், பத்ரகாலி பிக்சர்ஸ் மற்றும் இனி ஒன் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை இணைந்து தயாரித்துள்ளது. அனிமல் திரைப்படத்தின் முழு விமர்சனத்தை இங்கு பார்க்கலாம். மேலும் படிக்க